வாவ்.. டோட்டல் தெய்வமகள் குடும்பமே நாயகியில் மீண்டும் வர்றாங்களாமே!
சென்னை: நாயகி சீரியலில் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளனர். கையோடு, 27ஆம் தேதி ஒளிபரப்பாக போகிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் தெய்வமகள் சீரியலில் நடித்த நடிகர்கள் மீண்டும் இதிலும் நடிக்கிறார்கள் என்பது தான் போனஸ் செய்தி.
நாயகி சீரியல் சன் டிவியில் இரவு ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. முன்னணி சீரியலாக இருந்த இந்த சீரியலுக்கு டிஆர்பி ரேட் அதிகமாக இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தான் இந்த லாக்டோன் வந்து சீரியலை தொடர்ந்து ஒளிபரப்பாக முடியாமல் போனது. ஆனால் தற்போது ஷூட்டிங் ஆரம்பித்த நிலையில் இப்போது கதையும் மாறிவிட்டது.

திரு, ஆனந்தி கிடையாது
இந்த சீரியலில் இதுவரை நடித்து இருந்தவர்களும் அதுவும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர்களே இதில் இப்பொழுது இல்லை. திரு, ஆனந்தி கேரக்டர்தான் இந்த சீரியலில் முக்கியமான கதாநாயகன் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இவர்களால் இப்பொழுது சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால் இந்த இரு கேரக்டரையும் அப்படியே தூக்கி விட்டார்கள்.

தெய்மகளிலிருந்து ஷிப்ட்
அவர்களைத் தூக்கி விட்ட கையோடு கலகலப்பாக சீரியலை கொண்டு செல்வதற்காக பல அறிமுகங்கள் வந்திருக்கின்றன. அதுவும் ஒரே சீரியலில் இருந்தே பலர் இதில் வந்திருக்கிறார்கள். ஆமாங்க தெய்வமகள் சீரியலில் இருந்து தான் இதில் புதிய கதாபாத்திரங்கள் வந்திருக்கிறார்கள். தெய்வமகள் சீரியலில் பிரகாஷ் ஆக நடித்த கிருஷ்ணாவும், அவரின் அண்ணன் ராஜு கேரக்டரில் நடித்த அரவிந்த் மற்றும் வினோதினியாக நடித்த சுகாசினியும் இதில் வருகிறார்கள்.

நட்சத்திரா நாகேஷ்
அதேபோல பிரகாஷின் அம்மாவாக ஜானகி கேரக்டரில் நடித்த வெண்ணிற ஆடை நிர்மலா, ராஜுவின் பிரண்டாக கணேஷ் கேரக்டரில் நடித்த ரவியும் இந்த சீரியலில் நடிக்கவுள்ளனர். அதுமட்டுமல்ல லட்சுமி ஸ்டோர் சீரியல் கதாநாயகியாக நடித்த நட்சத்திரா நாகேஷும் இதில் இணைந்து இருக்கிறார். இவர்கள் அனைவரையும் மொத்தமாக பார்ப்பதால் ரசிகர்கள் மீண்டும் தெய்வமகள் சீரியல் போன்று இது இருக்குமா என்று ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.

அமர்க்கள அண்ணியார்
சிலர் இதில் தெய்வமகள் சீரியலில் பிரகாஷின் மனைவியாக நடித்த வாணி போஜன் பிரகாஷின் அண்ணியார் ஆக நடித்தவரும் இருந்தால் செமையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றார்கள். சொல்ல முடியாதுங்க.. போற போக்கில் அவர்களையும் கூட இழுத்துப் போட்டு கல்லா கட்டா வாய்ப்புண்டு. ஆனால் அவர்கள் இருவரும் பெங்களூர்க்காரர்கள் என்பதால் வருவது கொஞ்சம் கஷ்டம்தான்.

அது வேற இது வேறங்க
இது தெய்வமகள் போல இருக்குமா என்று கேட்டால், கிருஷ்ணாவின் பதில் இதுதான்.. அது வேற சீரியல் இது வேற சீரியல். இனி எங்களை நாயகி குடும்பமாக மட்டுமே பாருங்கள். தெய்வமகள் சீரியலுக்கு தந்த ஆதரவை இந்த சீரியலுக்கு தாருங்கள். இது அதைவிடவும் கலகலப்பாக இருக்கும். அந்த சீரியலில் ரொம்ப கோவக்காரனாக நடித்து இருப்பேன். ஆனால் இந்த சீரியலில் ரொம்ப கலகலப்பாக உங்களை என்ஜாய் பண்ணுவேன். இதற்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

ரசிக்க நாங்க ரெடி மக்கா
மொத்தத்தில் புது கதையோடு இனி வரப்போகிறது என்று எல்லாரும் நாயகியை எதிர்பார்த்து இருக்கிறார்கள். தெய்வமகள் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்த வெண்ணிர ஆடை நிர்மலா தான் இந்த சீரியலிலும் அம்மாவாக நடிக்கப் போகிறார் போல. தெய்வமகள் சீரியலில் இவர்கள் எல்லோரும் ஹைகிளாஸ் லுக்கில் இருப்பார்கள் .ஆனால் இந்த சீரியலில் எல்லாரும் கிராமத்து சாயலில் இருக்கிறார்கள்.

கிராமத்துக் கதை
கிருஷ்ணா எண்ணெய் தேய்த்து தலையை வாரி பக்கா கிராமத்துக்காரர் போல மாறியிருக்கிறார் .மேலும் இதில் டிக் டாக் பிரபலம் ஒருவரும் அறிமுகமாகியிருக்கிறார். இவர்கள் எல்லோரும் லைவில் வந்து ரசிகர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்கள். இணையதளத்தில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. என்ன கதை என்று தெரியாமல் புதுமுகங்களின் கேரக்டரையும் புரிந்து கொள்ளமுடியாமல் ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications