Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டான்ஸ் ஜோடி டான்ஸில் வெற்றி பெற்ற நிதின்- டித்யா.. 2வது, 3வது யார் தெரியுமா? பரிசு இவ்வளவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3" நிகழ்ச்சி சமீபத்தில் பிரம்மாண்டமாக நிறைவு பெற்றது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் புதியது புதியதாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். திறமை இருக்கும் சாமானியரும் சாதிக்க வேண்டும் என்று ஜீ தமிழ் சேனல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியும் ஒன்று.

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3" நிகழ்ச்சியில் நடனக் கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் ஜோடியாக இணைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இறுதிப் போட்டியில் ஐந்து ஜோடிகள் பங்கேற்று அசத்தலான நடனங்களை வெளிப்படுத்தினர். பார்வையாளர்கள் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

Zee Tamil Dance Jodi Dance

பைனல் போட்டியாளர்கள்

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோட சீசன் 3 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் இப்போது இறுதி கட்டத்திற்கு 5 போட்டியாளர்கள் தேர்வாகி இருக்கின்றனர். அதில் தில்லை- ப்ரீத்தா, நிதின்-தித்யா, சபரீஷ்- ஜனுஷிகா, பிரஜனா - கங்கனா, திலீப்- மெர்சீனா போன்ற ஐந்து ஜோடிகள் தான் இறுதி கட்டத்திற்கு தேர்வாகி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

நடுவர்கள்

நடுவர்களாக பாபா பாஸ்கர், சினேகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் தங்கள் கருத்துகளால் போட்டியாளர்களை ஊக்குவித்தனர். விஜய் ஆண்டனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியாளர்களைப் பாராட்டினார். ஆர்.ஜே. விஜய் மற்றும் மணிமேகலை ஆகியோர் நகைச்சுவையான பேச்சால் நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.

இந்த சீசனில் போட்டியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பயணங்கள் மற்றும் அவர்கள் சந்தித்த சவால்கள் பற்றிய கதைகள் இடம்பெற்றது நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்கியது. நிதின் மற்றும் டித்யா ஆகியோர் இந்த சீசனின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தில்லை மற்றும் ப்ரீத்தா முதல் ரன்னர் அப்பாகவும், பிரகனா மற்றும் காகனா ஆகியோர் இரண்டாவது ரன்னர் அப்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Zee Tamil Dance Jodi Dance

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோட் டைட்டில் வின்னர்

வெற்றி பெற்ற நிதின் மற்றும் டித்யா கூறுகையில், "டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி எங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் எங்களுக்கு ஒரு புதிய சவாலாக இருந்தது. இந்த அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றனர்.

புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி, மனதை தொடும் கதைகளை சொல்லும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, தமிழ் பொழுதுபோக்கு துறையில் தொடர்ந்து தரமான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அடுத்த சீசனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Zee Tamil Dance Jodi Dance

பஞ்சமிக்கு கிடைத்த உதவி

அதுபோல ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து பலருடைய கவனத்தை ஈர்த்த பஞ்சமிக்கும் கிராண்ட் பினாலே மேடையில் பல உதவிகள் கிடைத்திருக்கிறது. இவருக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு சமமான பரிசுகள் கிடைத்திருக்கிறது. அதாவது நடிகை சினேகா பஞ்சமியின் மகன்களுக்கு சீர்வரிசை கொடுத்திருக்கிறார். அதேபோல நடுவராக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் பஞ்சமிக்கி சொத்து எழுதி கொடுத்து இருக்கிறார். அதுபோல ஜீ தமிழில் பஞ்சமிக்கு சீரியலில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படியாக கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இப்போது தொலைக்காட்சியில் பலரையும் ஃபீல் பண்ண வைத்துக் கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+