Dhanush: நான் ஒரு நல்ல தகப்பன்! கருங்காலி மாலை கொடுத்த அதிர்ஷ்டம்... மனம் திறந்த தனுஷ்!
சென்னை: தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படம், அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே எனப் பல பிரபலங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தனுஷ் உட்படப் பல பிரபலங்கள் மனம் திறந்து பேசியது, ரசிகர்களை நெகிழ வைத்தது.

தனுஷின் நெகிழ்ச்சி
விழாவில், தொகுப்பாளர், "தனுஷ் எனச் சொன்னால் எங்களுக்குப் பல நினைவுகள் வரும். உங்களுக்கு தனுஷ் என்றதும் என்ன நினைவுக்கு வரும்?" எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் தந்த தனுஷ், "எனக்கு தனுஷ் என்றதும் நல்ல தகப்பன் என்பதுதான் என் நினைவுக்கு வரும். பல விஷயங்களில் நான் என்னைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளமாட்டேன். இந்த ஒரு விஷயத்தில் நான் நெஞ்சை நிமிர்த்தி பெருமையாகச் சொல்வேன். நான் ஒரு நல்ல தகப்பன்" என்று பேசியது, அனைவரையும் கவர்ந்தது. இந்த உரையோடு, தனது இளைய மகன் லிங்காவுடன் மேடையில் நடனமாடியது, தனுஷின் தந்தைப் பாசத்தை வெளிப்படுத்தியது.
தொடர்ந்து, கழுத்தில் அணிந்திருந்த கருங்காலி மாலையைப் பற்றிப் பேசிய அவர், "நான் அணிந்திருப்பது என்ன மாலை எனச் சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் என் பாட்டியைப் பார்க்கச் சென்றபோது, என் தாத்தாவின் புகைப்படத்தில் இந்த மாலை இருந்தது. அதுபற்றி விசாரித்தபோது, 'இது உங்க தாத்தா 30 வருஷம் ஜெபம் பண்ணின மாலை' எனச் சொன்னார். அதை நான் எடுத்துக்கொள்ளட்டுமா எனக் கேட்டதும், என் பாட்டி தாத்தா புகைப்படம் முன் சென்று, 'இங்க பாருங்க, இந்தப் பேரன்தான் வந்து மாலையைக் கேட்கிறான்'னு சொல்லி எனக்கு விபூதி வைத்து அந்த மாலையையும் அணிவித்தார். அன்று முதல் என் முன்னோர்களின் ஆசீர்வாதமும் என்னுடன் இருப்பதாகவும் என்னைப் பாதுகாப்பதாகவும் எனக்குத் தோன்றும். இது என் தாத்தாவுடையது, எனக்கு ஒன்றும் ஆகாது" என்று உணர்வுபூர்வமாக பேசியிருந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் கருங்காலி மாலை அணிந்ததை பார்த்து பல பிரபலங்களும், ரசிகர்களும் கருங்காலி மாலை அணிய தொடங்கி விட்டார்கள். கருங்காலி மாலையை அணிவதால் அந்த பலன் கிடைக்கும் இந்த பலன் கிடைக்கும் என்று பலர் கதை அளந்துவிட்டனர். ஆனால் இப்போது தனுஷ் அது தன்னுடைய தாத்தாவின் மாலை என்று சிம்பிளாக முடித்து விட்டார்.
பிரபலங்களின் பேச்சு
இந்த உணர்வுபூர்வமான தருணங்களில், ஜி.வி. பிரகாஷ், அருண் விஜய் போன்ற பிரபலங்களும் மேடையில் தனுஷ் உடனான தங்கள் பயணத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
ஜி.வி. பிரகாஷ்: "ராயன் படத்தில், அவரது தம்பிகளில் ஒருவராக என்னை நடிக்கக் கேட்டார் தனுஷ். ஆனால் அது அவருக்குத் துரோகம் செய்யும் கதாபாத்திரம். கதையில் கூட நான் தனுஷுக்குத் துரோகம் செய்ய மாட்டேன். அவரின் முதுகில் குத்தும் நாலு பேரில் ஒருவனாக நான் இருக்க மாட்டேன்" என்று ஜி.வி. பிரகாஷ் பேசியது, அவர்களின் நட்பின் பிணைப்பை உறுதிப்படுத்தியது.
அருண் விஜய்: "தனுஷ் ஒரு நடிகராக மட்டுமின்றி, ஒரு இயக்குநராகவும் தனித்துவமானவர். அவர் ஒரு காட்சியை விளக்கும்போது, அது மிகத் துல்லியமாக இருக்கும். இட்லி கடை படத்தின் கதைக்களம், அதன் உணர்வுபூர்வமான தருணங்கள் ஆகியவை ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல அனுபவத்தைத் தரும்" எனப் பாராட்டினார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications