சீரியலில் அறிமுகமாகும் பாபா பாஸ்கர்.. முருங்கைக்காய் சூப்பிற்கு இப்படி ஒரு விளக்கமா? அசத்தல் தான்!
ஜீ தமிழில் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் பாபா பாஸ்கர் சிறப்பு விருந்தினராக அறிமுகம் ஆகிறார்.
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் அறிமுகம் ஆகிறார்.
அந்த சீரியலில் சித்தார்த் மற்றும் பொம்மியின் திருமணத்திற்கு பாபா பாஸ்கர் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார்.
முருங்கைக்காய் சூப் பற்றி சித்தார்த்துக்கு பாபா பாஸ்கர் கொடுத்த அட்வைஸ் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

மூன்றாவது முறை திருமணம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் இதுவரைக்கும் ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், நேற்றில் இருந்து அதே நேரத்தில் சீதாராமன் சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் தற்போது 10:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது சித்தார்த் மற்றும் பொம்மிக்கு மூன்றாவது முறையாக திருமணம் நடக்க இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் தற்போது பொம்மி தலையில் அடிபட்டதால் பழசை எல்லாம் மறந்து விட்ட நிலையில் அவருக்கு பழையதை நினைவு படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் திருமணத்தை நடத்தி வருகிறார்கள்.

கொண்டாட்டத்துக்கு பஞ்சமில்லை
நினைத்தாலே இனிக்கும் சீரியலில் அஞ்சலி ஸ்வீட் என்கிற குடும்பத்தில் கதை பயணித்துக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் அதிகமான கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வரும் அடிக்கடி இங்கே போட்டிகள் நடத்தப்படுவதும் உண்டு அதற்கு ஜீ தமிழில் பிரபலமாக இருக்கும் பல நபர்கள் சிறப்பு விருந்தினர்களாக அறிமுகமாக ஆகி இருக்கிறார்கள் பாடகர்கள் டான்ஸ் மாஸ்டர் நடிகர்கள் தொகுப்பாளர் என்று ஜீ தமிழில் பிரபலமாக இருக்கும் பலரும் வேதாள இனிக்கும் சீரியலில் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து விடுவார்கள்.

கிரீன் டீ லவ்வருக்கு அறிவுரை
அந்த மாதிரி தான் தற்போது பொம்மி மற்றும் சித்தார்த் திருமணத்திற்கு டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் வந்திருக்கிறார். அவர் சும்மாவே அனைவரையும் கலாய்ப்பார். இப்போ அவருடைய கேரக்டர் அதே போலவே இருக்கிறது. இவர் நிஜமாகவே பேசுகிறாரா? இல்லை கதைக்காக இப்படி பேசுகிறாரா? என்று ரசிகர்களுக்கு குழப்பம் தான் வரும். அந்த அளவிற்கு அவர் சித்தார்த்தை பாடாய்படுத்தி எடுத்து இருக்கிறார். எப்போதும் இந்த சீரியலில் சித்தார்த் க்ரீன் டீ மட்டும்தான் குடிப்பார். தற்போது அவர் கிரீன் டீ குடித்துக் கொண்டிருக்க அதை பிடுங்கியபடி பாபா பாஸ்கர் சித்தார்த்துக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.

சூப்புக்கு கொடுத்த விளக்கம்
நீ கையில வச்சிருக்கியே, எப்ப பார்த்தாலும் இதை சப்பு சப்புனு சப்பிக்கிட்டு... இதை நிறுத்தனும் என்று சொல்கிறார். அதற்கு சித்தார்த் ஏன் இது நல்லது தானே? என்று கேட்க, என்னது நல்லது? இந்த வயசுல குடிக்க வேண்டிய ஐட்டமா இது? சும்மா ஆட்டுக்கால் சூப் வச்சு குடிக்க வேண்டும். அப்பொழுது தானே உடம்பு ஜிங்னுனு இருக்கும் என்று சொல்ல, அதெல்லாம் சரி நீங்க எப்ப பாத்தாலும் உடம்பு ஏத்துறத பத்தியே பேசுறீங்க, நீங்க பாடி பில்டரா என்று சித்தார்த் கேட்க, அதற்கு சுவரை வைத்து தானே சித்திரம் எழுத முடியுனு சொல்லுவாங்க. ஆனால் நான் சூப் வச்சி வரையுறேன் என்று சொல்கிறார். அதற்கு சித்தர் என்ன ஆட்டுக்கால் சூப்பா என்று பயந்தபடி கேட்க? இல்லை ஆட்டுக்கால் சூப் பிடிக்கலைன்னா என்ன, முருங்கைக்காய் சூப் குடிங்க என்று சொல்லி, அதுவும் உடம்புக்கு பிரதமாக எபைக்ட் கொடுக்கும் என்று தெரியும்ல என்று சொல்லி, கிரீன் டீ, சாலட் என்று நாட்டம் வந்துட்டா, கல்யாண வாழ்க்கையில் எப்படி நாட்டம் இருக்கும்? சாமியார் மாதிரி தான் வாழ தோகும் என்று சித்தார்த்தை கலாய்க்கிறார். தற்பொழுது இந்த பிரமோ வெளியான நிலையில் இதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
-
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications