ராஜா வெற்றி பிரபு கிடைக்க தீபிகா கொடுத்து வச்சிருக்கணும்! என்றால்? சர்ச்சைக்கு நடுவே நண்பர் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபிகா வெங்கடாசலம் பற்றிய சர்ச்சை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் அவரது கணவர் ராஜா வெற்றி பிரபுவை பற்றி அவருடன் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த டால்பி சத்யா பேசியிருக்கும் விஷயம் தற்போது கவனம் பெற்றுள்ளது. ராஜா வெற்றி பிரபு மாதிரி ஒரு ஆள் கிடைத்தது தீபிகாவின் அதிர்ஷ்டம் என்ற ரீதியில் அவர் பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் பிரபல இயக்குனர் மகள் தனது youtube வீடியோவில் பேசிய சில விஷயங்கள் தீபிகாவை பற்றி தான் என்று நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். ஆனால் அந்த வீடியோவில் தீபிகாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாததால் அது உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் தீபிகா தான் சூட்டிங்கில் வெளியே இருக்கிறேன் ஆனால் ஊருக்கு திரும்பி வந்ததும் நான் தன்னை பற்றிய சர்ச்சைக்கு லீகலாக நடவடிக்கை எடுப்பேன் என்று போஸ்ட் போட்டு இருக்கிறார்.

Deepika

கனா காணும் காலங்கள் நடிகர்

இந்த சூழ்நிலையில் கனா காணும் காலங்கள் சீரியலில் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபுவுடன் நடித்த டால்ஃபி சத்யாவின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சத்யா பேசுகையில் நானும் தீபிகாவும் ரொம்ப குளோஸ். 2 பேரும் அடிக்கடி சண்டை போட்டுப்போம். சோசியல் மீடியாவில் போஸ்ட் போடுவது பற்றி கூட எங்களுக்குள் சண்டை வரும். எதற்கு சண்டை வருகிறது என்றே தெரியாது, அடிக்கடி சின்ன சின்ன விஷயத்திற்காகவும் சண்டை வரும்.

நான் அவளை எத்தனையோ முறை பேசியிருக்கிறேன் ஆனால் அந்த சமயத்தில் கூட ராஜா வெற்றி பிரபு எதுவுமே சொல்ல மாட்டான். விடு ப்ரோ அவ புரிஞ்சுக்குவான்னு சொல்லுவான். உண்மையை சொல்லனும்னா ராஜா வெற்றி பிரபு கிடைக்க தீபிகா தான் கொடுத்து வச்சிருக்கணும் என்று சத்யா சொல்லி இருக்கிறார். விஜே தீபிகா வெங்கடாசலம் மற்றும் ராஜா வெற்றி பிரபு இருவருக்கும் ரசிகர்களிடையே பிரபலத்தை பெற்று தந்தது கனா காணும் காலங்கள் சீரிஸ் தான்.

தீபிகா- ராஜா வெற்றி பிரபு திருமணம்

இந்த சீரிஸில் இருவரும் வேற வேற கேரக்டரில் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். பல வருட நட்புக்கு பிறகு அந்த உறவுக்கு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2023 இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு இருவரும் தங்களது புகைப்படங்கள், வீடியோக்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அப்போது கூட இருவருக்கும் வயது வித்தியாசம் என்ற ஒரு விமர்சனம் வந்தது. ஆனால் ராஜா வெற்றி பிரபு என்னை விட 10 மாதம் மூத்தவர் என்று அந்த சர்ச்சைக்கு தீபிகா விளக்கம் கொடுத்திருந்தார்.

Deepika

தீபிகா பற்றிய சர்ச்சை

அதுபோல இவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருப்பதாக அடிக்கடி சோசியல் மீடியாவில் போஸ்ட்கள் போட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் சமீபத்தில் இயக்குனர் பிரபு சாலமன் மகள் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் ஒரு பெண் நடிகை சீரிஸில் அவருடன் நடித்த நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் அந்த கணவருக்கு உண்மையாக இல்லை, இன்னொருவருடன் பழகிக் கொண்டிருக்கிறார். தான் எல்லோருக்கும் உதவி செய்கிறேன் என்று வெளியே போஸ்ட் போட்டு கொண்டிருக்கிறார் ஆனால் அதற்கு பின்னாலும் பல ஏமாற்று வேலைகள் இருக்கிறது என்பது போன்று பேசியிருந்தார்.

ஆனால் அந்த வீடியோவில் தீபிகா பெயரை அவர் சொல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் தீபிகாவை தான் இவர் சொல்கிறார் என்று சொல்லிவிட்டனர். அதை வைத்து தான் இப்போ விமர்சனம் எழுந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே இப்போ தீபிகாவின் நண்பர் பேசிய பேட்டியும் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+