நடிகை பத்மப்ரியாவின் குழந்தை பற்றி இணையத்தில் வெடித்த விவாதம்.. ஒரே ஒரு கமெண்ட்டால் கிளம்பிய சந்தேகம்
சென்னை: தமிழ் சினிமாவில் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலமாக தனி அடையாளம் பெற்ற நடிகர் பத்மபிரியா தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஒரு வருடம் முழுவதும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருக்கிறார். அவருடைய குழந்தையின் முதல் பிறந்த நாளில் அவர் பகிர்ந்த போட்டோ தான் இப்போ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே, பொக்கிஷம், தங்க மீன்கள் உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பத்மபிரியா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கை முழுமையாக கவனித்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய குழந்தையின் முதல் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தையின் முகத்தை காட்டாமல் கையை மட்டும் காட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை பத்மபிரியா பதிவு
மேலும் அந்த பதிவில், என் வாழ்க்கையின் அற்புதமான 365 நாட்கள் என்று உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இந்த பதிவின் மூலம் தான் கடந்த ஒரு வருடமாக அவர் தாயாகி இருக்கும் தகவலை ரசிகர்களுக்கு தெரிகின்றது. ஆனால் இந்த பதிவை விட அதிகமாக பேசப்படுவது நடிகை அபிராமி போட்ட கமெண்ட்டும், அதற்கு பத்மப்ரியா அளித்த பதிலும் தான்.

அபிராமியின் வாழ்த்து
பத்மபிரியாவின் போஸ்ட்க்கு நடிகை அபிராமி, "உன்னையும் உன் குழந்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பத்மப்ரியா இந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்க காரணமே நீதான் என்று பதில் அளித்து இருந்தார். இந்த ஒரு வரி தான் மீடியாவில் விவாதத்தை ஏற்படுகிறது.
அபிராமி பழைய பேட்டி
ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்பு நடிகை அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்தது குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். அதனால் பத்மபிரியாவும் அபிராமியின் அட்வைஸால் தான் குழந்தையை தத்தெடுத்தாரா? அதனால் தான் காரணமே நீ தான் என்று சொன்னாரா? என்று கேள்விகளை பலர் எழுப்பி வருகின்றனர். காரணம் பத்மபிரியா இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டிருந்தாலும் தான் கர்ப்பமாக இருந்தது போல எந்த போட்டோவையும் இணையத்தில் வெளியிடவில்லை. இதனால் விவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதை நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து வருவதை பார்க்கும் போது சில ரசிகர்கள் நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது இதையெல்லாம் விட்டுட்டு அவங்களுக்கு குழந்தை எப்படி பிறந்ததுன்னு இவ்வளவு பேசுறீங்களே என்று அவர்களுக்கு அட்வைஸ் செய்வதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் சிலர் எந்த பிரச்சனை எப்படியும் இருக்கட்டும். எங்களுக்கு இவங்க ஏன் கர்ப்பமாக இருந்ததை சொல்லல என்று கமெண்ட்ஸ் போட்டு விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதை பார்க்கும் போது இதுவெல்லாம் தேவையா பாஸ் என்பது போலத்தான் இவர்களுடைய வாக்குவாதம் இருக்கிறது.
ரசிகர்கள் கருத்து
ஒருவேளை பத்மபிரியாவின் திருமணத்திற்கே கூட அபிராமி காரணமாக இருந்திருக்கலாம் அதனால் கூட என்னுடைய வாழ்க்கையில் உங்களால் தான் சந்தோஷம் வந்தது என்று பத்மபிரியா சொல்லி இருக்கலாமே என்றும் சிலர் சொல்லி வருகின்றனர். எது எப்படியோ இதுவரை பத்மபிரியா தன்னுடைய குழந்தை பிறந்ததா? தத்தெடுத்ததா அல்லது வேறு எந்த விவாரத்தையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
எனவே சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் யூகங்கள் மட்டுமே. இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பத்மபிரியா விரைவில் விளக்கம் அளிப்பாரா? அல்லது இதையும் அமைதியாக கடந்து செல்வாரா? என்பது தான் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்படும் கேள்வியாக மாறி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
