மதுரையில் தனுஷ் கைக்கு வந்த வேல்.. கோவிலில் 18 அடி அரிவாள்.. அரசியலா? அன்பா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் மதுரை வந்திருக்கிறார் என்றாலே ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? விமான நிலையத்தில் கூட்டம் கூடிய நிலையில் அடுத்தடுத்த நடந்த சம்பவங்கள் இப்போது கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக ஒரு பெண் ரசிகை தனுஷை சந்திக்க கையில் வேலை வைத்துக்கொண்டு காத்திருந்தது அதை அவரிடம் கொடுத்த சம்பவம் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

தனுஷின் 54 ஆவது படம் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகிறது. லப்பர் பந்து படத்துக்கு பிறகு தமிழரசன் இயக்கும் படம் என்பதால் இந்த கூட்டணி மீது ஏற்கனவே எதிர்பார்த்து இருக்கிறது. படப்பிடிப்பு மதுரை சுற்றிய பகுதிகளில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இன்று மதுரைக்கு வந்த தனுஷை விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

மதுரையில் தனுஷ்

உடனே தனுஷ் ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். ஆனால் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போது நடந்த ஒரு விஷயம் தான் இப்போது ரசிகர்கள் கவனத்தை திருப்பி இருக்கிறது. ஒரு பெண் ரசிகை கையில் வேலுடன் தனுஷுக்காக காத்திருந்திருக்கிறார். தனுஷ் அருகில் வந்ததும் அந்த வேலை கொடுத்திருக்கிறார். தனுஷும் அதைப் பெற்றுக் கொண்டு சந்தோஷமாக அங்கிருந்து கிளம்பினார்.

Dhanush Madurai

கைக்கு வந்த வேல்

இது ஒரு ரசிகையின் அன்பின் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் தனுஷை சுற்றி கடந்து சில மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கும் அரசியல் பேச்சுகளையும் சேர்ந்து பார்த்தால் இது வேற லெவல் சம்பவமா என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, தனுஷ் ரசிகர் மன்றத்தின் கொடி அறிமுகமானபோது தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா? என்ற பேச்சு பரவியது.

அதற்கு ரசிகர்கள் ஏற்பாடு செய்த நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பேசிய தனுஷ் ரசிகர்களின் ஒற்றுமையை வெறும் திரைப்பட நிகழ்ச்சிக்காக மட்டும் பயன்படுத்தாமல் அந்த சக்தியை மக்கள் நல பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் பேசி இருந்தார். இதுவும் அரசியல் வருகை குறித்த ஊகங்களை அதிகப்படுத்தியது. அதே நேரத்தில் தனுஷ் இதுவரை அரசியல் கட்சி தொடங்குவதாகவோ, தேர்தலில் போட்டியிடுவதை இன்னும் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை.

கோவில் செண்டிமெண்ட்

இப்படி ஒரு சூழ்நிலையில் இப்போது இன்னொரு விஷயம் நடந்திருக்கிறது. மரநாடு கருப்பண்ணசாமி கோவில் அருகே தனுஷின் டி 56 படத்தின் பூஜை நடைபெறுகிறது. படம் வெற்றி பெற வேண்டி கருப்பண்ணசாமிக்கு 18 அடி நீளமுள்ள அரிவாளை காணிக்கையாக வழங்க தனுஷ் முடிவு செய்து இருக்கிறார். இதையும் தனுஷின் கோவில் செண்டிமெண்ட்டோடு சேர்த்து பார்க்கலாம்.

ரசிகர்கள் கேள்வி

கடந்த ஆண்டு தனது படத்துக்காக தேனி சங்கராபுரத்தில் உள்ள கருப்பசாமி கோவிலில் குடும்பத்துடன் தனுஷ் வழிபாடு செய்திருந்தார். ஆக, ஒரு பக்கம் விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் கையில் வேலுடன் காத்திருக்க.. இன்னொரு பக்கம் கோவிலில் 18 அடி அரிவாள் காணிக்கை. இதையெல்லாம் பார்த்துவிட்டு தனுஷ் அரசியலுக்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்துவிட்டாரா? என்று கேட்பது இயல்புதான். ஆனால் உண்மையில் இது அரசியலுக்கான அடித்தளமா? இல்லை ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் மீது வைத்திருக்கும் அன்பையும், பாசத்தையும் அவரவர் பாணியில் வெளிப்படுத்துகிறார்களா? என்பது தான் இப்போது கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+