வீட்டில் விசேஷம்.. மனைவியோடு பிக் பாஸ் தீபக் போட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்துக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகராகவும் தொகுப்பாளராகவும் பலருக்கும் பிரபலமான தீபக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் ரசிகர்களை பெற்று விட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவியோடு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இவருக்கு ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

சினிமா மற்றும் சீரியலில் எத்தனையோ பேர் நடித்திருந்தாலும் ஒரு சிலர் பெயரை சொன்னதுமே ரசிகர்களுக்கு டக்கென்று நினைவிற்கு வந்துவிடும். அந்த வகையில் பலருக்கும் பரிட்சயமானவர்தான் தென்றல் சீரியலில் தமிழ் கேரக்டரில் நடித்த தீபக். இவருக்கு தென்றல் சீரியல் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. நுனி நாக்கில் ஆங்கிலம் கலந்த தமிழோடு இவர் பேசும் ஸ்டைல் அப்போது 90 ஸ் கிட்ஸ்களை அதிகமாக கவர்ந்திருந்தது.

Vijay TV Deepak

ஆரம்ப காலம்

கல்லூரி படிக்கும் போதே மாடலிங்கில் கலக்கி வந்த தீபக் ஆரம்பத்தில் வீடியோ ஜாக்கியாக வேலை பார்த்தார். அதற்கு பிறகு அண்ணி, பந்தம், தென்றல், திருமதி செல்வம் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் தமிழ் கேரக்டரில் நடித்து வந்தார். இந்த சீரியல் முடிவடைந்த நேரத்தில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

பிக் பாஸ் பிரபலம்

அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் தான் டைட்டில் வெற்றி பெறுவார் என்று பலர் நம்பி வந்தனர். ஆனால் நிகழ்ச்சி முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு தீபக் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். தீபக் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது அவருக்கு சப்போர்ட் அதிகமாக இருந்தது. தீபக் வெளியே வந்த பிறகு முத்துக்குமரன் தான் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று சப்போர்ட் செய்து வந்தார்.

Vijay TV Deepak

தீபக் மனைவி

அதேபோல தீபக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவருடைய மனைவி சிவரஞ்சனி பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேமிலி ரவுண்டு நடைபெற்றது. அதில் முதல் ஆளாக தீபக் குடும்பம் தான் வந்தது. தீபக்குக்கு அக்னிஸ் என்ற ஒரு மகன் இருக்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டுதான் தீபக் சிவரஞ்சனியை திருமணம் செய்திருந்தார்.

திரைப்படங்களிலும் நடிப்பு

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தீபத்தின் மனைவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தீபக் இருக்கும் போது அவருக்கு சப்போர்ட் செய்து தினமும் போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தார். எட்டாவது சீசனில் பல போட்டியாளர்களுக்கு PR டீம் வேலை பார்க்கும் போது தீபத்திற்கு அவருடைய மனைவி சப்போர்ட் அதிகமாக இருந்தது. அதுபோல தீபக் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். அதிலும் இவனுக்கு தண்ணியில கண்டம், காதல் வைரஸ் உட்பட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

Vijay TV Deepak

திருமண நாள் கொண்டாட்டம்

திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிய கொடுத்தது சீரியல் தான். அதுபோல விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற சேனல்களிலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய 17 ஆவது திருமண நாளை தன் மனைவியோடு கொண்டாடி இருக்கிறார்.

வாழ்த்துக்கள்

அப்போது எடுத்த புகைப்படங்களை தீபக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தன்னுடைய வளர்ச்சிக்கு தன்னுடைய மனைவி தான் முழு சப்போர்ட் என்று பல இடங்களில் தீபக் கூறி இருக்கிறார். இந்த தம்பதிக்கு ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+