Kara First Review: தனுஷின் “கர” படம் எப்படி இருக்கு? வெளியான முதல் விமர்சனம்.. அப்போ சம்பவம் இருக்கு!
சென்னை: 'போர் தொழில்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள கர படத்தில், நடிகர் தனுஷ், மமிதா பைஜு, கே. எஸ். ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி இருக்கிறது.
படத்தின் முதல் பார்வை மற்றும் டிரைலர் வெளியாகியதிலிருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள், கதை அமைப்பு மற்றும் பின்னணி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், படம் எப்படி இருக்கிறது என்ற ஆரம்ப தகவல்கள் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன.

கர படத்தின் விமர்சனம்
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், 'கர' படத்தின் முதல் விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், "படத்தின் முதல் பாதி மிகவும் சிறப்பாக உள்ளது. என்றும் இரண்டாம் பாதி ஓகே என்ற அளவில் இருக்கிறது. மொத்தத்தில், தனுஷ் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படம் ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நடிகர் கே. எஸ். ரவிக்குமார் மற்றும் கருணாஸ் ஆகியோரின் நடிப்பு இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இதனுடன், 'கர' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர படத்தின் கதை
இப்படத்தின் கதைக்களம் வளைகுடா நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகள், அதன் தாக்கம் இந்தியாவில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை மையமாகக் கொண்டு நகரும் என கூறப்படுகிறது. இந்த வித்தியாசமான கதை அமைப்பும், விக்னேஷ் ராஜாவின் முந்தைய பட வெற்றியும் சேர்ந்து, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தை பார்த்த நடிகர் தனுஷ், விக்னேஷ் ராஜா நீங்க ஒரு ஜீனியஸ்...'கர' படத்தை கொடுத்ததற்கு நன்றி என பாராட்டி சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் விக்னேஷ் ராஜாவை நேரிலும் அழைத்து தனுஷ் பாராட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் தனுஷுக்கு கம்பேக் கொடுக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கடைசியாக, தனுஷின் சமீபத்திய தமிழ் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறாத நிலையில், 'கர' திரைப்படம் அவருக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த ஆரம்ப விமர்சனம், அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
'கர' ஓடிடியில் பட்டையைக் கிளப்புது! ரிவ்யூவை நம்பி தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள் குமுறல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications