சரிகமபவில் மகள் இனியா பாடிய பாடல்.. அந்த வரியை கேட்டதும் கண்ணீர் விட்ட தேவயானி! அம்மானா சும்மாவா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் தேவயானியின் மகள் இனியாவும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த வாரத்தில் வித்தியாசாகர் பாடல்கள் ரவுண்டு நடைபெற்றது. அப்போது இனியா பாடிய பாடலை கேட்டு தேவயானி கண்கலங்கி அழுது இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவால் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் சமீபத்தில் தான் ஜூனியர்களுக்கான சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்தது. அதில் டைட்டில் வின்னராக திவினேஷ் வெற்றி பெற்றார். அவரை தொடர்ந்து ரன்னராக ஹேமித்ரா தேர்வானார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்த அடுத்த வாரத்திலேயே சீனியர்களுக்கான சீசன் 5 தொடங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பம் முதலே இந்த நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தேவயானியின் மகள் இனியா
இதில் நடிகை தேவயானியின் மகள் இனியாவும் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதில் மூத்த மகள் நடிகையாக வேண்டும் என்று அதற்கான படிப்புகளை முடித்து இருக்கிறார். அதோடு பாடல் பாடுவதிலும் அதிக ஆர்வம் உண்டு என்பதால் அதற்கான பயிற்சிகளையும் எடுத்து இருக்கிறாார்.
இந்த நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி மக்கள் முன்பு தன்னுடைய திறமையால் தான் வெற்றி பெற வேண்டும் என்று இனியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை ஆரம்பத்திலேயே அவர் சொன்னதும் பலரும் அவரை பாராட்டி வந்தனர். பொதுவாக சினிமாவில் ஒரு நடிகரின் வாரிசுகள் அவரைப் போலவே நடிக்க தொடங்குவார்கள். அல்லது இயக்குனர் குடும்பத்திலிருந்து வந்தால் அவரைப் போலவே இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்வார்கள்.
மகளின் தன்னம்பிக்கை
ஆனால் அப்பாவும் அம்மாவும் நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் நிலையில் மகள் தன்னுடைய திறமையால் மக்கள் முன்பு ஜெயிக்க வேண்டும் என்று எடுத்த முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள். இனியா முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் ஆடிஷனின் போது இளையராஜாவின் மகளான பவதாரணி பாடிய "மயில் போல பொண்ணு ஒன்னு" என்ற பாடலை பாடியிருந்தார். இது தேவயானி படத்தில் இடம்பெற்ற பாடலாக இருந்தாலும் இனியாவின் குரலில் இந்த பாடலை கேட்கும் போது அனைவரையும் வியக்க வைத்திருந்தது.
தேவயானியின் மகளுக்கு இப்படி ஒரு திறமையா? என்பதுதான் பலருடைய கேள்வியாக இருந்தது. தன்னுடைய அம்மாவை போலவே ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் பாரம்பரியமான உடை அணிந்து வருகிறார். முழுமையாக பாவாடை தாவணி மற்றும் லெஹங்காவில் கலந்து கொண்ட இனியா இந்த வாரத்தில் பட்டு பாவாடை சட்டை அணிந்து இருக்கிறார். அதோடு அம்மாவைப் போல மூக்குத்தியும் அணிந்திருக்கிறார். இது இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
வித்யாசாகர் ரவுண்டு
அதேபோல இந்த வாரத்தில் வித்தியாசாகர் ரவுண்டு நடைபெறுவதால் வித்தியாசாகரின் பாடல்கள் அனைத்து போட்டியாளர்களும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது இனியா "அபியும் நானும்" திரைப்படத்தில் இடம்பெற்ற "வா வா என் தேவதையே" பாடலை பாடியிருந்தார். கடந்த வாரத்தில் இனியாவிற்காக தேவயானி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. தேவயானிக்கு சூட்டிங் இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று இனியா கூறியிருந்தார்.
அதே போல தன்னுடைய மகளுக்காக எல்லா போட்டியாளர்களின் பெற்றோர் அமர்ந்திருக்கும் இடத்தில் தேவயானியும் அமர்ந்திருந்தார். அப்போது இனியா பாடும் போது "பெண்பிள்ளை தனியறை புகுகையிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன்" என்ற வரிகளை கேட்டபோது தேவயானி கண்கலங்கி அழுது இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் கருத்து
பெண் குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்த பாடல் வரிகள் மிகவும் நெருக்கமாகவும், மன வலிகளை சொல்லும் விதத்திலும் இருக்கும். தேவயானி என்னதான் நடிகையாக எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இந்த பாடலை தன்னுடைய மகள் பாடும் போது அதைக் கேட்டு ஒரு அம்மாவாக கண்கலங்கி இருக்கிறார். வா வா தேவதையே பாடலை கேட்கும் போது உங்கள் மனதில் சந்தோஷ நினைவுகள் வருமா அல்லது வருத்தமான நினைவுகள் வருகிறதா பாஸ்?
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications