உயிருக்கு போராடிய இயக்குனருக்காக தனுஷ் செய்த செயல்.. இந்த மனசு தான் கடவுள்.. குவியும் பாராட்டு
சென்னை: நடிகர் தனுஷ் தன்னை வைத்து இயக்கிய இயக்குனர் ஒருவர் மருத்துவமனையில் கஷ்டப்படும் நேரத்தில் செய்த உதவி குறித்த தகவல்தான் இணையத்தில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. ஒரு சிலர் செய்யும் உதவிகளை விளம்பரப்படுத்தி வரும் நிலையில் தனுஷ் தான் செய்த மிகப்பெரிய உதவியை கூட சைலன்டாக செய்து இருக்கிறார்.
சமீப காலமாக சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க ஒரு சிலர் பந்தாவிற்காகவும், பப்ளிசிட்டிக்காகவும் கூட அடுத்தவர்களுக்கு உதவுவது போல சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் அடுத்தவர்களின் கஷ்டம் அறிந்து அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். அதே நேரத்தில் தாங்கள் செய்யும் உதவியை கூட வெளிப்படையாக செய்வதற்கு காரணம் தங்களை போலவே அடுத்தவர்களும் உதவுவதற்கு முன்வர வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளியே தெரியாமல் உதவி
ஆனால் ஒரு சிலர் தாங்கள் உதவி செய்வதை அடுத்தவர்களுக்கு தெரிய கூடாது தங்களிடம் உதவி வாங்குபவர்கள் எந்த சூழ்நிலையிலும் வருத்தப்படக் கூடாது, நாம் இந்த நிலைமையில் இருக்கிறோமே என்று அவர்கள் வேதனையோடு அந்த உதவியை பெறுவது ரொம்பவும் கஷ்டமாக இருக்கும் என்று தாங்கள் செய்யும் உதவியை வெளியே சொல்வது கிடையாது. அதுபோலத்தான் நடிகர் தனுஷும் அவர் செய்த உதவி குறித்து வெளியே தெரியாத வண்ணம் மறைத்திருக்கிறார். ஆனால் இப்போது அந்த தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
பிஸியான நடிகர்
தனுஷ் இப்போது பிசியான நடிகராக இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் களமிறங்கி இருக்கிறார். அதேபோல குபேரா, இட்லி கடை போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் செய்த மனித நேயமான செயல்தான் அனைவருடைய பாராட்டை பெற்று வருகிறது.
மருத்துவமனையில் இயக்குனர்
அதாவது தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஒருவர் உடல்நிலை குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். அப்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை முடிவடைந்ததும் அவருக்கு 25 லட்சம் ரூபாய் பில் கட்ட சொல்லி இருக்கிறார்கள். அவ்வளவு பணம் அந்த இயக்குனர் குடும்பத்தால் கட்ட முடியாத சூழ்நிலையை இருந்திருக்கிறது.
தனுஷ் செய்த உதவி
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அந்த குடும்பத்தினர் ஒரு சிலரிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு பணம் கிடைக்காமல் இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் கடைசியாக தனுஷிடம் இது பற்றி பேசியிருக்கிறார்கள். உடனடியாக தனுஷ் 25 லட்சம் ரூபாயை அந்த இயக்குனர் குடும்பத்திற்கு கொடுத்து உதவி இருக்கிறார்.

உழைப்புக்கு அங்கீகாரம்
இது தனுஷின் சிறந்த மனிதநேயத்தையும் அவர் தொழில்துறையை நேசிக்கும் மனநிலையும் வெளிப்படுத்துகிறது என்று ரசிகர்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். அதுபோல உண்மையான உழைப்பு இருக்கும் பலரை தனுஷ் சினிமாவில் பிரபலப்படுத்தி இருக்கிறார். அதற்கு உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன், இசைஅமைப்பாளர் அனிருத் போன்ற பலரை சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது இயக்குனர் குடும்பத்திற்காக தனுஷ் செய்த செயல் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் காட்சிகளை சில நிமிடங்கள் பயன்படுத்தியதற்காக தனுஷ் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இப்போது இயக்குனருக்காக அவர் செய்த செயல் நெட்டிசன்களை வியக்க வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications