Idli Kadai box office: 'இட்லி கடை'யால் தனுஷ் இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றி! 10 நாள் வசூல் இத்தனை கோடியாம்
சென்னை: நடிகராக மட்டுமே கலக்கி வந்த நம்ம தனுஷ், இப்போ மறுபடியும் இயக்குநராக வந்து, தான் யாருன்னு நிரூபிச்சுட்டாரு! சமீபகாலமாக அவருக்கு நடிப்பிலும் சரி, இயக்கத்திலும் சரி... ஒரு பெரிய ஹிட் அமையாத நிலையில, அவர் இயக்கி நடித்த 'இட்லி கடை' திரைப்படம் வெளியாகி, ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான ட்ரீட் கொடுத்திருக்கு! தனுஷ் மேல வைத்திருந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பை, இந்தப் படம் சற்றும் வீணாக்கலைன்னுதான் சொல்லணும்!

தனுஷின் தேவை
'பவர் பாண்டி' படத்துல வயசான தம்பதிகளோட நிறைவேறாத காதலைச் சொல்லி, எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினாரு தனுஷ். ஆனா, அதுக்கப்புறம் அவர் இயக்கின 'ராயன்', 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. அதேபோல, நடிப்பிலும் 'கேப்டன் மில்லர்', 'குபேரா'ன்னு அவருடைய படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன.
இதனால, "எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துடணும்"னு ஒரு முனைப்புல, டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், அவரே இயக்கவும் செய்யவும் ஆரம்பிச்ச படம் தான் இந்த 'இட்லி கடை'.
சொந்த ஊரின் ஞாபகம்
சத்யராஜ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், இளவரசுன்னு ஒரு பெரிய பட்டாளமே இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை வேற லெவல்ல படத்துக்குக் கூடுதல் பலம் கொடுத்திருக்கு. தனுஷ் இந்தப் படத்துல தன்னோட சொந்த ஊர் ஞாபகங்கள், சிறு வயசுல பார்த்த கதாபாத்திரங்கள், நடந்த சம்பவங்கள் எல்லாத்தையும் கலந்து கதையாக்கி இருக்கிறார். அதனாலதான் என்னவோ, கதை ரொம்ப இயல்பா இருக்கு!
இயக்கத்தில் பக்குவம்
வயசுக்கேத்த பக்குவம் தனுஷ் இயக்கத்துல நல்லாவே தெரியுது. எங்கெல்லாம் ஸ்லோவாப் போகணும், எங்க ஆக்ஷன் கொடுக்கணும்னு தெளிவா இருக்கார்!. ஒரு இயக்குநரா இருந்தாலும், நடிகராகவும் அவர் பின்னி எடுத்திருக்காரு. சின்னச் சின்ன உணர்வுகளையும் அழகாக கடத்தி இருக்கார். வசனங்கள் ரொம்பவே இயல்பா, கூர்மையா, ஆழமான அர்த்தத்தோட இருக்குது.
திரைக்கதையில் சுவாரஸ்யம்
எங்கேயும் அலுப்பு தட்டாதபடி சுவாரஸ்யமான திரைக்கதை அமைச்சு, ஒரு இயக்குநராக அவர் ஜெயிச்சுட்டாரு!. படம் பார்த்த பலரும், "ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஒரு திருப்தியான படத்தைப் பார்த்தோம்! எங்க சொந்த ஊர் ஞாபகம் வந்து கண்ணே கலங்கிடுச்சு"ன்னு சொல்லிப் பாராட்டி இருக்காங்க! தனுஷ் இந்தப் படத்துல வச்சிருந்த உழைப்புக்கான ஊதியத்தை, ரசிகர்கள் கொடுத்திருக்காங்க. விமர்சன ரீதியாகக் கொண்டாடப்படும் இந்தப் படம், வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது.
10 நாள் வசூல்: தனுஷ் ராசிக்கு தன லாபம்
'இட்லி கடை' படம் வெளியாகி நேற்றோடு (அக்டோபர் 10) பத்து நாட்கள் நிறைவடைந்திருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பத்தாவது நாள் மட்டும் இந்தப் படம் ₹1.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இந்தப் படம் மொத்தம் ₹45.50 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அந்த இணையதளம் அறிவித்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷுக்கு ஒரு திருப்திகரமான வெற்றியாகவும், வசூல் ரீதியாக ஒரு நல்ல 'ஹிட்'டாகவும் இந்தப் படம் அமைந்திருப்பது, அவருக்கு ரொம்பவே சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும்!
தனுஷ், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவதா? அல்லது இயக்குநராகப் பல படங்களில் கவனம் செலுத்துவதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications