அனல் பறக்கும் நடன யுத்தத்திற்கு தயாராகும் மேடை.. இந்த வாரம் DJD-ல் காத்திருக்கும் தரமான ட்ரீட்
சென்னை: ZEE தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பக்தி ரவுண்டு நடைபெற இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் பக்தி பாடல்களுக்கு டான்ஸ் ஆடி பலரையும் மிரட்டி இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே விஜய் மற்றும் மணிமேகலை ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்க பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்டில் நடன கலைஞர்கள் தங்களது நடன திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் டான்ஸ் வித் ஸ்டார்ஸ் என்ற ரவுண்ட் நடைபெற்றது தொடர்ந்து இந்த வாரம் பக்தி பரவச சுற்று நடைபெற உள்ளது.

பக்தி ரவுண்டு
நடனம் மட்டுமின்றி கடவுள்களின் வேடங்களிலும் போட்டியாளர்கள் பங்கேற்று நடன மேடையை பக்தி பரவசமாக்க உள்ளனர். இதனால் இந்த வார டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெடிஷனல் உடை
அதேபோல இந்த வார நிகழ்ச்சிக்காக நடிகை சினேகா மற்றும் வரலட்சுமி இருவரும் ட்ரெடிஷனல் உடையில் வந்திருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து மணிமேகலையும் ட்ரடிஷனல் உடையில் வந்திருக்கிறார். அவர் அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ப்ரோமோக்கள்
பக்தி பாடல்களுக்கு அந்தரத்தில் தொங்கியும் அந்த பக்கம் இந்த பக்கம் பறந்தும் போட்டியாளர்கள் போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மெய் மறந்து இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த வார எபிசோடின் ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
பஞ்சமியின் டான்ஸ்
அதுபோல இதுவரைக்கும் குத்து டான்ஸராக பார்த்த பஞ்சமி அரண்மனை திரைப்படத்தில் இடம்பெற்ற உடுக்கை பிறந்ததம்மா என்ற பாடலுக்கு செம ஆட்டம் போட்டிருக்கிறார். அவரோடு ஜோடியாக டான்ஸ் ஆடும் கதிரும் கையில் விளக்குகளை ஏந்தியும், தீ பந்தத்தை சுற்றியும் மிரட்ட வைக்கும் டான்ஸ் ஆடி இருக்கிறார். அதை பார்த்து நடுவர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.
மிரட்டும் வேஷம்
அதுபோல நரசிம்மர் வேஷம் போட்ட ஒரு போட்டியாளர் அங்கிருக்கும் போட்டியாளரை பயமுறுத்தி இருக்கிறார். அடுத்ததாக கருப்பசாமி வேடம் போட்ட போட்டியாளர்களின் நடனமும் இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications