மணிவண்ணன் படத்தில் "அந்த" ஒரு பாடலின் வரிக்காக என் மாமியார் என் கிட்ட சண்டை போட்டாங்க! தேவா கலகல!
சென்னை: மணிவண்ணனுக்காக நான் பாடுன ஒரு பாட்டுக்கு என் மாமியார் என்கிட்டயும் என் மனைவிகிட்டயும் ஒரே சண்டை போட்டாங்க. அப்புறம் அவங்களுக்கு நான் புரிய வைத்தேன் என இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.
தேனிசை தென்றல் தேவா! கானா பாடல்களை பாடிய இவருக்கு தேனிசை தென்றல் என பட்டம் கிடைத்தது என்றால் அவர் எந்த அளவுக்கு மெலடி பாடல்களை மெட்டமைத்துள்ளார் என பார்த்துக் கொள்ளுங்கள். இவர் டிடி தூர்தர்ஷனில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சிக்கு பாடல்களுக்கு இசையமைத்தார். மெட்ராஸ் தமிழில் சிறப்பாக பேசுவார்.

அது போல் தேவா தனது சகோதரர்களுடன் இளையராஜாவின் இசைக்கருவிகளை வாசித்து வந்தார். மனசுக்கேற்ற மகராசா படத்தின் மூலம் அறிமுகமானாலும் வைகாசி பொறந்தாச்சு படம்தான் இவருக்கு ரசிகர்களை சேர்த்தது. இவரது மெலடியை பார்த்து எம்.எஸ்.விஸ்வநாதன் தான் தேனிசைத் தென்றல் என அழைத்தார்.
அண்ணாமலை படத்தில் இவர் ரஜினிக்கென போட்ட டைட்டில் மியூசிக்தான் இன்றளவும் அவருடைய படங்களில் போடப்பட்டு வருகிறது. தேவா இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கானா பாடல்கள், தெய்வங்களை போற்றும் பாடல்கள், காதல் பாடல்கள் என நிறைய பாடல்களுக்கு இசையமைத்து பாடியும் இருக்கிறார்.
காதல் கோட்டையில் நலம் நலமறிய ஆவல், ஆசை படத்தில் புல்வெளி புல்வெளி பாடல் உள்ளிட்ட பாடல்கள் சூப்பர் ஹிட். இதன் பிறகு அண்ணாமலையில் ஒரு பெண் புறா பாடலை கேட்டு ரஜினிகாந்தே தேவாவை பாராட்டினாராம்.
தேவா தற்போதும் ஆடி திருவிழாக்களுக்கு இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இசை போட்டிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு வருகிறார். இவர் திருவேற்காடு கருமாரியம்மனின் தீவிர பக்தர். இவருடைய மகன்கள் ஸ்ரீகாந்த், சபேஷ் முரளி ஆவர். இவர்களும் இசையமைப்பாளர்கள்தான்.
இந்த நிலையில் தேவா தனது திரைத்துறை பயணங்கள் குறித்து ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது மனைவி ஒரு முறை கூட என் ரெக்கார்டிங்கை பார்த்ததே இல்லை. ஒரு நாள் கூட படத்தின் பூஜை எப்படி நடக்கிறது என்பதை பார்த்ததில்லை. அவருக்கு சினிமா பட பூஜை எப்படி இருக்கும் என்று கூட தெரியாது.
என் வீட்டுக்கு எதிரிலேயே ஸ்டூடியோ கட்டிவிட்டேன். ஆனாலும் அதற்குள் அவர் வரவே மாட்டார். ஆனால் நான் இசையமைத்து பாடிய பாடல்களில் நிறை குறைகளை சொல்வார். நான் பாடிய கானாங்கத்த மீனு வாங்கி பாடலில் கொதிக்குது கொதிக்குது, குக்கருல கொதிக்குது என பாடினேன்.
இதை கேட்ட என் மனைவி "ஏங்க மீனை யாராவது குக்கரில் வைப்பார்களா, மண் சட்டியில்தானே வைத்து சமைப்பார்கள்" என கேட்டிருந்தார். இப்படியாக பாயிண்ட்டை பிடித்துவிடுவார்கள். ஒரு நாள் நான் பாடிய பாடலை கேட்டு என் மாமியாருக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துவிட்டது.
மயிலாப்பூரில் கோயில் திருவிழாவில் என் மாமியார் என் கச்சேரியை பார்த்தாங்க. அப்போது நான் காப்பித் தண்ணி போடட்டுமா, டீ தண்ணி போடட்டுமா சொல்லுங்க மருமகனே என்ற பாடலை பாடினேன். அதில் மணிவண்ணன் கேட்பாரு, பெரிய பொண்ணு நல்லாருக்கா, சின்ன பொண்ணு நல்லாருக்கானு! அதற்கு நான் (மன்சூர் அலிகானுக்காக), "சின்ன பொண்ணு வேணா மாமா, பெரிய பொண்ணு வேணா மாமா, அத்த மட்டும் போதும் மாமா"னு பாடினேன் (இந்த பாடல் மருமகனே மருமகனே படத்திற்காக மணிவண்ணன்- மன்சூர் அலிகானுக்காக பாடியது).
இப்படி பாடியதும் என் அத்தைக்கு (மாமியாருக்கு) பயங்கர கோபம் வந்துவிட்டது. என்னா பாட்டு பாடுறான்னு கேட்டு என் சொந்தகாரர்களை எல்லாம் கச்சேரியை விட்டு கூட்டிட்டு போய்விட்டார்.பிறகு நான் இது சினிமாவில் வர பாட்டு, காமெடிக்காக சிசுவேசன் பாட்டு, இதை மணிவண்ணன்தான் பாடுவார் என நான் சமாதானப்படுத்தினேன். இவ்வாறு தேவா தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கானா பாடல்களை விட மெலடி பாடல்களுக்கு இசைமயமைப்பதுதான் சவாலானது என்றும் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications