தேசிய விருது வாங்கியதும்.. தனுஷின் இந்த ஒரு செயல் பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய விருது வாங்கிய சந்தோஷத்தை முதலில் தனது மகன்களுடன் பகிர்ந்து கொண்ட நடிகர் தனுஷ் இப்போது அந்த விருதை தனது அம்மாவிடம் கொண்டு போய் கொடுத்து இருக்கிறார். அதுவும் சும்மா கொடுக்கவில்லை. அம்மாவின் கழுத்தில் தேசிய விருதை அணிவித்து அழகு பார்த்திருக்கிறார். அந்த போட்டோவை தனது சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

தேசிய விருது

சமீபத்தில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தனுஷ் விருது பெற்றிருக்கிறார். விருது வாங்கிய பிறகு தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனுஷ் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். போட்டோவுக்கு கூட "நம்மைப் போல அண்ணன் தம்பி" என்ற ரஜினியின் பாட்டை ஒழிக்க விட்டிருந்தார். அந்த போஸ்டை பார்த்ததும் சிந்தூர் மம்மி என்று ஒரு விளம்பரம் வருமே அதே போல தனுஷ் சிந்தூர் டாடி என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து இருந்தனர்.

Dhanush

இப்போது அதைவிட அழகான ஒரு புகைப்படத்தை தனுஷ் வெளியிட்டு இருக்கிறார். தனது அம்மாவின் கழுத்தில் தேசிய விருதை அணிவித்து அவர் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் தனுஷ். All for the smile என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதாவது "இந்த சிரிப்புக்கு தான் எல்லாமே" என்ற அர்த்தத்தில் அவர் போட்டிருக்கும் அந்த வரி தான் ரசிகர்களை இன்னும் அதிகமாக நெகிழ வைத்திருக்கிறது.

தனுஷ் அக்கா போஸ்ட்

ஏற்கனவே தனுஷின் இரண்டு அக்காக்களும் தனுஷின் விருதுகளுடன் அவருடன் சேர்ந்தெடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து தம்பிக்கு வாழ்த்துக்களை பொழிகிறார்கள். இப்போது அம்மாவின் கழுத்தில் விருதுடன் அவர் அழகாக சிரித்துக் கொண்டிருக்கும் இன்னொரு புகைப்படத்தையும் தனுஷ் பகிர்ந்து இருப்பதை பார்க்கும்போது ஒரு அம்மாவாக அவர் கையில் வாங்கி வைத்திருக்கும் அந்த தருணம் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது.

72 ஆவது தேசிய விருது

நேற்று செப்டம்பர் 22ஆம் தேதி 72 ஆவது தேசிய விருதுகள் வழங்கப்பட்டது‌. அதில் கேப்டன் மில்லர் படத்திற்காக சிறப்பு தோற்றத்திற்கும், ராயன் படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருதையும் தனுஷ் வாங்கி இருக்கிறார். இந்த இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்ட போது பல சர்ச்சைகள் இருந்தது. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் சின்ன கேரக்டரில் வந்துட்டு போவார் அதற்கு ஒரு விருதா? என்று சிலர் கேட்டனர்.

Dhanush

தனுஷ் வாங்கிய தேசிய விருது

இன்னும் ஒரு சிலர் ராயன் படம் ரத்தம் தெறிக்கும் வன்முறை கலந்த படமாக இருக்கும், அந்த படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது கொடுக்கப்படுவது சரியா? அதைவிட பெஸ்டான வாழை போன்ற படங்கள் எல்லாம் இருக்கிறது. அதற்கு ஏன் விருது கொடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தபோது, தனுஷ் நீங்கள் எதற்கு முன்பு என்னுடைய எத்தனையோ படங்களுக்கு விருது கொடுக்கவில்லை அதைப் பற்றி கேட்டீங்களா? இப்போ விருது கொடுப்பதை பற்றி கேட்கிறீர்களே என்று ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதுவும் பெரிதாக பேசப்பட்டது.

செய்தியாளர்கள் கேள்வி

அதை எல்லாம் தாண்டி இப்போது அவர் விருதை வாங்கியதும் தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக எடுத்த புகைப்படங்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே விருதை வாங்கியதும் சென்னைக்கு வந்து இறங்கிய தனுஷிடம், சார் உங்க கட்சி எப்போ ஆரம்பிக்க போறீங்க என்று செய்தியாளர்கள் கேட்டதும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் சிரித்தபடி அங்கிருந்து போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+