Deva: சபேசன் இறப்புக்கு பிறகு அவரை பற்றி கண்கலங்க பேசிய தேவா! மேடையில் சொன்ன ரகசியங்கள்
சென்னை: 'சமுத்திரம்', 'தவமாய் தவமிருந்து' உள்ளிட்டப் பல்வேறுத் திரைப்படங்களுக்கு இசையமைத்து, 90-களின் இறுதியில் முத்திரை பதித்த இசையமைப்பாளர் சபேஷ், கடந்த மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். அவர், பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. சபேஷும் அவரது சகோதரர் முரளியும் இணைந்து பலப் படங்களுக்கு இசையமைத்திருக்கின்றனர். சபேஷின் மறைவுத் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில், இசையமைப்பாளர் தேவா பேசிய உணர்ச்சிப்பூர்வமான பேச்சு அனைவரையும் உருக வைத்துள்ளது.

தேவாவின் கண்கலங்கியப் பாச பேச்சு
நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய தேவா, தனது சகோதரனை பற்றி பேசும் போதே கண்ணீர் சிந்திவிட்டார். "சின்ன வயசுல இருந்தே சபேஷ் பேசவே மாட்டான். அமைதியாவே இருப்பான். கஷ்டத்தைக்கூட வெளிய சொல்ல மாட்டான். கடைசி நேரத்தில் கூட 'அங்க வலிக்குது, இங்க வலிக்குதுன்னு' சொல்லவே இல்ல, சொல்லாமலே போயிட்டான். அவன் பிறந்து 68 வயசுல இறந்தான். நான் ஒன்னு வெளிப்படையா சொல்றேன். இத்தனை வருஷத்துல அவன் கூட ஒரு மணி நேரம் தான் நான் பேசி இருப்பேன்" என்று தேவா கூறி முடித்ததும், அரங்கமே கனத்தது.
ஒரு இறக்கை போயிடுச்சு
"ஒரு ஏரோப்ளேன் ஒரு இடத்துக்கு போய்ச் சேரனும்னா, சைடுல இருக்குற ரெண்டு றெக்கை தான் முக்கியம். அந்த ரெண்டு றெக்கை தான் எனக்கு சபேஷும் முரளியும். அதுல ஒரு றெக்கை போயிடுச்சு. ஆனா, அவன் இன்னும் வீட்ல தூங்கிக்கிட்டு இருக்குற மாதிரி தான் எனக்குத் தோணுது."
"எங்கக் குடும்பத்துல நாங்க எல்லாரும் ஒண்ணா இருப்போம். சபேஷ் தான் எங்கக் குடும்பத்துல முதல் முதல்ல கீபோர்டு வாசிச்சவன். ஃபாரினுக்குப் போனவன். ஸ்கூட்டர், கார், வீடு என எல்லாமே முதல் முதல்ல வாங்கினது அவன்தான். எனக்குக் கூட அவன்தான் வீடு கட்டிக் கொடுத்தான். இப்படி எல்லாமே முதல் முதல்ல செஞ்சவன், போகும்போதும் முதல்லயே போயிட்டான்."
அவன் இல்லனா நான் இல்ல
தேவாவின் இசையப் பயணத்தில் சபேஷ் மற்றும் முரளியின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். "அவன் இல்லனா நான் இல்ல. திருவிழாவில் அப்பா தோல் மேல தூக்கித் தன் பையனைக் காமிக்கிறது போல, சபேஷும் முரளியும் தான் அவங்க தோள் மேல என்னை தூக்கி சினிமாவ காமிச்சாங்க. ஒரு அண்ணன் முறையில அவனை என்னால இன்னும் மறக்க முடியவில்லை" எனக் கண்ணீருடனேயே பேசி முடித்தார்.
சபேஷ் - முரளியின் ஹிட் ஆல்பங்கள்
தேவாவின் தம்பிகளான சபேஷ் - முரளி இருவரும் இணைந்துப் பலப் படங்களுக்குச் சிறப்பான இசையமைப்பைத் தந்தனர். குறிப்பாக: 'சமுத்திரம்' படத்தில் வரும் அழகான சின்ன தேவதை போன்றப் பாடல்கள் இன்றும் மறக்க முடியாதவை. உணர்வுப்பூர்வமானப் பின்னணி இசையால் இவர்கள் முத்திரை பதித்தனர். அதேபோல தேவாவின் பல கானா பாடல்களை சபேசன் தான் பாடி இருக்கிறார்
ஒரு இசைக் குடும்பத்தின் மூத்த அண்ணனான தேவாவின் வெற்றிக்குத் துணையாக நின்ற தம்பியின் பிரிவு, அந்த இடத்தின் வெற்றிக்கு பின்னால் உள்ள உறவு பிணைப்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. சபேஷின் நினைவுகள் என்றும் தமிழ்ச் சினிமாவில் வாழும் இன்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications