செல்வியக்கா சூப்பர்.. செம ஹேப்பியா இருக்கேன்.. உற்சாகம் சிந்திய டிடி!
சென்னை: பாண்டிச்சேரிக்கு போய் சிலுசிலுவென வீசும் இயற்கை காற்றினை சுவாசித்தவாறு எங்கேயோ பார்த்தபடி கேஷுவலாக போட்டோ வெளியிட்ட டிடியை உற்று உற்றுப் பார்த்து ரசிக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளார் வரிசையில் எப்பொழுதும் தனக்கென சிறப்பான இடத்தை தக்கவைத்திருப்பவர் தான் டிடி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.
எதிர்த்து அமர்ந்திருப்பவர் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களையும் கலகலப்பாக்கி நிகழ்ச்சியையும் போரடிக்காமல் கொண்டு செல்வதில் டிடிக்கு நிகர் அவரே.

மகிழ்ச்சி மட்டுமே
நிகழ்ச்சியைக் கானும் அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்க வைக்க நினைக்கும் டிடி க்கு அவரது திருமண வாழ்வு என்னவோ அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை.ஆனால் அதை ஒரு தடைக் கல்லாக எண்ணாமல் படிக்கற்களாக நினைத்து எப்பவும் உற்சாகத்துடன்தான் காணப்படுவார். அதுதான் அவரது அடையாளமும் கூட.
இவர் போடும் போஸ்டுகள் அனைத்தும் இவரது வயதை ஒத்த பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பட்ட பெண்களின் தன்னம்பிக்கையை தூண்டுவதோடு அவர்களையும் மகிழ்ச்சிகரமாக்கும்.

டிராவல்னாலே ஜாலிதான்
பார்ட்டி, டிராவல் என்று ஜாலியாக பொழுதை போக்கும் டிடி தற்பொழுது ஓலை வீடு,திண்ணை காத்து,மண் வாசம் என்று கிராமிய வாடை தூக்க பாரதிராஜா பட ரேஞ்சுக்கு பீல் பண்ணி பகிர்ந்துள்ள படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இவரது போஸ்டை பார்த்த நம் இணையதள குறும்பர்கள் ஓலை வீடு,மண் வாசம் எல்லாம் ஓகே தின்னை காத்துக்கு இவ்வளவு ப்ரியாகவா உட்காரனும் என்று கலாய்த்து வருகின்றனர் .

திண்ணைக் காத்து
இவர் ஒரு ரிசார்ட்டில் அமர்ந்து மண் வாசம், திண்ணை காத்து, ஓலை குடிசையை ரசிப்பது போல் போட்டோ எடுத்துப் போட்டுள்ளார். இது நிஜமா இல்லை செட்டிங்கா என்று ரசிகர்கள் கலாய்க்கவும் தவறவில்லை. எது எப்படி இருந்தாலும் டிடி எது செய்தாலும் கொண்டாடி புகழும் ரசிகர்கள் இதையும் இதோ வந்துட்டாங்கள்ள எங்க தலைவி என்ற ரேஞ்சுக்கு கவிதைகளால் கமெண்ட்களையும்...லைக்குகளையும் பறக்க விட்டு வருகின்றனர்

கொரோனா முடக்கிருச்சே
மாதத்திற்கு ஒருமுறை ட்ரிப் போய்க்கொண்டு இருந்தவரை தற்போது வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் ஊரடங்கு காரணமாக நம்மால் இந்த வெயிலுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது என பாண்டிச்சேரியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்ற டிடி அங்கு ஓலை வீட்டிற்குள் ஜாலியாக காற்று வாங்கி நிம்மதியாக இருக்கிறேன் என போஸ்ட் போட்டு இருக்கிறார் .

செல்வியக்கா சூப்பர்
அதுவுமில்லாமல் என்னை என் குடும்பத்தினர் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் .செல்வியக்கா நன்றாகச் சமைத்து தருகிறார் என என்ஜாய் பண்னி பதிவு போட்டுள்ளார். டிடி மற்றும் குடும்பத்தினர் இருக்கும் ஜாலியைப் பார்த்த பலருக்கும், இவரைப் போலவே வெயிலுக்கு இதமாக எங்கேயாவது சென்று விடலாமா என ஆசையை தூண்டி விட்டிருக்கிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications