இளமையா வச்சுக்கோங்க.. கலக்கும் தர்ஷா குப்தா.. அடடா.. உச்சுக் கொட்டும் ரசிகர்கள்
சென்னை : ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு பள்ளி குழந்தை போல மாறிய தர்ஷா குப்தாவை பார்த்து ரசிகர்கள் கொஞ்சி வருகிறார்கள்.
சேலையிலும், மாடர்ன் உடையிலும் நேற்றுவரை பார்த்த தர்ஷாவா இது என இன்ப அதிர்ச்சியாகியுள்ளனர். அப்படி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் அவர்.
அடடா நாங்களும் படிச்சப்பெல்லாம், இப்படி ஒரு மாணவி எங்க கூட படிக்கவில்லையே எனவும் குறும்புக்கார ரசிகர்கள் ஏங்குகிறார்கள்.

அழகான வில்லி
செந்தூரப்பூவே சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வரும் தர்ஷா குப்தா இதுவரைக்கும் இல்லாத வகையில் பள்ளி மாணவியின் கெட்டப்பில் என்ட்ரி கொடுத்து பார்ப்பவர்களை அசத்தியிருக்கிறார். இவரை இந்த மாதிரி பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் எப்படி கமெண்ட் போடுவது என தெரியாமல் தவித்து வருகின்றனர். சிலர் கண் இமைக்க மறந்து அப்படியே பார்த்து வருகிறார்களாம்.

தர்ஷான்னா பேரழகு
அழகு என்றால் தர்ஷா தான் பேரழகு என புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள் இவ்வளவு நாளா இந்த அழகை ஒளிச்சு வச்சிட்டீங்களே என செல்லமாக கோபப்படும் வருகின்றனர் .களவாணி படத்தில் ஓவியா பள்ளி குழந்தையாக வந்திருப்பது போல தர்ஷா குப்தா தற்போது செந்தூரப்பூவே சீரியலில் பிளாஷ்பேக்கில் நடித்து வருகிறார். அதே கெட்டப்பில் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டாலும் அவருடைய ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.

அப்படியே அசந்துட்டோம்
தற்போது இந்த கெட்டப்பில் பார்த்ததும் அசந்து போன அவருடைய ரசிகர்கள் உங்களுக்காகவே செந்தூரப்பூவே சீரியலை இனி தொடர்ந்து பார்க்க வேண்டும் போல இருக்கிறது என உருகுகிறார்கள் .இதுவரைக்கும் இந்த சீரியலை பார்க்காதவர்கள் கூட தற்போது இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்துவிட்டனர் .ஆனால் இவர் இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் ரசிக்க தான் செய்கிறார்கள்.

என்ன அழகு
தர்ஷா குப்தா அறிமுகமான முதல் சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்து இருந்தாலும் தற்போது நடிப்பததெல்லாம் நெகட்டிவ் ரோல் தான் .ஆனாலும் சீரியலில் பார்த்து இவரை திட்டும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இவருடைய போஸ்ட் பார்த்ததும் அடடா என்ன அழகு என்று கொஞ்ச ஆரம்பித்து விடுகின்றனர் . சமூக வலைத்தளத்தில் இவர் ஆக்டிவாக இருந்து வருவதால் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் பெரியதாகி வருகிறது .

கோமாளிகளுடன் குக்
சீரியலில் மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலக்கியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் புகழுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகளை ரசிக்கும் ரசிகர்கள் தர்ஷா வுக்கு அதிகமாக சப்போர்ட் செய்து வந்தனர் . தற்போது அந்த நிகழ்ச்சி முடிவடைந்தாலும் சமூக வலைத்தளத்தில் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது .

அதிரடி கெட்டப் சேஞ்ச்
அதனால் தான் ரசிகர்களுக்காக இவர் அடிக்கடி போட்டோக்களை எடுத்து வருகிறார். எப்போதுமே புடவையிலும் மாடல் உடைகளிலும் வரும் இவர் தற்போது ஸ்கூல் யூனிபார்மில் பார்த்ததும் பலரும் ஷாக்காகி விட்டனர். கவர்ச்சிகரமான புடவைப் படங்கள்தான் இவரது இன்ஸ்டாவை நிறைய அலங்கரிக்கும். ஆனால் அவ்வப்போது இப்படி கெட்டப் சேஞ்ச் செய்யவும் அவர் தவறுவதில்லை.












Click it and Unblock the Notifications