டாப் டென்னில் இடம் பிடித்துவிட்ட டிடி நேஷனல் சானல்!
டெல்லி: தூர்தர்ஷன் சானல் என்றாலே கசப்பு என்ற நிலை மாறி இப்போது ஹையா ஜாலி ஜாலி என்று மக்கள் தூர்தர்ஷன் அதாவது டிடி நேஷனல் பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.இதனால் டிஆர்பியில் முதல் பத்து இடங்களில் ஒன்றை பிடித்து உள்ளதாம் இந்த சானல்.
தூர்தர்ஷனா.. எத்தனையாவது சானல்..ரிமோட் எடுத்து மாற்றலாமா வேண்டாமா என்று இருந்த மக்கள், ராமாயணம், சக்திமான் என்று போட ஆரம்பித்ததும் டிடியே கதி என்று மாறிவிட்டார்கள் என்று அறிக்கை சொல்கிறது என்றால் பாருங்கள்!
முந்தைய வாரம் இந்தி ஜி.இ.சி பிரிவில் முதல் 10 சானல்களில் டி.டி நேஷனல் சுத்தமாக இல்லை. ஆனால், மார்ச் 28, முதல் ஏப்ரல் 3 வரை மாதத்தின் இறுதி மற்றும் முதல் வாரத்தில் இந்த அபார முன்னேற்றம் என்கிறார்கள்.

ராமாயணம் சக்திமான்
ராமாயணம், சக்திமான் மற்றும் இந்தியில் பெரும் புகழ் அடைந்த பியோம்கேஷ் பக்ஷி போன்ற சீரியல்கள் மறு ஒளிபரப்பில் டிடிக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. லாக்டவுன் காலத்தில் 90ஸ் புகழ் சீரியல்கள் மறு ஒளிபரப்பு இந்த அளவுக்கு மக்களை ஈர்க்கும் என்பது டிடியே கூட நினைத்துப் பார்க்காத ஒரு ஆச்சரியம்தான். சக்திமான் மட்டும் அல்ல குழந்தைகளின் ஃபேவரைட் பட்டியலில் ராமாயணமும் இடம் பெற்று திகழ்கிறது.

ராமாயணம் தினம் 2 முறை
ராமாயணம் தினம் காலை மாலை என்றும், சக்திமான் காலை ஒரு முறை என்றும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்-நீல்சன் வியாழக்கிழமை வெளியிட்ட புதிய தகவல்படி, டிடி நேஷனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை மார்ச் 28 முதல் ஏப்ரல் 3 வரை காலை 9 முதல் 12.30 மணி வரை 580 மில்லியன் பதிவுகள் வரை உயர்ந்தது என்பதைக் காட்டுகிறது, இது முந்தைய வாரத்தில் ஒரு மில்லியன் பதிவுகள் மட்டுமே. இரவு 9-10.30 மணி ஸ்லாட்டிலும் 835 மில்லியன் பேர் டிடி நேஷனல் பார்த்துள்ளனர் .

ராமாயணம் டிடி
டிடி நேஷனலுக்கு பெரிய வரவேற்பை அளித்து இருப்பது ராமாயணம் மறு ஒளிபரப்புதான் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். ராமாயணம் மறு ஒளிபரப்பில் மட்டும் பார்வையாளர்களின் எண்ணிக்கை காலை மற்றும் மாலை 54 மடங்கு அதிகரித்து இருந்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

மீண்டும் சக்திமான்
முகேஷ் கன்னா நடித்த இந்திய சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், டி.டி நேஷனல் சானலுக்கு இன்னும் ஒரு சூப்பர் ஹிட் தொடர்.இதன் மறு ஒளிபரப்பிலும் பார்வையாளர்கள் 52 மடங்கு என்று அதிகரித்து 20.8 மில்லியனாக உயர்ந்து இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறது அறிக்கை..












Click it and Unblock the Notifications