Kubera 4th day box office: நான்காவது நாளில் குபேரா வாங்கிய வசூல் இவ்வளவு தானா? ஒரே நாளில் மாற்றம்!
சென்னை: நடிகர் தனுஷ், நாகர்ஜுனா இணைந்து நடித்த குபேரா திரைப்படம் மூன்று மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த திரைப்படம் வெளியான 4 நாள் முடிவில் மிகப்பெரிய சரிவை கண்டிருக்கிறது. நான்காவது நாள் முடிவில் எவ்வளவு வசூல் பெற்றது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என்று பல திறமைகளோடு இருக்கும் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரைப் பற்றி எவ்வளவோ விமர்சனங்களும் சர்ச்சைகளும் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ப்ரொமோஷனின் போது தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு எல்லாம் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தனுஷ் பேச்சு
தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் பிரமோஷனில் தனுஷ் பேசிய விஷயங்களும் இணையத்தில் அதிகமாக வைரல் ஆனது. தன் வெற்றியைக் கெடுப்பதற்காக சிலர் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள், அடுத்தவர்களின் உழைப்பை தடுப்பதற்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் எந்த செங்கலையும் பிடுங்க முடியாது என்றெல்லாம் தனுஷ் பேசி இருந்தார்.
விமர்சனங்களுக்கு பதில்
இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த திரைப்படம் எதிர்பார்த்தபடியே கடந்த ஜூன் இருபதாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியிருந்தார். தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். நடிகர் பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். படம் வெளியாகி ஐந்து நாட்களை கடந்த நிலையில் படம் 50 கோடிக்கு அதிகமான வசூலை பெற்றிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாதி வேகமாக சென்றாலும் இரண்டாவது பாகத்தில் வேகத்தை குறைத்துக் கொண்டதாக ரசிகர்கள் கவலை தெரிவித்தனர்.
குபேரா பட கதை
இந்த படம் மூன்று அரை மணி நேரம் உருவாக்கப்பட்ட நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்று மணி நேரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் அதையும் குறைத்து இரண்டரை மணி நேரத்தில் இந்த படத்தை முடித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கார்ப்பரேட் முதலாளி தன்னுடைய கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களை வைத்து பிளான் போடுகிறார். ஆனால் அது அவருக்கு வெற்றியை கொடுத்ததா? அல்லது பிரச்சனையை கொடுத்ததா என்பதுதான் படத்தின் கதை.

குபேரா பட வசூல் நிலவரம்
இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நல்ல வசூல் பெற்று வருகிறது. ஆனால் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் மிகவும் குறைவான வசூல் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. முதல் நாளில் ரூபாய் 14.75 கோடி வசூலித்திருந்த இந்த திரைப்படம் இரண்டாவது நாளில் 16.5 கோடி மூன்றாவது நாளில் 17.35 கோடியும் வசூலித்தது. இரண்டு நாட்களாக வசூல் அதிகரித்துக் கொண்டிருந்ததற்கு முக்கிய காரணம் வார இறுதி நாட்களாக கூட இருந்திருக்கலாம். ஆனால் நான்காவது நாளான திங்கட்கிழமையான நேற்று வேலை நாட்கள் என்பதால் வசூல் குறைந்து இருக்கிறது. திங்கட்கிழமை மட்டும் 6.50 கோடி வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மொத்தமாக திரைப்படம் வெளியான 4 நாள் முடிவில் 55 புள்ளி 10 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications