ஸ்கூல் டாஸ்கா இல்ல மெண்டல் ஹாஸ்பிடலா..பிரியங்காவை கலாய்த்து தள்ளிய டான்ஸ் மாஸ்டர்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது.
பிரியங்கா செய்யும் செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாத இவர் இந்த மாதிரி பேசி விட்டாரே என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கருத்து கூறி வருகின்றனர்.
கேரக்டரோடு ஒன்றி விளையாடுகிறேன் என்று பிரியங்கா செய்த செயல் திரைத்துறையில் உள்ளவர்களையும் எரிச்சல் அடைய வைத்திருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

கனா காணும் காலங்கள் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள அனைத்து பலதரப்பட்டவர்களையும் கவர்ந்துள்ளது. ரசிகர்களாக பொதுமக்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு சில டாஸ்க்கள் ஒரு சில போட்டியாளர்களால் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுகிறது என்று பல நேரங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அதுபோலத்தான் தற்போதைய கனா காணும் காலங்கள் டாஸ்க்கை அனைவரும் அதிக அளவில் எதிர்பார்த்த நிலையில் ஒருசில போட்டியாளர்கள் அதனை கெடுத்து வருகின்றனர் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஓவர் நடிப்பு
பள்ளி டாஸ்க் வருகிறது என்றதும் போட்டியாளர்கள் இந்த இடத்தில் நன்றாக செயல்படுவார்கள் என்று ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக காத்துக்கொண்டிருந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்ட ஒரு சில போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூட்டும் வகையில் நடந்து வருகின்றனர். ஆனால் சிலர் நடிக்கிறேன் என்கிற பெயரில் ஓவராக நடித்து நிகழ்ச்சிக்கு சுவாரசியம் இல்லாமல் செய்து விடுகின்றனர் என்று பிரியங்கா மீது சில ரசிகர்கள் குற்றம்சாட்டி கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் சதீஷ் கிருஷ்ணன் பிரியங்காவை பற்றி தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

சதீஷ் கிருஷ்ணனின் கருத்து
பள்ளி டாஸ்க்கில் காலேஜ் ஸ்டூடணட் செய்வது போல அராத்து வேலைகளை பிரியங்கா செய்து கொண்டிருக்கிறார். அதனால் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் இல்லாமல் போய்விடுகிறது என்று ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டிருந்த நேரத்தில் சதீஷ் கிருஷ்ணன் தன்னுடைய கருத்தாக பிரியங்கா டோட்டல் ஸ்பாயில்ங் இந்த கனா காணும் காலங்கள் டாஸ்க் என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பள்ளி டாஸ்க்கில் இவர் செய்யும் ஓவர் அலப்பறை தாங்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இவருக்கு விளையாட்டு புரியாமல் இப்படி விளையாடிக் கொண்டு இருக்கிறாரா??என்றும் கூறியிருக்கிறார்.
Recommended Video

வைரலாகும் ட்விட்டர் பதிவு
இது ஸ்கூல் டாஸ்கா அல்லது மெண்டல் ஹாஸ்பிடலா என்று கேள்வி கேட்டிருக்கிறார். இவருடைய இந்த கருத்துக்கு ஒரு சில ரசிகர்கள் லைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, பிரியங்காவின் ரசிகர்கள் பிரியங்கா இப்படி சேட்டை செய்து கொண்டிருப்பதால் தான் நிகழ்ச்சி கொஞ்சமாவது நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. அவரும் அமைதியாக இருந்தால் நிகழ்ச்சி மொக்கையாக இருக்கும் என்று அவருக்கு பதில்களையும் அனுப்பி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications