தனுஷை பற்றி தப்பா சொல்லவே இல்ல! ஆனால் நேரடியாகவே என்னிடம் “அப்படி” கேட்டாரு.. கலா மாஸ்டர் ஓபன்
சென்னை: டான்ஸ் மாஸ்டர் கலா ஒருமுறை தனுஷ் என்னிடம் பேசும்போது நான் அவரைப் பற்றி சொல்லாத விஷயங்களை தப்பாக புரிந்து கொண்டு என்னிடமே சில கேள்விகளை கேட்டார், அது எனக்கு கஷ்டத்தை கொடுத்தது என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
பொதுவாக ஒரு பாடல் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் உருவாக்குவதற்கு அதில் பலர் தங்களுடைய உழைப்பை கொட்டுகின்றனர். பாடல் ஆசிரியர், பாடகர், இசை அமைப்பாளர் என்று பலர் இருந்தாலும் கண்களால் அந்த பாடலை பார்த்து ரசிப்பதற்கு அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடுபவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு அதற்கு பயிற்சி கொடுப்பவர்களும் முக்கிய காரணமாக இருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தான் கலா மாஸ்டர்.

கலா மாஸ்டர் தன்னுடைய 12 வயதில் இருந்து உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்து இப்போது வரைக்கும் டான்ஸ் மாஸ்டராக பல நடிகர் நடிகைகளை ஆட வைத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் அறிமுகமான "புன்னகை மன்னன்" படமாக இருந்தாலும் சரி அதற்கு பிறகு வந்த "புது புது அர்த்தங்கள்" படமாக இருந்தாலும் சரி அதிலெல்லாம் தன்னுடைய நடன இயக்குனராக சரியாக வேலைகளை செய்து இருக்கிறார். அதிலும் "அழகன்" திரைப்படத்தில் இடம் பெற்ற "கோழி கூவும் நேரம் ஆச்சு" என்ற பாடல் இவருடைய டான்ஸ்க்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது.
அதே நேரத்தில் சினிமாவில் மட்டுமல்லாமல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக வந்து பலரையும் ஆட்டுவித்து தன்னுடைய "கிழி கிழி என கிழித்து விட்டாய்" என்ற ஒரு வார்த்தையாலே பெரிய அளவில் பேமஸ் ஆகி விட்டார். இந்த நிகழ்ச்சியில் டான்ஸ் ஆட திறமையுள்ள பலர் அதற்கு சரியான சந்தர்ப்பம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு கலா மாஸ்டரே உதவிகள் செய்திருந்தார்.
அதிலும் சாண்டி மாஸ்டருக்கு பெரிய அளவில் சப்போட்டாக இருந்து அவர் இன்று இவ்வளவு வளர்ந்ததற்கு முக்கிய காரணமும் கலா மாஸ்டர் தான். இப்படி இருக்கையில் கலா மாஸ்டர் தனியாக டான்ஸ் கிளாஸ்சும் வைத்திருக்கிறார். அவருடைய கிளாஸில் தான் பல பிரபலங்கள் டான்ஸ் கற்று இருக்கிறார்கள். நடிகர் நடிகைகள் அதிகமானோர் அவருடைய டான்ஸ் கிளாஸில் கற்று இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவருடைய டான்ஸ் கிளாஸில் நடிகர் தனுஷும் சேர்ந்திருந்தாராம். அது பற்றி கலா மாஸ்டர் பேசுகையில் நான் திருடா திருடி திரைப்படத்தில் தனுஷுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுப்பதற்காக போயிருந்தேன். அப்போது என்னை பார்த்ததும் தனுஷ் மேடம் நான் தான் தனுஷ் என்று சொன்னார். நான் எனக்கு தெரியும் உங்களுடைய படத்திற்காக தானே நான் வந்திருக்கிறேன் என்று சொன்னேன்.

அதற்கு அவர் நான் உங்களுடைய டான்ஸ் கிளாஸில் டான்ஸ் கற்று இருக்கிறேன் என்று சொல்ல, ஆமா நான் பார்த்திருக்கிறேன் என்று நானும் சொன்னேன். அதற்காக அப்போ எல்லாம் நீங்க இவனெல்லாம் எங்க ஹீரோவாக போகிறான் என்று சொன்னிங்களே..? என்று சொன்னார். நான் அந்த மாதிரி உன்னை பற்றி ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது, நானே குரூப் டான்ஸராக இருக்கும்போது எவ்வளவு அவமானங்களை பட்டிருக்கிறேன் அதனால் நான் யாரையும் இந்த மாதிரி சொல்ல மாட்டேன், நான் சொன்னதை நீ தப்பா புரிஞ்சு இருக்கே என்று தனுஷுக்கு சொன்னேன்.
நேரடியாக தனுஷ் என்னிடம் இப்படி சொன்னது வருத்தமாகத்தான் இருந்தது. அதற்கு பிறகு நான் சொன்ன விளக்கத்திற்கு நான் அந்த நேரத்தில் ரொம்ப ஒல்லியா இத்துனூண்டு இருப்பேன். அப்போ நீங்க உங்க மனதில் இவனெல்லாம் எங்க கதாநாயகனா வரப் போறான் என்று நினைத்திருப்பீங்க என்று நானா சொல்றேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் என்று அந்த பேட்டியில் கலா மாஸ்டர் கூறியிருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications