Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3BHK: நானும், சரத்குமார் ஒரு படத்தில் நடிக்கணும்னா..! ரகசியங்களை வெளிப்படையாக பேசிய தேவயானி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார், தேவயானி, சித்தார்த் உட்பட பலர் நடித்த 3BHK படம் நாளை ஜூலை நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்காக செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று மூன்றாம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் தேவயானி பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 3BHK படத்தில் நடித்த அனுபவம் குறித்து தேவயானி பேசி இருக்கிறார்.

சமீப காலமாக அதிக பட்ஜெட்டில் எடுக்கும் திரைப்படங்கள் மக்களில் மத்தியில் அதிகமாக ட்ரோல் செய்யப்படுகிறது. இந்த திரைப்படங்கள் வெளியாகும் முன்பே படத்தை பற்றிய பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மனதில் ஏற்பட்டு விடுகிறது. அதனால் படத்தில் சின்ன குறைகள் கூட ரசிகர்களுக்கு பெரிதாக தெரிகிறது. ஆனால் குறைவான பட்ஜெட்டில் எடுக்கும் சில திரைப்படங்கள் ஆகா ஓகோ என்று பாராட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் எல்லாம் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து பல மடங்கு லாபம் பெற்ற படமாக வெற்றி பெற்று இருக்கிறது.

Devayani Sarathkumar Siddharth

எதார்த்தமான படம்

அதுபோல ஒரு சில இயக்குனர்கள் இப்போது குறைவான பட்ஜெட்டில் படம் எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். அதிலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் எதார்த்தமாக கதையை ரசிகர்கள் விரும்பி வருகிறார்கள். மலையாள படங்களில் கதாநாயகிகளுக்கு அதிக மேக்கப் இல்லாமல் எதார்த்தமான கதை இருக்கும் அதை இப்போது தமிழ் ரசிகர்களும் விரும்பி வருகிறார்கள். அதுபோலத்தான் 3 பிஹெச்கே படமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சரத்குமார் மற்றும் தேவயானி நடிப்பு

இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை தேவயானி குடும்ப தலைவர்களாக நடிக்க அவருடைய மகனாக நடிகர் சித்தார்த் நடிக்கிறார். சொந்த வீடு வாங்க வேண்டும் என்று சென்னையில் கனவோடு இருக்கும் ஒரு சராசரி குடும்பத்தை பற்றி தான் இந்த படம் வருகிறது. கடைசியில் இந்த குடும்பத்தினர் ஆசைப்பட்ட மாதிரி வீடு வாங்கி விட்டார்களா? இல்லையா? என்பதுதான் கதை. இந்த திரைப்படத்தில் சூரியவம்சம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த சரத் குமாரும் தேவயானியும் மீண்டும் நடித்து இருப்பது பலருடைய எதிர்பார்ப்பை எகிர வைத்திருக்கிறது.

3BHK திரைப்பட கதை

சூரிய வம்சம் படத்திற்கு பிறகு சரத்குமார் தேவயானியும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனாலும் இந்த திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தை பற்றி நேற்று நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் தேவயானி பேசிய பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தேவயானி பேசும் போது "இந்த படத்தின் படப்பிடிப்பு நாட்கள் ரொம்பவும் அருமையாக இருந்தது. 3BHK படம் ரொம்பவே பாசிட்டிவான படம்.

Devayani Sarathkumar Siddharth

தேவயானி பேட்டி

நேர்த்தியான ஒரு படம் எடுப்பதற்கு நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். இந்த படத்தில் நாங்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்திருக்கிறோம். நடிப்பதற்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். சரத்குமார் சாரும் நானும் நடிக்க வேண்டும் என்றால் அந்த அளவிற்கு ஒரு கதை இருந்தால் மட்டுமே நடிக்க முடியும். இந்த கதைக்கு நாங்கள் இருவரும் தேவைப்பட்டதால் தான் எங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்" என்று தேவயானி பேசி இருக்கிறார்.

சித்தார்த் பேட்டி

முன்னதாக பேசிய சித்தார்த் "இந்த திரைப்படத்தில் தேவயானி மற்றும் சரத்குமார் இருவரும் இந்த படத்தின் வெற்றிக்காக அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். தேவயானி மேடம் வீட்டில் மட்டும் குடும்பத் தலைவியாக அல்ல இந்த திரைப்பட செட்டிலும் அப்படித்தான் இருந்தாங்க. யாரேனும் உடைந்து போய் இருந்தாலோ, அல்லது ஏதேனும் ஒரு பிரச்சனையில் இருந்தாலும் அவர் எப்போதும் சிரித்த முகமாகவே இதெல்லாம் ஒரு பிரச்சனையா வாங்க நம்ம சூட்டிங் போகலாம் என்று அனைவரையும் குழந்தை போல பார்த்துக் கொண்டார்" என்று கண்கலங்க பேசி இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+