"ஓய் என்னடி பண்ற பொண்டாட்டி," கண்களில் காதலுடன் பேசிய மாதம்பட்டி ரங்கராஜ்! ஜாய் கிரிஸில்டா வீடியோ
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ள நிலையில் ரங்கராஜ் தன்னிடம் கொஞ்சி பேசிய புதிய வீடியோவை ஜாய் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரங்கராஜ் தன்னை நலம் விசாரித்து தனக்கு அனுப்பிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஜாய் வெளியிட்டுள்ளார். அதில் "ஓய் என்னடி பண்ற? பொண்டாட்டி! ஐ மிஸ்யூ, லவ் யூ! வீட்டிற்கு போய் சாப்பிட்டுட்டு குளித்துவிட்டு டிரஸ் மாற்றிக் கொண்டு வந்துவிட்டேன்.

இன்டர்வியூ முடிந்துவிட்டது. 4 மணிக்கு மீட்டிங் இருக்கு. 2.30 க்கு கிளம்புகிறேன். காபி குடித்துவிட்டேன். ஐ மிஸ் யூ, லவ் யூ டாட்டா" என கூறி முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ்
சமையல் கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பணக்காரர்களின் வீட்டு விசேஷங்களுக்கு விதவிதமான சமையல் செய்து அசத்தி வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவர் நடுவராக கலந்து கொண்டுள்ளார்.
எந்த படங்களில் நடித்தார்
இவர் "மெஹந்தி சர்க்கஸ்", "கேசினோ", "மிஸ் மேகி", "பென்குயின்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அந்த பெண் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
7 மாத கர்ப்பம்
தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறார். அந்த குழந்தைக்கு அப்பா, மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்கிறார். இந்த நிலையில் இந்த புகைப்படங்களை ஏன் வெளியிட்டாய் என கேட்டு ஜாயிடம், ரங்கராஜ் சண்டையிட்டதாக சொல்லப்படுகிறது.
குக் வித் கோமாளி செட்டில் தாக்குதல்
இந்த நிலையில் ரங்கராஜை சந்தித்து நியாயம் கேட்க முற்பட்ட போது குக் வித் கோமாளி சூட்டிங்கிலும் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றிலும் வைத்து தன்னை கடுமையாக தாக்கியதாக ஜாய் தெரிவித்திருந்தார். அதன் பிறகு அவரை தன்னால் சந்திக்க முடியவில்லை என கூறினார்.
ஆசை வார்த்தை
இந்த நிலையில் தன்னை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டதற்கு நியாயம் கேட்டு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா, தனது தாயுடன் புகார் அளித்திருந்தார்.
கமிஷனர் அலுவலகத்தில் புகார்
புகார் அளித்துவிட்டு வெளியே வந்த ஜாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நானும் மாதம்பட்டி ரங்கராஜும் சில ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அதன்பிறகு எம்.ஆர்.சி. நகர் அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் எங்களது திருமணத்தை பதிவு செய்யவில்லை.
கருவை கலைக்கச் சொல்லி துன்புறுத்தல்
நான் எங்கள் திருமணம், குழந்தை உருவாகியிருப்பது குறித்து வெளியே சொன்னதற்கு பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் என்னை சந்தித்தார். கருவைக் கலைக்கச் சொல்லி என்னை அடித்து துன்புறுத்தினார். ஏற்கெனவே இரு முறை கருவை கலைத்தார். தற்போதும் கலைக்க சொன்ன போது நான் முடியாது என சொல்லிவிட்டேன். இதனால் என்னை குக் வித் கோமாளி செட்டில் வைத்து தாக்கினார். என் குழந்தைக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். நான் என் குழந்தைக்காக போராடுகிறேன்." இவ்வாறு ஜாய் கிரிஸில்டா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தன்னை திருமணம் செய்து கொண்டு தன்னுடன் குழந்தை பெற்றது உண்மை என்பதை தெரிவிக்கும் வகையில் ஜாய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications