எங்க அம்மா கர்ப்பமா இருக்கும் போது, மதுரைக்கு 120 கிலோமீட்டர் நடந்தே வந்தாங்க! இட்லி கடை விழாவில் தனுஷ் உருக்கம்
சென்னை: மதுரைக்கும், நடிகர்களுக்குமான உறவு எப்போதுமே தனித்துவமானது. அடிதடி, சண்டை எனப் பல படங்கள் மதுரை மண்ணில் உருவாகியிருந்தாலும், நடிகர் தனுஷ் அந்த மேடையிலிருந்து ஒரு புதிய வாழ்க்கைப் பாடத்தைப் போதித்திருக்கிறார். வீரம் சினிமாவில் மட்டும் இருந்தால் போதும், வாழ்க்கையில் அதை உழைப்பிலும், படிப்புலும் காட்டுங்க என்று அவர் பேசியது, பல இளைஞர்களின் மனதைத் தொட்டது. அது வெறும் அறிவுரை மட்டுமல்ல, அவரது வாழ்க்கைப் போராட்டத்தின் நிஜமான வெளிப்பாடு என்பதை அவரது பேச்சு உணர்த்தியது.

இட்லிக்காக பூப்பறித்த ஒரு சிறுவன்
தனுஷின் இந்த உருக்கமான பேச்சு, இட்லிக்காக அவர் சின்ன வயசுல பட்ட சிரமத்திலிருந்துதான் ஆரம்பமானது. சின்ன வயசுல இட்லி வாங்கக்கூடப் பணம் இருக்காது என்று அவர் பேசியபோது, அரங்கமே அமைதியானது. அப்ப இட்லி வாங்கப் பணம் சம்பாதிக்கிறதுக்காகப் பூப்பறிப்பேன். அப்ப ரொம்ப ஆசைப்பட்டு வாங்கிச் சாப்பிட்ட இட்லியைப் பத்தி, இப்போ ஒரு படமே எடுத்திருக்கேன். இது என் லைப்ல எவ்வளவு பெரிய மாற்றம் என்று அவர் நெகிழ்ந்தபோது, அந்த மேடையில் ஒரு நடிகர் மட்டுமல்ல, வாழ்க்கையின் சவால்களை வென்று வந்த ஒரு சாதாரண மனுஷன் தென்பட்டார். ஆனாலும் இவருடைய இந்த பேச்சு இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
120 கிலோமீட்டர் நடந்த அம்மா அப்பா
தனுஷ் மதுரையுடனான தனது நெருங்கிய உறவைப் பற்றிப் பேசும்போது, அவரது பெற்றோரின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். என் அப்பா, பிழைப்புக்காகச் சென்னைக்குப் போகப் பணம் இல்லாமல், மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த என் அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு 120 கிலோமீட்டர் தூரம் நடந்து மதுரைக்கு வந்து சேர்ந்தாங்க என்று அவர் உணர்ச்சிவசப்பட்டார்
ஒரு நாளைக்கு 120 கிலோமீட்டர் நடக்கிறது நாட் எ ஜோக். அது எவ்வளவு டப்னு எனக்குத் தெரியும். இப்படி என் அப்பா, அம்மா கால் கடுக்க நடந்து வந்து, இந்த மேடையில்தான் முதல்முறையா காலடி வச்சாங்க. அவங்க ஏறிய முதல் மேடை இது! என்று தனுஷ் உணர்ச்சிவசப்பட்ட தருணம், ஒரு நடிகனின் வெற்றியைத் தாண்டி, ஒரு மகனின் நன்றியையும், பெருமையையும் வெளிப்படுத்தியது.
ஆடுகளம் தந்த அமைதி
தனுஷ் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்திருந்தாலும், ஆடுகளம் படப்பிடிப்பிற்காக அவர் மதுரையில் கழித்த 200 - 250 நாட்கள் அவருக்கு மனதிற்கு அமைதியையும், நிம்மதியையும் தந்ததாகக் கூறினார். அங்கு கிடைத்த அனுபவத்தை மறக்க முடியாது. படம் வெளியான போது, ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ மதுரைலதான் பார்த்தேன். ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கும் நீங்க எப்படி ரியாக்ட் பண்ணீங்களோ, அதை பார்த்துதான் எனக்கு புரிஞ்சது என்று அவர் சொன்னது, ரசிகர்களுக்கும் அவருக்கும் உள்ள ஆழமான உறவைக் காட்டியது.
சண்டைய விடுங்க
தான் நடித்த இட்லி கடை படம் ஒரு சாதாரண, எளிமையான படம் என்றும், குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படமாக இருக்கும் என்றும் தனுஷ் கூறினார். வடசென்னை 2 படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆரம்பித்து, அதற்கு அடுத்த வருடம் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுனாமிலயே ஸ்விம்மிங் போட்டுட்டே தான் இருக்கேன் என்று அவர் பேசியது, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் அவரது மன உறுதியைப் பிரதிபலித்தது. இறுதியாக ரசிகர்களைப் பற்றிப் பேசியபோது, என்னைக்கும் மாறாத நிரந்தரம், யார்கிட்டயும் வம்புக்கு போகாத குணம். ஆனா இவங்களை பார்த்தாலே தெரியும், இவங்ககிட்ட வம்பு பண்ணவும் கூடாது என்று அவர் கூறியது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகனாக மட்டுமல்லாமல், ஒரு நல்ல நண்பனாக, குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவர் ரசிகர்களுடன் கொண்டிருக்கும் உறவு, அவரை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications