ப்ரீ புக்கிங்கில் கலக்கும் தனுஷின் குபேரா.. ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவ்வளவு கலெக்ஷனா? வெளியான தகவல்
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் குபேரா திரைப்படம் வரும் ஜூன் இருபதாம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் போஸ்டர் முதல் டீசர் வரை அனைத்துமே வித்தியாசமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ப்ரீ புக்கிங்கில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.
அதாவது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் குபேரா திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 120 கோடியாம். நடிகர்களின் சம்பளத்தை சேர்த்து இந்த படம் 120 கோடியில் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அது போல இந்த படத்திற்கு தனுசுக்கு 30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், நாகார்ஜுனாவிற்க்கு 14 கோடி, ராஷ்மிகாவுக்கு நான்கு கோடியும் வழங்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

குபேரா திரைப்பட நடிகர்களின் சம்பளம்
அதுபோல இந்த படத்தில் ஃப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே படத்திற்கான பட்ஜெட்டில் 90% கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. டிஜிட்டல் மற்றும் திரையரங்க ரைட்ஸ் ஆகியவற்றை சேர்த்து 110 கோடி வரை வியாபாரம் ஆகி இருக்கிறதாம். அதனால் ரிலீஸுக்கு முன்பே இந்த படம் பட்ஜெட்டை கவர் செய்துவிடும் என்று கூறப்படுகிறது. அதனால் கண்டிப்பாக படக்குழுவிற்கு குபேரா திரைப்படம் வெற்றி படமாக தான் அமையும் என்று தெரிகிறது.
குபேரா திரைப்படம் பட்ஜெட்
இந்த படத்திற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமை 20 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாம். அது போல ஓடிடி ரைட்ஸ் 47 கோடிக்கும், தெலுங்கு திரையரங்க உரிமை 40 கோடிக்கும் டிவி மற்றும் ஆடியோ என அனைத்தும் சேர்த்து குபேரா திரைப்படம் கிட்டத்தட்ட ரிலீசுக்கு முன்பே 100 கோடிக்கு மேல வியாபாரம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. 120 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தாலும் நூறு கோடி இப்போது எடுத்துவிட்டார்களாம்.

குபேரா திரைப்படம் ஃப்ரீ ரிலீஸ் வசூல்
இன்னும் 10 கோடி வசூலித்தால் குபேரா படம் போட்ட காசை தயாரிப்பாளர் எடுத்து விடுவார்கள். இதுவரைக்கும் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றி படமாக குபேர அமையும் என்று கூறப்படுகிறது. தனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படம் 150 கோடி வசூலித்தது. அதுதான் தனுஷ் படங்களில் அதிகபட்சமாக வசூல் செய்த படமாக இருந்து வருகிறது. இந்த சாதனையை குபேரா திரைப்படம் கண்டிப்பாக முறியடிக்கும் என்று கூறி வருகிறார்கள். அதுபோல usa வில் இதுவரை 956 டிக்கெட்டுகள் விற்கப்பட்ட $17,013 வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
குபேரா திரைப்படம் டைமிங்
அதுபோல இந்த படத்திற்கு முக்கிய குறையாக இருப்பது நேரம் தான். குறைந்தபட்சம் இந்த படம் 3 மணி நேரம் ஓடும் என்று கூறப்படுகிறது. மூன்று மணி நேரத்திற்கு ரசிகர்கள் பொறுமையாக இருந்து பார்ப்பார்களா என்று பார்த்தால் அது சந்தேகம் தான். 2:30 மணி நேரத்தில் இந்த படம் முடிவதாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications