Pandian stores serial: அடடா... தனம் இப்படி கேட்கும்போது தூக்கி வாரிப் போட்ருச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா உண்டாயிருக்கா.. ஆஸ்பிடல் செக்கப்புக்கு கூட நான் போகலாமா அத்தேன்னு பிள்ளை உண்டாகாத தனம் கேட்கும்போது...

அந்த குடும்பத்தில் இருந்தவங்களுக்கு மட்டும் இல்லை பார்த்தவங்களுக்கும் தூக்கி வாரிப் போட்டுருச்சு.. கண்ணுல தண்ணி கூட வந்துருச்சு..

ஏன் இப்படி கேட்குறேன்னு கேட்ட அத்தை... அப்புறம் இரு தனம்னு ஒரு டிவிஸ்ட் வச்சு...மூணு பேரா போகாதீங்க நாலு பேரா போங்கன்னு சொல்றாங்க.

ஜீவா மீனா

ஜீவா மீனா

தனம் கல்யாணமாகி தனக்கு ஒரு குழந்தை வேணும்னு நினைக்காம வாழ்ந்து கொண்டு இருக்க, ஜீவாவை கல்யாணம் செய்துகிட்ட மீனா பிள்ளை உண்டாகி அந்த குடும்பத்துக்கு சந்தோஷத்தை தருகிறாள். திடீர்னு அவளும் ப்ளீட் ஆகுதுன்னு சொல்ல குடும்பமே கலங்கி இருக்காங்க.

34 வயசு தனம்

34 வயசு தனம்

அக்கா உங்களுக்கு ஒரு குழந்தை வேணும்னு ஆசை இல்லயாக்கான்னு முல்லை தனத்திடம் கேட்க. எங்க அப்பா அம்மா கூட இதையேதான் முல்லை கேட்டாங்க. எனக்கு பதில் சொல்லி அலுத்துப் போச்சுன்னு சொல்றா தனம். அக்கா 34 வயசு ஒரு வயசே இல்லைக்கா... உங்களை நீங்களே ஏமாத்திகிட்டு இருக்காதீகன்னு சொல்றா முல்லை.

எனக்கு நினைவு

எனக்கு நினைவு

இப்படி யாராவது சொன்னால்தான் முல்லை என் வயசே எனக்கு நினைவுக்கு வருது. இல்லேன்னா பெரிய பசங்க நாலு பேரை வளர்த்து ஆளாக்கி விட்டுட்டு அவங்க பிள்ளைங்களுக்கு காத்து இருக்கற மாதிரிதான் எனக்கு தோணுது முல்லைன்னு சொல்றா தனம். அதோட.. இப்போ கூட என்னவோ எனக்கு ஜீவாவுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகுதே.. அதை நாம கொஞ்ச போறோம்.. வளர்க்க போறோம்னு தோணலை.. நம்ம வீட்டுக்கு ஒரு குழந்தை வர போகுதுன்னுதான் முல்லை தோணுதுன்னு தனம் சொல்ல..

அக்கா இப்படி சொல்லி சொல்லி உங்களை நீங்களே ஏமாத்திக்காதீக அக்கான்னு சொல்றா முல்லை.

நான் போகலாமில்லை

நான் போகலாமில்லை

மீனாவை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போகப் போறோமே .. பிள்ளை பெத்துக்காத நாம போயி ராசி இல்லாம போயிருமோன்னு நினைச்சுகிட்டு.. அத்தை நான் ஆஸ்பத்திரிக்கு போகலாமில்லைன்னு கேட்கும்போது, தனத்தின் புருஷன், முல்லை, மீனா, கண்ணன், ஜீவா, கதிர் அத்தனை பேருக்கும் தூக்கி வாரிப் போடுது. எதுக்கு இப்படி கேட்கறேன்னு அத்தை கேட்க.. இல்லை சும்மா கேட்டேன்னு சொல்றா தனம்.

ஏற்கனவே பிரச்சனை

ஏற்கனவே பிரச்சனை

ஏற்கனவே இப்படி சின்னதா ஒரு பிரச்சனை அத்தையால வருது. அதனால் தனம் கேட்க, அத்தனை பேரும் ஷாக்காகிறார்கள். எதுக்கு இப்படி கேட்கறேன்னு கேட்ட அத்தை, போன்னு சொல்லிட்டு இரு தனம்னு ஒரு டிவிஸ்ட் வைக்கறாங்க. எல்லாரும் திரும்பவும் ஷாக்காக மூணு பேரா போகாதீங்க..நாலு பேரா போங்கன்னு சொல்றாங்க.

முழுக்க முழுக்க குடும்ப கதையா எல்லாரும் ரசிக்கும்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்குதுன்னு சொல்லி பார்ப்பது உண்மைதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+