நடிகர் சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன் ராம்குமாருக்கு கல்யாணம்.. மணப்பெண் இந்த பிரபலம் தான்
சென்னை: மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகனான ராம்குமாரின் மகன் தர்ஷனுக்கு நாளை சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. அவருடைய வருங்கால மனைவி குறித்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் குடும்ப பிரச்சனை சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவாஜி கணேசனின் பூர்வீக வீடான அன்னை இல்லத்தை அவருடைய மகன் வாங்கிய கடனுக்காக ஜப்தி செய்வதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இது சினிமாத்துறையினரை மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களையும் வருத்தம் அடைய செய்தது.

அன்னை இல்லம் பிரச்சனை
அன்னை இல்லத்தில் சிவாஜி கணேஷனை பார்ப்பதற்காக பலர் அவருடைய வீட்டிற்கு சென்று சந்தித்திருக்கிறார்கள். அதுபோல அன்னை வீட்டில் பல சினிமா பிரபலங்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த வீடு இப்போது ஏலத்திற்கு வர போகிறது என்றதும் பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வந்தனர். அதுபோல அந்த வீடு நடிகர் பிரபுவுக்காக சிவாஜி கணேசன் எழுதி கொடுத்தது ஆனால் சிவாஜி கணேசனின் இன்னொரு மகனான ராம்குமார் வாங்கிய கடனுக்காக இந்த வீடு ஜப்தி பண்ணுவது சரி இல்லை என்று பிரபு தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டது.
சிவாஜி கணேசன் குடும்ப பிரச்சனை
இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் ராம்குமாரின் மகனுக்கு நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. சிவாஜி கணேசனுக்கு தேன்மொழி, சாந்தி என்ற இரண்டு மகள்களும் ராம்குமார், பிரபு என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். அதில் ராம்குமாரின் மகன் தர்ஷன் ராம்குமாரின் திருமணம் நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று சங்கீத் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
ராம்குமார் மகன்
ராம்குமாருக்கு துஷ்யந்த் என்ற மூத்த மகனுக்கு பிறகு தர்ஷன், ரிஷயன் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். அதில் தர்ஷன் மற்றும் ரிஷ்யன் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இதில் துஷ்யந்த் சக்சஸ் படத்தின் மூலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை.
சினிமாவுக்கு வரும் சிவாஜி பேரன்
ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ராம்குமாரின் மகன்களில் இரட்டையர்களில் ஒருவரான ரிஷியன் வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு அங்கேயே ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தர்ஷனுக்கு தன்னுடைய தாத்தாவைப் போலவே சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை கனவு இருக்கிறது. அதனாலேயே பூனே திரைப்பட கல்லூரி மற்றும் டெல்லி நேஷனல் ஸ்கூல் போன்றவற்றில் பயிற்சி படிப்பை முடித்து இருக்கிறார்.

சிவாஜி கணேசன் பேரன் திருமணம்
விரைவில் சினிமாவில் நடிப்பதற்காக முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போ எல்லாம் கொக்கோகோலா, டேரி மில்க் போன்ற விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் இவர் தன்னுடைய கல்லூரி தோழியான பூஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். டெல்லியில் படித்துக் கொண்டிருக்கும் போது இவர்களுக்குள் காதல் ஏற்பட இவர்களின் காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களுக்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்ற நிலையில் இப்போது திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமண பங்க்ஷனில் இவர்களின் நெருங்கிய குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications