DJD ரிலோடட் 3: 12 சாமானிய போட்டியாளர்களுடன் ஜோடி சேரப்போகும் 12 பிரபலங்கள்.. லீக்கான லிஸ்ட்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன. தற்போது ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.
மிகப்பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே விஜய் மற்றும் வி.ஜே மணிமேகலை ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்க பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

மெகா ஆடிஷன் முடிவில் மொத்தம் 12 சாமானிய போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்களுடன் இணைந்து நடனமாட போகும் 12 சின்னத்திரை பிரபலங்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.
அதுகுறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
1. திலிப் - மெர்சினா
2. தில்லை நடராஜன் - மான்யா
3. ஜனுஷ்கா - சபரீஷ்
4. அருண்குமார் - கெமி
5. மோகன் - ஸ்ரீயா சுரேந்தர்
6. பஞ்சமி - கதிர்
7. பிரகாஷ் - ரவீனா
8. ஆல்வின் - பர்வீன்
9. பிரஜ்னா ரவி - காகனா
10. அதிதி - சுகேஷ்
11. கிரித்திகா - தீபக்
12. நிதின் - தித்யா பாண்டே

இந்த வாரம் முதல் 12 ஜோடிகளுக்கான நடனப்போட்டி தொடங்குகிறது. எனவே அடுத்தடுத்த வாரங்களில் நிகழ்ச்சி மேலும் பரபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல தற்போது வெளியான ப்ரோமோவில் பஞ்சமி மற்றும் நடிகர் கதிர் இருவரும் அசத்தலாக டான்ஸ் பர்பாமன்ஸ் செய்திருக்கிறார்கள்.

அப்போது டான்ஸ் முடிந்ததும் பஞ்சமி இந்த நிகழ்ச்சிக்காக எல்லா போட்டியாளர்களுடைய வீட்டில் இருந்தும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் வந்திருக்காங்க. ஆனா எனக்கு என்று யாரும் வரல. நான் தனியா தான் இங்கே வந்தேன். என்னுடைய கணவர் குழந்தைகளை பார்த்துக் கொள்கிறார். நீ போயிட்டு வா என்று என்னை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் அவரை ரொம்ப மிஸ் பண்றேன் என்று கண்கலங்க பேசிக் கொண்டிருக்கும்போது பஞ்சமியின் கணவர் பின்னாடி வந்து நிற்கிறார்.

அப்போது நீ என்னை மிஸ் பண்னுற. ஆனால் நான் உன்னை மிஸ் பண்ணல. அதற்கு காரணம் இதுதான் என்று பஞ்சமியின் பெயரை அவருடைய நெஞ்சில் பச்சை குத்தி இருப்பதை காட்டுகிறார். பிறகு எங்க ஊரில் எல்லோரும் பொண்டாட்டியை தலையில் தூக்கி வச்சிட்டு ஆடுறான் என்று என்னை எவ்வளவோ அசிங்கப்படுத்தினாங்க, அவங்க முன்னாடி நாங்க வாழ்ந்து காட்டணும் என்று தான் நான் ஆசைப்படுகிறேன். என் பொண்டாடியின் கனவு இலட்சியம் நிறைவேறணும் அதுக்காக நான் அவளை தலையில் தூக்கி வைத்து கொஞ்சுவேன் என்று பஞ்சமியை தலையில் தூக்கி வைத்து சுற்றி இருக்கிறார்.

இந்த க்யூட்டான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சமிக்கு 25 வயதாகிறது. மூன்று குழந்தைகள் சிசேரியன் செய்து பிறந்திருக்கிறார்கள். ஆனாலும் என்னுடைய உடம்பு வலி எல்லாம் நான் நினைச்சா மட்டும் தான் எனக்கு வரும். நான் என்னுடைய கனவை நிறைவேற்ற வேண்டும் என்று வைராக்கியத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications