ஜீ தமிழ் சரிகமப.. தேவயானி மகள் இனியாவுக்கு வாழ்த்து! உயரம் குறைவா? கலர் கம்மி? ராஜகுமாரன் சபாஷ் நச்
சென்னை: என் மகள் இனியா கேமரா முன்பு நடிக்க வந்தால், மிகவும் சிறப்பாக இருக்கும்.. அது எங்களுக்கு தெரியும்.. ஆரம்பத்தில் ரேவதி மேடம் நடிக்க வந்தபோது, இப்படித்தான் குட்டியாக இருந்தார்.. தன்னுடைய நடிப்பால் உச்சத்துக்கு போனார்கள். இங்கே உருவம் முக்கியம் இல்லை.. ஒருவரின் திறமைதான் பேசும் என்று தேவயானி கணவர் ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ராஜகுமாரன், தேவயானி தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் இனியா, Zee தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு, மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி அனைவரையும் மலைக்க வைத்தார்.

டிட்டோ பவதாரணி
டிட்டோ பவதாரணியை போலவே பாடிய இனியாவை, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.. இந்நிலையில், இயக்குநர் ராஜகுமாரன், தன்னுடைய மகள் இனியாவுடன் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்..
அதில், "திருமணத்திற்கு பிறகு நமக்கு குழந்தை வேண்டாம் என்று தேவயானியிடம் சொன்னேன். இந்த உலகில் நாம பிறந்தே இவ்வளவு கஷ்டப்படுறோம். நமக்கு குழந்தையும் பிறந்து, அதுவும் கஷ்டப்படணுமா என்று நினைத்துதான், "உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை. நம்ம இரண்டு பேரும் இருந்தா போதும் நமக்கு குழந்தை வேண்டாம்" என்றேன்.
குழந்தை வரம் வேண்டி
ஆனால், தேவயானி அதை ஒத்துக்கல.. குழந்தை வேண்டும் என்பதற்காக அவங்க போகாத கோயிலே இல்லை. குழந்தை வரம் வேண்டும் என தேவயானி ஸ்ரீரங்கம் பெருமாளை வேண்டுனாங்க, அங்க வேண்டுதல் படியே எங்களுக்கு குழந்தையும் உருவாச்சு. பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில்தான் டெலிவரி டேட் தந்திருந்தாங்க. ஆனால், ஜனவரியிலேயே வலி வந்துவிட்டது. நான் மிகவும் பயந்து போய் ஹாஸ்பிடல்ல சேர்த்தேன். 11 மணிக்கு வயிறு வலி வந்துவிட்டது..
நாங்கள் இளஞ்சோடி என்பதால், துணைக்கு அந்த பிரசவ நேரத்தில் எங்களுடன் யாருமில்லை.. பக்கத்து வீட்டிலிருந்த தம்பதியினர் மருத்துவமனையில உடனிருந்தார்கள்.. தேவயானியை பிரசவ வார்டுக்கு அழைத்து சென்று விட்டார்கள்..
திடீரென நள்ளிரவில், ஏதோ குழந்தை அழுகிற சத்தம் கேட்குதே என்று சொன்னேன்.. அப்போதுதான் அது உங்கள் குழந்தைதான் அழுகிறது சார் என்றார்கள்.. வைகுண்ட ஏகாதேசி அன்று இரவு 12.05 மணிக்கு இனியா பிறந்தாள்.. அதாவது பிரசவத்துக்கு 48 மணி நேரம் முன்பே பிறந்துவிட்டாள்..
திறமையானவர் இனியா
இத்துனூண்டு இனியா இருக்கிறாளே என்று நினைக்காதீங்க.. பரதநாட்டியம், கீபோர்டு, பாட்டு கிளாஸ், ஏஆர் ரஹ்மான் இன்ஸ்டியூடிட்டில் பியானோ, கிடார் வாசித்து சர்ட்டிபிகேட் வாங்கி வைத்திருக்கிறாள்.. இதைத்தவிர சிலம்பம், வேல்சண்டை, கத்தி சண்டை, குங்பூ, குத்து சண்டை., இதெல்லாம்கூட படிச்சிட்டு, சர்ட்டிபிகேட் வைத்திருக்கிறாள். சுருள் கத்தி சுழற்றுவது, நெருப்பு பந்தம் சுழற்றுவது என எல்லாமே கற்று வைத்திருக்கிறாள்..
ரேவதி நடிப்பில் உச்சம்
இது எல்லாவற்றையும்விட இனியா அழகாக பாடுவாள்.. மதன் கார்க்கி இனியாவின் குரலை பாராட்டி வாய்ஸ் நோட்டு அனுப்பி வைத்திருக்கிறார்..
உயரமாக இல்லையே, நிறம் குறைவாக இருக்கிறோமே, பற்களில் சந்து உள்ளதே என்பதால், கேமராவுக்கு பின்னால் பணியாற்ற இனியா நினைக்கிறார்.. உண்மையிலேயே இனியா கேமரா முன்பு நடிக்க வந்தால், சிறப்பாக இருக்கும்.. ஆரம்பத்தில் ரேவதி மேடம் நடிக்க வந்தபோது, இப்படித்தான் குட்டியாக இருந்தார்.. தன்னுடைய நடிப்பால் உச்சத்துக்கு போனார்கள்.
சரிதா, யோகிபாபு
அதேபோல, சிகப்பாக இருந்தால்தான் நடிக்க முடியும் என்பதெல்லாம் ஒருகாலத்தில் மாயையாக இருந்தது. சரிதா மேடம் கறுப்பாக, குள்ளமாக நடிக்க வந்தார், ஆனால், தன்னுடைய வெறும் கண்களை மட்டுமே வைத்து கொண்டு, அவ்வளவு நடிப்பையும் கொட்டினார்.. கண்களில் அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தினார்..
யோகிபாபுவைவிட நான் அழகாகவே இருக்கிறேன்.. அதில் எனக்கு சந்தேகம் இல்லை, இதில் யோகிபாபுவுக்கும் சந்தேகம் இருக்காது.. ஆனால், யோகிபாபுவைதான் அனைவரும் ரசிக்கிறார்கள்.. உருவம் அங்கே முக்கியமில்லை.. காரணம், என்னைவிட யோகிபாபு நடிப்பில் திறமையானவர்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications