காசுக்காக இப்படி பண்ணலாமா? அண்ணனாக நினைத்தேனே! அந்த நடிகர் பற்றி ஜீ தமிழ் பிரபலம் எமோஷனல்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் மூன்று ஜோடிகள் எலிமினேஷனில் இருந்தனர். அதில் ராஜா வெற்றி பிரபு மற்றும் அவரோடு ஜோடியாக ஆடும் பூர்ணிமாவும் இருந்தனர். இந்த நிலையில் பூர்ணிமா யாரும் எதிர்பார்க்காத வகையில் உருக்கமான ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் அந்த பதிவில் பூர்ணிமா, "காசுக்காக என்ன வேணாலும் பண்ணலாமா...? நான் உங்களை அண்ணனா தானே நினைத்தேன்... உங்களுக்கான வாய்ப்பு வந்ததும் என்னை தெருவில் விட்டுட்டு போயிட்டீங்களே" என்று வேதனையோடு குறிப்பிட்டு இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் ஜீ தமிழில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வரிசையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியும் இடம் பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பாபா பாஸ்கர், நடிகை சங்கீதா, நடிகை சினேகா என மூன்று பேரும் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்காக மூன்று ஜோடிகள் எலிமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.
அதில் ஜான்- நிஷா, ஆனந்த்- நட்சத்திரா மற்றும் ராஜா வெற்றி பிரபு- பூர்ணிமா ஜோடிகள் இடம் பிடித்திருந்தனர். பொதுவாக டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஒரு செலிபிரிட்டி பிரபலமும் அவர்களோடு சாதாரணமான மக்களில் ஒருவரும் ஜோடியாக சேர்ந்துதான் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சின்ன திரையில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக பிரபலமடைந்த நடிகர் ராஜா வெற்றி பிரபுவோடு ஜோடியாக பூர்ணிமா என்பவர் டான்ஸ் ஆடி கொண்டிருந்தார்.
இவர்களுடைய நடனம் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக வரவேற்பு பெற்று இருக்கிறது. அதிலும் சில வாரங்களுக்கு முன்பு பூர்ணிமா மற்றும் ராஜா வெற்றி பிரபு தில்லுக்கு துட்டு என்ற எபிசோடில் காலில் கட்டையை கட்டிக்கொண்டு டான்ஸ் ஆடி பலரை கவர்ந்திருந்தனர். இப்படியான நிலையில் இந்த ஜோடியும் கடந்த வார எலிமினேஷன் லிஸ்டில் இருந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் நடிகை சங்கீதா இவர்களிடம் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவதாக கூறி இருக்கிறீர்களா? அதற்கு காரணம் என்ன என்று கேட்க அதற்கு ராஜா வெற்றி பிரபு அது பற்றி நான் கேமரா ஆஃப் ஆன பிறகு சொல்கிறேன் என்று கூறி இருக்கிறார். அதற்கு சங்கீதா மற்றும் சினேகா இருவருமே நீங்கள் இப்படி ஒரு முடிவு எடுத்தால் உங்களுக்கு பேரா இருப்பவர்களின் நிலைமையை பற்றி கொஞ்சம் யோசிச்சு பார்க்கீங்களா?
அவங்க உங்களை நம்பித்தான் இருக்கிறார்கள் என்று சொல்லி இருந்தார்கள். இப்படியான நிலையில் கடந்த வாரத்தில் ராஜா வெற்றி பிரபு மற்றும் பூர்ணிமா நிகழ்ச்சியிலிருந்து எவிட் ஆகி இருந்தனர். இந்த நிலையில் பூர்ணிமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென்று ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் ராஜா வெற்றி பிரபு பேசிய கிளிப்பிங்கை ஷேர் செய்து கேமரா ஆஃப் பண்ணனுமா...?

" காசுக்காக என்ன வேணாலும் பண்ணுவாங்க போல... எதிர்பார்க்கல ப்ரோ நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு..! நல்ல சப்போர்ட் பண்ணிட்டு வந்தீங்க... ஆனா இப்படி பாதியிலேயே விட்டுட்டு போயிட்டீங்களே ப்ரோ... உங்களோட லைப்பை பாத்துட்டு போயிட்டீங்க... ஆனா என்னோட லைஃப் இப்போ...!? என்ன நம்பியே இருக்குற என் ஃபேமிலி...!? என்னை நம்பியிருக்கிற எங்க அம்மா...!? என்ன நம்பியே இருக்குற என் பசங்க....!?
ஹாய் பிரண்ட்ஸ் அவர் சொல்ற ரீசன்ன பாருங்க வாய்ஸ் கிளியரா கேளுங்க... என்று குறிப்பிட்டு இருக்கும் பூர்ணிமா அதைத்தொடர்ந்து, உங்களை அண்ணன்னு உரிமையா பாசமா கூப்பிட்டேன் ப்ரோ.... ஆனா நீங்க.... என்று அழுகிற மாதிரி இரண்டு எமோஜி வைத்து போஸ்ட் போட்டு இருக்கிறார். தற்போது இந்த போஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications