Kaatrin Mozhi Serial: ஏம்பா...வாய் பேச முடியாத பெண்ணை... கடுப்பேத்தறாங்க மை லார்ட்!
சென்னை: விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் வாய் பேச முடியாத கண்மணிக்கு ஆசை காண்பித்து ஆசை காண்பித்து சந்தோஷ் உசுப்பேத்துவது பார்ப்பவர்களை கடுப்பேத்துகிறது.
எத்தனை காலத்துக்குத்தான் இதே மாதிரி கதைகளை வச்சுக்கிட்டு பார்ப்பவர்களின் பிபியை எகிற வைக்க விஜய் டிவி நினைத்துக் கொண்டு இருக்கிறதோ தெரியவில்லை.
குற்றம் குறையைக் கொண்டே சீரியலை நகர்த்தி வரும் விஜய் டிவி காற்றின் மொழி சீரியலின் கதையையும் வாய் பேச முடியாத ஒரு பெண்ணின் நிலையை கொஞ்சம் மிகைப் படுத்தியே கதையை நகர்த்தி வருகிறது.

கண்மணியை பிடிக்கலை
கண்மணி வாய் பேச முடியாத பெண் என்பதால் பெத்த அப்பாவுக்கே பிடிக்கலை. இவளை ஏமாத்தி பிழைக்கும் உடன் பிறந்த தம்பி. இவள் வரைந்த ஓவியத்தை தான் வரைந்த ஓவியம் என்று தம்பி தனது கேர்ள் ஃபிரண்டிடம் சொல்லும்போது நமக்கு பதைக்கிறது. அதோடு, அக்காவை ஏமாற்றி வீட்டில் பணத்தை தம்பி முகமூடி போட்டுக்கொண்டு பணத்தை திருடிச் செல்லும்போது இன்னும் இன்னும் என்று மனம் பதைக்கிறது.

பணக்கார சந்தோஷ்
எப்போதும் பணக்கார பசங்களுக்கு இப்படி கண்மணி போல ஏழை பெண்களிடம் விளையாடுவது என்பது வேடிக்கையாக இருக்கும் போல. இங்கும் அப்படித்தான். அலுவலகத்துக்கு பால் ஊற்ற வரும் கண்மணியை காபி போட வேலைக்கு சேர்க்கிறானாம் சந்தோஷ். மாமன் மகள் தீபிகா அலுவலகம் இது வேறு. அவளுக்கு பிடிக்காமல் கண்மணியை அலுவலகத்தில் வேலைக்கு சேர்க்கிறான்.

கண்மணிக்கு பூ
தீபிகாவுக்கு பிடிக்காத கண்மணிக்கு எதுவும் செய்யக் கூடாது என்று அம்மா சந்தோஷிடம் எவ்வளவு எடுத்து சொல்லியும் கண்மணிக்கு சந்தோஷ் ஒற்றை ரோஜா பூ கொடுக்கிறான். இதை பார்த்த தீபிகா கோபமாக வந்து கண்மணியை பொளேர் என்று அடிக்கிறாள். பாவம் ஓரிடம் பழி ஓரிடமா?

இன்னுமா இந்த உலகம்?
கதைக்குத்தான் இது என்று இதெல்லாம் கடந்து போய்க்கொண்டு இருக்கும் நிலையில் இன்னுமா இதை எல்லாம் இந்த உலகம் நம்பிக்கொண்டு இருக்கிறது? கதைக்கு என்று இருந்தாலும் அதில் ஒரு லாஜிக் வேணாமா? பணக்கார மாமன் பெண், அவள் ஆபீசில் நல்ல பொறுப்பில் இருக்கிறான் சந்தோஷ். சைடில் எதற்கு வாய் பேச முடியாத ஏழை பெண் கண்மணிக்கு ஒற்றை ரோஜா பூ கொடுக்கிறான்?
அப்போ அந்த ஏழைப் பெண்ணை ஏமாற்ற பார்க்கிறானா? ஏழை என்றால் அவ்வளவு இளக்காரமா உங்களுக்கு? கதையை மாத்தி தொலைங்கப்பா !கடுப்பு கடுப்பா வருது!
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications