பிக் பாஸில் இப்படி செய்வது பிடிக்கல! கோபமாக திடீர் போஸ்ட் போட்ட தர்ஷிகா.. அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷிகா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபமாக ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னை பற்றி விஷாலிடம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சிலர் பேசுவது குறித்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்த வாரத்தோடு இந்த நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இதில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் தர்ஷிகாவும் ஒருவர்.

தர்ஷிகா ஆரம்பத்தில் தனக்கு எந்த சீரியலிலும் கதாநாயகி வாய்ப்பு கிடைப்பதில்லை. என்னை பார்த்தாலே எல்லோரும் வில்லி என்று முடிவு செய்து விடுகிறார்கள். அது எனக்கு வேதனையாக இருக்கிறது. அதோடு மக்கள் என்னை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்று சொல்லி அறிமுகமானார்.
அதற்கு பிறகு நிகழ்ச்சியில் இவருடைய விளையாட்டு ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் தன்னுடைய பெஸ்ட்டை கொடுத்து வந்தார். அதுபோல இந்த சீசனில் இரண்டு முறை இவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இப்படியான நிலையில் சில வாரங்களுக்கு பிறகு நடைபெற்ற ஸ்கூல், கல்லூரி டாஸ்க்கில் விஷாலும் இவரும் காதலிப்பது போன்று கேரக்டர் எடுத்திருந்தனர்.

அதற்குப் பிறகு விஷால் மற்றும் தர்ஷிகா இருவரும் அதிகமாக பேசிக்கொண்டே இருந்தனர். விஷால் மீது தனக்கு இன்ட்ரஸ்ட் இருப்பதை பல இடங்களில் தர்ஷிகா வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் விஷால் தர்ஷிகாவிடம் நண்பர் என்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். இதனால் தர்ஷிகாவின் விளையாட்டு பாதிக்கப்பட்டு விட்டது என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த நேரத்தில் தர்ஷிகா வெளியே வந்தார்.
அவர் வெளியே வந்த பிறகு விஷால் காதலிப்பது போன்று கேம் விளையாடிவிட்டார் என்று எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்திருந்தார். எனக்கு விஷால் மீது கிரஷ் இருந்தது உண்மைதான் ஆனால் காதல் கிடையாது. காதலிப்பதற்கான இடமும் பிக் பாஸ் கிடையாது. விஷாலோடு இருப்பது பிடித்திருந்தது. அதனால் நான் அவரிடம் அதிகமான நேரம் இருந்தேன் அவ்வளவுதான் என்று விளக்கம் கொடுத்து இருந்தார்.

ஆனால் நேற்றிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்கு ஏற்கனவே எவிக்ஷனான போட்டியாளர்கள் ரீ என்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் விஷாலிடம் நீ தர்ஷிகாவை காதலிப்பது போன்ற பேசி ஏமாற்றி விட்டாய் அது வெளியே தவறாக போய்விட்டது என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். இதனால் விஷால் உடைய விளையாட்டு தடைப்பட்டு இருக்கிறது. அவரும் குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.
இப்படியான நிலையில் தர்ஷிகா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு திடீர் பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த யாரிடமும் நான் வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை கேள்வி கேட்கும் படி நான் எதுவும் சொல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

24 மணி நேரம் எபிசோடை பார்த்த பார்வையாளர்களாக இந்த கேள்விகள் எழுப்புகிறார்கள். என்னை வெளியேற்றுவதற்கு நான் முழு பொறுப்பையும் ஏற்கிறேன். அதற்கு வேறு யாரையும் குற்றம் சொல்ல வேண்டும் என்று நான் நம்பவில்லை. நான் வேண்டுமென்று யாரையும் தவறாக வழிநடத்தவில்லை.
யாரையும் புண்படுத்தவில்லை, யாருடைய இரக்கத்தையும் நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்னுடைய உண்மையான உணர்ச்சிகளை நான் வெளிப்படுத்தினேன். அது என்னை காயப்படுத்தியது.. இப்போது அது தேவையில்லாத நகைச்சுவையாக மாறி இருக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்கிறேன்.

அங்கு என்ன நடந்தது என்பதை நான் சம்பந்தப்பட்டவரிடம் கேட்க வேண்டும். அதுவும் அந்த இடத்திலேயே கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றவர்கள் அதை வைத்து ட்ரோல் செய்வதும், அதை கிண்டல் செய்வதையும் நான் விரும்பவில்லை. அதனால் தயவு செய்து அதை எல்லோரும் தவிர்த்து விடுங்கள். அதற்கான தெளிவை நான் அந்த இடத்தில் கேட்டு தெரிந்து கொள்கிறேன். வாழு... வாழ விடு! இதுவும் கடந்து போகும்.. என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
இதனால் விஷாலிடம் எனக்கு இருக்கும் சந்தேகங்களை நானே கேட்டு தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னுடைய சார்பாக சிலர் அவரிடம் கேட்பது எனக்கு பிடிக்கவில்லை. அதை வைத்து சில ட்ரோல் செய்து வருகிறார்கள். அதையும் நான் விரும்பவில்லை என்று அந்த பதிவில் தர்ஷிகா தெரிவித்து இருக்கிறார்.













Click it and Unblock the Notifications