என்ன இப்படி அடிச்சு தூள் கிளப்பறாங்களே.. டிடி நேஷனல் சானல்!
புதுடெல்லி: கோவிட் 19 தொற்று காரணமா லாக்டவுன் அமலுக்கு வந்தாலும் வந்துச்சு. டிடி நேஷனல் காட்டில் அடடா மழைடா..அடை மழைடான்னு செம...அடிச்சு தூள் கிளப்பிகிட்டு மேலும் மேலும் திரும்பிப் பார்க்காமல் போய்கிட்டே இருக்காங்க.
ராமாயணம்.. மகாபாரதம், ஸ்ரீகிருஷ்ணா இப்படி போன புராதன சீரியல் வரிசையில் விஷ்ணுபுரன் புராதன சீரியலும் இன்று முதல் சேர்கிறது. இன்று முதல் தினமும் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
விஷ்ணுபுரன் சீரியல், மகாவிஷ்ணு கதை... மக்கள் மிகவும் விரும்பிப் பார்த்து ரசித்த சீரியல்தான். இதை மீண்டும் ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்து இருக்கிறது டிடி நேஷனல் சானல். இந்தியா மட்டும் இல்லாமல் அனைத்து நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை குறிவைத்து பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது டிடி நேஷனல் சானல்.

திருப்பாற் கடலில்
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டு இருக்கும் ஸ்ரீ விஷ்ணு...காக்கும் கடவுள்...துணைவி மகாலட்சுமி செல்வ செழிப்பின் அதிபதி. இவர்கள் காதல் கதை...பிரம்மன், சிவன் இருவருக்கு இடையில் இவர் காக்கும் கடவுள். இவர் குறித்த கதைகள் சர்வ சாதாரணமாக யாருக்கும் தெரிந்து இருக்கும் படி அமையவில்லை.

குறைத் தீர்க்க
விஷ்ணு பற்றி அவ்வளவாக தெரிந்து கொள்ள சுலபமான முறையில் ஆக்கம் செய்யப்பட்ட கதைகள் இல்லை என்று மக்கள் மத்தியில் குறை இருந்ததை போக்கும் வகையில்தான் விஷ்ணுபுரன் சீரியலை டிடி நேஷனல் சானல் அப்போது ஒளிபரப்பி வந்தது. இப்போது லாக்டவுன் நேரத்தில் மக்களை மகிழ்விக்க மறு ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்து இருக்கிறது டிடி நேஷனல்.

டிடி நேஷனல் சானல்
இந்தியாவின் அந்தந்த மாநில மொழிகளில் தனியார் சானல்கள் முளைத்து, கண்கவர் நிகழ்ச்சிகள், சீரியல்கள், படங்கள் என்று சலிக்க சலிக்க ஒளிபரப்பத் துவங்கின. இதனால், எப்போதாவது டிடி நேஷனல் சானல் ஒளிபரப்பும் படங்கள், சீரியல்கள், நிகழ்ச்சிகளுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருந்தது.

ஓல்ட் ஈஸ் கோல்டு
லாக்டவுன் காலத்தில் இந்தியாவின் பிராந்திய மொழி சானல்கள் மறு ஒளிபரப்பு செய்யும் அத்தனை விஷயங்களும் ரொம்ப போராக இருக்கிறது. இந்த சமயத்தில் டிடி நேஷனல் சானல் மக்கள் விரும்பும் புராதன சீரியல்கள், குழந்தைகள் விரும்பும் சக்திமான் போன்ற சூப்பர் ஹீரோக்களின் சீரியல்கள் என்று ஒளிபரப்பத் துவங்கியது. என்ன இருந்தாலும் ஓல்ட் ஈஸ் கோல்டு இல்லையா? டிடி நேஷனல் இதனால் ரேட்டிங்கில் படு வேகமாக வளர்ச்சி கண்டு வெற்றி பாதையில் நடைபோட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications