அப்போ என்னை எங்க கை வச்சு தள்ளுனான்னு தெரியுமா? ஆனால் இப்போ? தனலட்சுமியை கலாய்க்கும் ரசிகர்கள்
அசீம் அண்ணா அப்படி தள்ளவே இல்லை என்று கூறிய தனலட்சுமிக்கு நெட்டிசன்கள் குறும்படம் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் தனலட்சுமி அசீம் பற்றி கூறிய வார்த்தையும் தற்போது வெளியே வந்து பேசும் வார்த்தையும் வேறாக இருக்கிறது என்று ரசிகர்கள் குறும்படங்களையும் மீம்ஸ்களையும் வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.
தனலட்சுமி பொம்மை டாஸ்டில் அசீம் தன்னை எங்கே கைவைத்து தள்ளுனான் தெரியுமா என்று அவனை நான் சும்மா விட மாட்டேன் என்று கத்தி பேசியிருந்தார்.
இப்போது அசீம் அண்ணா என்னை தப்பான அர்த்தத்தில் அந்த மாதிரி பிடித்த தள்ளவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடைசி நேரம் மாற்றம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து மூன்று வாரங்கள் ஆகி இருக்கின்றது. இந்த நிலையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் சீசன் முடிவடைந்தும்
பல வாரங்களாக பிக் பாஸ் ஆறாவது சீசன் புகைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதுவும் கடைசி நேரத்தில் அசீம் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது ரசிகர்களை மட்டுமல்லாமல் பிக் பாஸ் போட்டியாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. விக்ரமன் டைட்டில் ஜெயிப்பார் என்று ஆரம்பத்தில் இருந்தே நம்பிக்கொண்டிருந்த நிலையில் அவர் ஜெயிக்கவில்லை என்பது குறித்து அவருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாற்றம்
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு விக்ரமன் ஒரு பக்கம் செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும்போது டைட்டில் ஜெயித்த அசீம் ஒரு பக்கம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அசீமிற்க்கு ஆதரவாக தனலட்சுமி தற்போது சமூக வலைதளத்தில் விக்ரமனின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அதிகமாக அசீம் உடன் சண்டையிட்ட தனலட்சுமி அந்த நேரத்தில் தனலட்சுமிக்கு ஆதரவாக இருந்த விக்கிரமனை இப்போது திட்டிக்கொண்டு அசீமிற்க்கு ஆதரவாக இருப்பது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

விக்ரமன் மீது குற்றச்சாட்டு
அசீம் அப்யூசர் என்றால் விக்ரமனும் அப்யூசர் தான். ஏன் என்றால் விளையாட்டில் அசீம் என்னிடம் தவறான நடந்து கொள்ளவில்லை ஆனால் அது அவருக்கு தவறான பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது. அதுபோல விக்ரமனும் என்னிடம் டாஸ்க்கில் அப்படித்தான் விளையாடினார். டாஸ்க்கில் என்னுடைய காலை வளைத்து பிடித்துக் கொண்டார். அப்போ அதுவும் அப்யூஸ் தானா? என்னுடைய டிரஸ்ஸை இழுத்து விளையாடியவருடைய ஆதரவாக விக்ரமன் நின்றார். அசீம் என்னிடம் விளையாடும் போது எனக்கு கோவம் வந்துச்சு, ஏன்னா அவர் கோபத்தில் என்னை தள்ளினார் அதனால் அவர் மீது கோபம் வந்தது. ஆனால் அவர் அப்யூஸ் பண்ண வில்லை என்று கூறியிருக்கிறார்.

குறும்படங்கள்
தனலட்சுமியின் இந்த வார்த்தையை கேட்ட நெட்டிசன்கள் தனலட்சுமிக்கு எதிராக பொம்மை டாஸ்க்கில் நடந்த நிகழ்வுகளை குறும்படங்களாக வெளியிட்டு வருகிறார்கள். ஏற்கனவே பொம்மை டாக்ஸ்கில் குறும்படம் வெளியீட்டு தான் தனலட்சுமி ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பையும் பெற்று வந்தார். ஆனால் இப்போது அதே குறும்படங்களின் மூலமாக அதிகமான நெகட்டிவ் கருத்துக்களையும் பெற்று வருகிறார். ஆனால் எப்போதும் போல தனலட்சுமி இந்த நெகட்டிவ் கருத்துக்களை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications