Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாக்டரம்மா கலக்கறீங்க.. கட்டி இழுக்கும் தர்ஷனா.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல்களில் புதுமுகமாக அறிமுகமாகி ரசிகர்களை சாந்தமான நடிப்பால் கட்டி இழுத்துவிட்டு இணையதளத்தில் தன்னுடைய அழகாலயும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் தர்ஷனா வைரலாக பரவி வருகிறார். இவருடைய அழகையும் சாந்தமான கேரக்டரையும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நீதானே என் பொன்வசந்தம் சீரியல் மூலமாக திரையுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் இவர் ஒரு பல் மருத்துவர். இவருடைய தந்தை அசோகன் அவரும் ஒரு மருத்துவர்.

சொந்தமாக ஒரு கிளினிக் வைத்திருக்கும் இவர் தன்னுடைய ஆசைக்காக தான் தர்ஷனாவை மருத்துவம் படிக்க வைத்தாராம். ஆனால் தர்ஷனா மருத்துவம் படித்தாலும் அவருக்கு நடிப்பு மீதுதான் ஆசையாம். அதனால்தான் படிப்பை முடித்ததும் தன்னுடைய ஆசையான நடிப்பிற்கு வந்துவிட்டாராம்.

இதுதான் பர்ஸ்ட்டாம்

இதுதான் பர்ஸ்ட்டாம்

முதல் சீரியல் என்றாலும் அவருடைய நடிப்பு ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் 40 வயது ஆண்னுக்கும் 20 வயது பெண்ணிற்கும் நடக்கும் காதல் வாழ்க்கையை மையமாகக் கொண்டதுதான். இந்த மாதிரி சீரியல்கள் புதிது புதிதாக பல வந்தாலும் ரசிகர்களிடம் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

சந்தோஷம்தான்

சந்தோஷம்தான்

தான் நடித்த முதல் சீரியல் இந்த அளவிற்கு ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்கும் என்று நினைக்கும் போது இவருக்கு சந்தோஷமாக இருக்கிறதாம். தர்ஷனா முதலில் இந்த சீரியலில் நடிக்கும்போது கொஞ்சம் பயப்பட தான் செய்தாராம் .ஆனால் இவருடன் நடிக்கும் ஜெய் இவருக்கு நல்ல சப்போர்ட் பண்ணியிருக்கிறாராம். அதுமட்டுமல்லாது இவர் கூட நடிக்கும் நடிகர் நடிகைகள் எல்லோருமே ஒரு குடும்பமாக கலகலப்பாக ஜாலியாக இருக்கின்றார்களாம்.

குவியும் வீடியோக்கள்

குவியும் வீடியோக்கள்

சூட்டிங் டைமில் இவர்கள் வீடியோக்களாக எடுத்து குவித்து வருகிறார்கள். சூட்டிங் முடிந்ததும் இவர்கள் பண்ணும் அலம்பல்களை இணையதளத்தில் பதிவேற்றி வருகிறார்கள். அது வைரலாக பரவி வருகிறது. 19 வயதான தர்ஷனா நடிப்பில் கெட்டிக்காரராக வலம் வந்து கொண்டிருக்கிறார் . தர்ஷனாவின் வீட்டில் முதலில் நடிப்பதற்கு சம்மதிக்கவே இல்லையாம். ஆனால் தற்போது இவருக்கு நல்ல சப்போர்ட் பண்ணி கொண்டு இருக்கிறார்களாம்.

 இப்படி இருந்தால் நல்லாருக்கும்

இப்படி இருந்தால் நல்லாருக்கும்

ஒவ்வொரு நாளும் இவர் சீரியலில் வரும் போது அப்படி இருந்தால் நல்லா இருக்கும் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று சில கருத்துக்களையும் வீட்டில் இருப்பவர்கள் இவரிடம் கூறியிருக்கிறார்கள். இவங்க அம்மா தான் இவருக்கு முழு சப்போர்ட் கொடுத்து கொண்டிருக்கிறாராம் நடிப்பதற்கு.

அதுமட்டுமல்லாமல் இணையதளங்களில் விதவிதமாக மேக்கப் போட்டு கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இவரைப் பார்த்து ரசிகர்கள் சந்தோஷிக்கிறார்கள்.

நடிப்பு மட்டுமா

நடிப்பு மட்டுமா

நடிப்பு மட்டுமா, என்ன அழகுடா சாமி என்று வர்ணிக்க வார்த்தைகளைத் தேடிக் கொண்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு புகைப்படங்களில் விதவிதமாக எடுத்து குவித்து வருகிறார். இவரைப்பற்றி இவர் கூட நடிக்கும் ஜெய் முதலில் நடிக்க வந்திருக்கும் கத்துக்குட்டி ஆன இவர் இவ்வளவு அழகாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை அவ்வளவு அழகாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவரை எந்த அளவிற்கு நடிக்க கொண்டுவருவதற்கு டைரக்டர் கொஞ்சம் கஷ்டப்பட தான் செய்திருக்கிறார் என்று கிண்டல் அடித்து இருக்கிறார்.

நிவாஸினி மறுபக்கம்

நிவாஸினி மறுபக்கம்

தர்ஷனாவுடன் இந்த சீரியலில் இவருடன் மீரா கேரக்டரில் நடிக்கும் நிவாஸினி மறுபக்கம் ஒரு கலகலப்பான நடிகை. சீரியலில் தான் இவர் அமைதியின் சொருபமாக இருப்பார் ஆனால் செட்டில் செம வாலுத்தனம் பண்ணிக்கிட்டு கலகலப்பாக இருப்பார். அதுமட்டுமல்ல இவர் பிரேம் முன்பு தெய்வமகன் படத்தில் விக்ரம் நிலா பாப்பா என்று கூறுவது போல தான் அப்பப்போ பண்ணுவார் என்றும் அவரை கிண்டல் பண்ணுகிறார். எப்படியோ ஜாலியா பொழுது போகுது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+