Naam iruvar namaku iruvar serial: கைதியின் டைரி கதை.. கைதி படம் டிவிஸ்ட்.. அட களவாணிகளா...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேவி மாயனுக்கு ஹோம் வொர்க் குடுத்துட்டு வெளியில போயிட்டா. நம்ம மாயனுக்கு.. அட நம்ம கைதியின் டைரி கதை மாதிரிதானுங்க விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கதை போய்கிட்டு இருக்குது.

மாயனுக்கு ஹாட் ஸ்டாரில் கைதி படம் சுடச்சுட பார்த்துடணும்.... தாத்தாகிட்டே ஹோம் வொர்க்கை செய்து தர சொல்லி கேட்கறான்.

தாத்தா தேவிக்கு பயந்துகிட்டு மாட்டேன்னு சொல்றார். மாயன் ஹாட் ஸ்டார்ல கைதி படம் பார்க்கணும் கெஞ்சறான்.

கை நடுங்காம

கை நடுங்காம

தாத்தாகிட்டே கை நடுங்காம எழுத சொல்லி கெஞ்சறான். தேவி வந்துட்டா என்னை திட்டுவான்னு தாத்தா பயப்பட, வெத்தலை இடிச்சுக்கிட்டு இருக்கும் பாட்டி, தேவி வந்தா நான் சிக்னல் குடுக்கறேன்னு சொல்றாங்க.

மாயன் ஹாயாக

மாயன் ஹாயாக

நோட்டை தாத்தாவிடம் குடுத்துட்டு மாயன் ஹாயாக ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு சோஃபாவில் படுத்துக்கொண்டு கைதி படம் பார்த்துகிட்டு இருக்கான். திடீரென்று பாட்டி வெத்திலை இடிக்கும் உலக்கையை வேகமாக இடிச்சு சிக்னல் கொடுக்கறாங்க.

தாத்தா உஷார்

தாத்தா உஷார்

தாத்தா உஷார் ஆகி, மாயனை எழுப்பி உட்கார வச்சு நோட்டை அவன் கையில் குடுத்து, பாட்டி சிக்னல் கொடுத்துட்டா.. தேவி வந்தாச்சு போல இருக்கு மாயான்னு சொல்றார். மாயன் எழுந்து உட்கார்ந்து எழுதுவது போல பாவனை செய்ய, பாட்டி கை மட்டும் இன்னும் ஓயவில்லை.

போதும் நிறுத்து

போதும் நிறுத்து

போதும் நிறுத்து கெழவின்னு தாத்தா சொல்ல, அதற்குள் தேவி வர அப்போதுதான் பாட்டி நிறுத்தறாங்க. என்னாச்சுன்னு தேவி கேட்க ஒண்ணுமில்லையேன்னு பாட்டி சொல்ல. இல்லையே.. என்னவோ நடந்திருக்குன்னு தேவி முனக...பாட்டி தலையை குனிஞ்சுக்கறாங்க.. இப்படி சுவாரஸ்யமாக போகுது விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+