மதுப்பழக்கம் இருக்கிறதா..16 வயதில் அப்பாவால் கிளப்பிற்கு போனதாக ஆங்கர் டிடி ஷாக் தகவல்
சென்னை: 16 வயதில் அப்பாவால் கிளப்பிற்கு சென்றேன் என நடிகையும் தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சினிமா நடிகர், நடிகைகளை போல் சின்னத்திரை தொகுப்பாளர்கள் தொகுப்பாளினிகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பெப்சி உமா, ஆனந்த கண்ணன், பிரஜன், நிஷா, விஜய சாரதி, அர்ச்சனா உள்ளிட்டோர் நம் கண் முன்னே வருவர்.

அது போல் 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினிகள் என்றால் திவ்யதர்ஷினி, பிரியங்கா, ரம்யா, பாவ்னா, ஜாக்குலின் என நினைவுக்கு வருவர். அப்படிப்பட்ட திவ்யதர்ஷினி 21 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
இவர் ரஜினி, கமல், விஜய், சரத்குமார், ராதிகா, ராதா, நயன்தாரா, உள்ளிட்டோரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பேட்டி எடுத்துள்ளார். கமல்ஹாசனுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தனக்கு அவர் முத்தம் கொடுக்க வேண்டும் என நேரலையில் கேட்டு வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எந்த நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கினாலும் கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் தொகுத்து வழங்குவார். சினிமாவில் நடித்தாலும் படிப்பையும் கைவிடாமல் இருந்தார். பகுதிநேர ஆசிரியராக கல்லூரியில் பணியாற்றியிருந்தார். இத்தனை திறமைகளை கொண்ட டிடி, தனது திருமண வாழ்வில் தோல்வியையே கண்டார்.

2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொண்டார். இவர் உதவி இயக்குநராக பணியாற்றியவரும் ஆவார். இவரது திருமணம் பிராமணர் முறைபடி நடந்தது. மெஹந்தி விழா, ரிசப்ஷன், திருமணம், தலை தீபாவளி, பிரபலங்களின் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவரும் கண்ணேபடும் படி ஒற்றுமையாகவும் அந்யோன்யமாகவும் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். ஸ்ரீகாந்த் மறுமணம் செய்து கொண்ட நிலையில் டிடி மட்டும் இது வரை வேறு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது திருமண வாழ்க்கை முறிந்தது குறித்து பலர் டிடி மீது பல விதமாக பேசி வந்தனர். இந்த நிலையில் அவரும் அவரது சகோதரி பிரியதர்ஷினியும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
அதில் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் பற்றி எனது எண்ணமே வேறு மாதிரியாக இருந்தது. ஆனால் இப்போது எனது பார்வை முற்றிலும் மாறிவிட்டது. திருமணம் செய்தால்தான் ஒரு பெண்ணால் வாழ முடியும் என்றில்லை, அதுதான் சாதனை என்றும் சொல்ல முடியாது. திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் ஆகும்.
இவ்வாறு நான் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருப்பதால் அம்மா உள்ளிட்டோர் இப்போதைய காலகட்டத்திற்கு ஏற்றபடியே யோசிக்கிறார்கள். எனது தம்பி வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கு இங்கு எங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. எனது அக்காவுக்கு மட்டும் என்னை பற்றிய விஷயம் தெரியும்.
அத்துடன் மறுமணம் செய்யவும் எனக்கு துளியும் விருப்பம் இல்லை. 16 வயதில் கிளப்பில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு செல்ல அம்மாவிடம் அனுமதி கேட்டேன். ஆனால் அவர் அங்கெல்லாம் போகக் கூடாது என கூறிவிட்டார். பிறகு என் அப்பாவிடம் கிளப்புக்கு போவது குறித்து கேட்டேன். அவர் போய்ட்டு வா என அனுமதித்தார்.
ஏனென்றால் நான் குடிக்கவே மாட்டேன் என்பது அவருக்கு நன்றாக தெரியும். 16 வயதில் மட்டுமில்லை, இப்போது கூட என்னை சுற்றி குடிக்கும் நண்பர்கள் இருந்தாலும் நான் குடிக்கவே மாட்டேன். இவ்வாறு திவ்யதர்ஷினி டிடி தெரிவித்துள்ளார். இவருடைய சகோதரி எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா எனும் கேரக்டரில் நடித்து வருகிறார். அதாவது ஞானத்தின் மனைவியாக நடித்து வருகிறார்.
பிரியதர்ஷினியின் சேலைகளை அறிமுகப்படுத்தும் போது கூட டிடி, "ஏம்மா நீங்களலாம் வேலைக்கே போறதுல்ல ,ஆனாலும் சேலை, நகைன்னு மின்னுறீங்களே எப்படினு காமெடியா கேட்டார். குணசேகரன் தாம்மா உங்களுக்கு லாயக்கி என கிண்டலடித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications