இட்லி கடை பட அப்டேட் கொடுத்த பார்த்திபன்.. தனுஷ் பற்றி இப்படி சொல்லிட்டாரே! அதுவும் அந்த பதிவு ஹைலைட்!
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் தனுஷ். பவர் பாண்டி மற்றும் ப.பாண்டி போன்ற திரைப்படங்களின் மூலம் இயக்குநராகத் தன்னுடைய திறமையை நிரூபித்த அவர், தற்போது நான்காவது முறையாக ஒரு படத்தை இயக்கி, நடித்தும் வருகிறார். இட்லி கடை என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், அதன் தலைப்பு மற்றும் நட்சத்திரப் பட்டாளத்தால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் இட்லி கடை படத்தை பற்றி பார்த்திபன் வெளியிட்ட போஸ்ட் இணையத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

நட்சத்திரப் பட்டாளம்
இட்லி கடை திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் தனுஷ் உடன், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில், நடிகர் அருண் விஜய் முற்றிலும் மாறுபட்ட பாணியில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திபனின் இன்ஸ்டாகிராம் பதிவு
படத்தில் அறிவு என்ற கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், தனுஷுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து ஒரு சுவாரசியமான பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், "Mischievous' பார்த்திபன் Missssschivous Mr தனுஷிடமிருந்து ஒரு பட்டம்! குறும்பு அரும்புவதே விரும்பும் போதும், or விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் ரசிகர்களால் விரும்பப்பட, படாதபாடு படுகிறேன். இட்லி கடையில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்" என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டிருக்கிறார்.
தனுஷுடன் இணைந்து நடித்தது குறித்துப் பேசிய பார்த்திபன், "மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக" என்று பாராட்டியிருக்கிறார். இட்லி கடை படத்தின் கதைக்கு இணையாக It tally with a tale of 'Italy shop' by Danish என்று ஆங்கிலத்தில் ஒரு குறும்புத்தனமான வரியையும் அவர் பதிவிட்டுள்ளார்.
இட்லி கடை எதிர்பார்ப்புகள்
இட்லி கடை திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினமே படத்தின் டிரெய்லரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இட்லி கடை படத்தின் என்ன சுகம் பாடலைத் தனுஷ் எழுதி, ஸ்வேதா மோகன் உடன் இணைந்து பாடியுள்ளார். அதைத் தொடர்ந்து, எஞ்சாமி தந்தானே என்ற ராப் பாடல் தெருக்குரல் அறிவு உடன் இணைந்து வெளியானது.
நடிகராக, இயக்குநராக, பாடலாசிரியராக, பாடகராக எனப் பல முகங்களைக் கொண்ட தனுஷின் இட்லி கடை, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவிற்குப் பூர்த்தி செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications