Kubera 1st day box office: தனுஷின் குபேரா செய்த முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? மிரட்டி இருக்கிறாரே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியிருக்கிறது. இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடிப்பில் உருவான குபேரா திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை விரிவாக பார்க்கலாம்.

தனுஷ் நடிப்பில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட குபேரா திரைப்படம் நேற்று ஜூன் இருபதாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அது போல இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா மற்றும் அமீகோஸ் கிரியேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளே நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் படத்திற்கான வசூல் நிலவரமும் வெளியாகி இருக்கிறது.

Dhanush Kubera movie box office

குபேரா முதல் நாள் வசூல்

குபேரா படத்தில் முதல் நாள் வசூல் (kubera first day box office collection) நிலவரம் வெளியாகியிருக்கிறது. அதில் இந்தியாவில் சுமார் 10.72 கோடி உத்தேசமாக வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்களை வெளியிடும் சில இணையதளங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது தான். அதிகாரப்பூர்வமான வசூல் நிலவரங்களை விரைவில் படகுழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குபேரா படத்தின் கதை

அதே போல இந்த திரைப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்திருக்கிறார். கதையின்படி சிபிஐ அதிகாரியாக இருக்கும் நாகார்ஜுனா செய்யாத ஒரு குற்றத்திற்காக ஜெயிலில் அடைக்கப்படுகிறார். அதுபோல கடலில் இருக்கும் வளங்களை தெரிந்து கொள்ளும் ஒரு தொழில் அதிபர் அரசுக்கு தெரியாமல் அதை கையகப்படுத்த முயல்கிறார். அதுபோல அவருடைய கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு நாகார்ஜுனாவை வைத்து திட்டம் தீட்டப்படுகிறது.

அதில் பிச்சைக்காரர்களை பினாமியாக வைத்து இவர்கள் போடும் பிளானில் நடிகர் தனுஷும் சிக்கிக் கொள்கிறார். கடைசியில் பிச்சைக்காரருக்கு ஏற்படும் பல கஷ்டங்கள் தொந்தரவுகளை வைத்து இந்த படம் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தின் கதையானது மூன்றரை மணி நேரம் இருந்த நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்று மணி நேரத்திற்கு குறைக்கப்பட்டது.

விமர்சனங்கள்

ஆனாலும் படத்தில் சில குறைகள் இருப்பதாகவும் பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதுபோல இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்றும் பலர் பாராட்டி வருகிறார்கள். இந்த படத்தின் கலவையான விமர்சனத்தில் காரணமாக நேற்று குறைவான வசூல் செய்திருந்தாலும் இன்று மற்றும் நாளை வார இறுதி நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் பிரமோஷனில் நடிகர் தனுஷ் தன்னுடைய ரசிகர்கள்தான் தனக்கு முழு சப்போர்ட் தன்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் நான் எந்த இடத்தில் எல்லாம் சோர்ந்து போகிறேனோ அவர்கள் தான் எனக்கு வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பேசி இருந்தார்.

அதுபோல ஒருவர் முன்னேற்றத்தை தடுக்க வேண்டும் என்று சிலர் அவர்களுடைய வேலையையும் விட்டுவிட்டு பிளான் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களின் வெற்றியை தடுப்பதற்காகவே சிலர் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் தனுஷ் பேசி இருந்தார். ஆனாலும் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லையே என்றும் சிலர் தனுஷை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+