பத்திரம் இப்போ பிரபு கையில்.. "சின்னபசங்க விளைச்சல் வீடு வந்து சேராது" அப்பவே சொன்ன சிவாஜி: பிரபலம்
சென்னை: கடன் விவகாரம் தொடர்பாக ராம்குமார் இப்போது கோர்ட்டுக்கு அப்பீல் போயிருக்கிறார்.. அந்த அப்பீலுக்கு கோர்ட்டார் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.. அடுத்த மாதத்துக்கு வழக்கு விசாரணை வருகிறது. எப்படியும் கடனை கொடுத்தாக வேண்டியிருக்கிறது.. அதற்கு பஞ்சாயத்து நடைபெறும்.. எது எப்படியோ, சிவாஜி கணேசன் செய்த புண்ணியம், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. ஜப்தி உத்தரவிலிருந்து அன்னைஇல்லம் மீண்டது. காரணம் பிரபு" என்று தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.
AG Modern Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "சிவாஜி கணேசன், எப்போதுமே தன்னுடைய குடும்பம் கூட்டுக்குடித்தனமாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்.. அதனால்தான், தன்னுடைய அண்ணன், தம்பி ஆகியோரின் மகன்களையும் தன்னுடனேயே வைத்து கொண்டார்..

அந்தவகையில், கிட்டத்தட்ட சிவாஜியின் அன்னை இல்லத்தில் 50 பேர் ஒன்றாக தங்கியும், சாப்பிட்டும் வந்தார்கள்.. எல்லாமே சிவாஜியின் நடிப்பார் கிடைத்த பணம்தான்..
அண்ணன் - தம்பி ஒற்றுமையான குடும்பம்
சிவாஜியின் கால்ஷீட்டை தம்பி சண்முகமும், விவசாய நிலங்களை, சிவாஜியின் அண்ணன் தங்கவேலுவும் கவனித்து கொண்டனர். அக்கா - தங்கைகளை சிவாஜியும், சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டனர். அக்கா - தங்கைகள் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தினால் சண்டை வராது என்ற நம்பிக்கைதான் இதற்கு காரணம். இதை சிவாஜியும், அவரது சகோதரர்களும் நிரூபித்து காட்டினார்கள்.
வியட்நாடு வீடு உள்ளிட்ட பல படங்களை தயாரித்தது சிவாஜி புரடக்ஷன்ஸ்.. ஆனால், ஆரம்பத்திலிருந்தே சிவாஜி கணேசன் நடித்த படங்களுக்கு, சென்னை விநியோக உரிமையை சிவாஜிபுரடக்ஷன்ஸ் பெற்று வந்தது.. கருப்பு வெள்ளை காலத்திலிருந்தே இந்த நடைமுறைதான் உள்ளது.
அறுவடைநாள் படம்
சிவாஜிகணேசன் இருக்கும்போதே, ராம்குமார் அறுவடை நாள் படம் தயாரித்தார்.. சின்னபசங்க விளைச்சல் வீடு வந்து சேராது என்று அப்போதே சிவாஜி சொன்னார்.. எனினும், அந்த படம் நட்டமிட்டாமல் பெயரை காப்பாற்றியது.
அதற்கு பிறகு சில படங்கள் நஷ்டத்தை தந்துவிட்டது. மேலும், சிவாஜி கணேசன் தனிக்கட்சி தொடங்கியதால், நிறைய செலவுகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அந்த செலவுகள் எல்லாமே சிவாஜி கணேசன் நடித்து சம்பாதித்த பணம்தான்.
3 தியேட்டர்கள் விற்பனை
அந்த அடிப்படையிலேயே தன்னுடைய 3 தியேட்டர்களையும் விற்றார் சிவாஜி கணேசன்.. எனினும், அரசியலில் தோல்வி அடைந்தார்.. இந்த தோல்வியையடுத்து, சொத்துக்களும் விற்பனையாயின. நஷ்டத்தை சந்தித்து கொண்டிருந்த சிவாஜி கணேசன், ரஜினியிடம் சென்று, "என்னுடைய சிவாஜி புரடக்ஷனுக்கு நீ ஒரு படம் தயாரித்து தர வேண்டும்" என்று சொன்னார்.
உடனே ரஜினியும், மன்னன் என்ற படத்திற்கு கால்ஷீட் தந்தார்.. சிவாஜி புரடக்ஷன்ஸ் மன்னன் படத்தை தயாரித்து லாபம் சம்பாதித்தது. அதற்கு பிறகு சிவாஜி புரடக்ஷன்ஸ் படம் தயாரிக்கவில்லை.. இதனிடையே சிவாஜியும் மறைந்துவிட்டார்..
சிவாஜி புரடக்ஷன்ஸ் - ஜப்தி விவகாரம்
சிவாஜி மறைந்ததுமே, ராம்குமார், அவரது மகனிடம் சென்றது சிவாஜி புரடக்ஷன்ஸ்.. பாகப்பிரிவினையில் சிவாஜி புரடக்ஷன்ஸ், ராயப்பேட்டையிலுள்ள சிவாஜியின் பழைய வீடும், ராமகுமாருக்கும், அவரது மகனுக்கும் கிடைத்தது.
ஆனால், சிவாஜி உயிருடன் இருக்கும்போது, ராம்குமாரால் மன உளைச்சல் ஏற்பட்டது. சிவாஜி மறைந்தபிறகு, பேரன் துஷ்யந்த்தால், அவரது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. அன்னை இல்லம் ஜப்தி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது.
அன்னை இல்லம் - பிரபு உரிமை பத்திரம்
எனினும், அன்னை இல்லம் ராம்குமாருக்கும், துஷ்யந்துக்கும் சொந்தமில்லை என்றும், பாகப்பிரிவினையில் அன்னை இல்லம் பிரபுவுக்கு சொந்தமானது எனபதும் தெரியவந்தது.. இதையடுத்து, பிரபுவும், தனக்கான உரிமைப்பத்திரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து, அன்னை இல்லம் தனக்குதான் சொந்தம் என்பதையும் நிரூபித்துவிட்டார்.
கடன் விவகாரம் தொடர்பாக ராம்குமார் இப்போது கோர்ட்டுக்கு அப்பீல் போயிருக்கிறார்.. அந்த அப்பீலுக்கு கோர்ட்டார் என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.. அடுத்த மாதத்துக்கு வழக்கு விசாரணை வருகிறது. எப்படியும் கடனை கொடுத்தாக வேண்டியிருக்கிறது.. அதற்கு பஞ்சாயத்து நடைபெறும்.. எது எப்படியோ, சிவாஜி கணேசன் செய்த புண்ணியம், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. ஜப்தி உத்தரவிலிருந்து அன்னைஇல்லம் மீண்டது. காரணம் பிரபு" என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications