யார் விவாகரத்து செஞ்சாலும் தனுஷ் தான் காரணமா? வதந்திகளுக்கு பஞ்ச் வசனம் பேசி பதிலடி கொடுத்த “குபேரா”
சென்னை: நடிகர் தனுஷ் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் சமீப காலமாக அவர் பற்றிய செய்திகள் சோசியல் மீடியாவில் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் நடித்த "குபேரா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். தனுஷ் கோபமாக பேசியதை பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் தனுஷுக்கு அறிமுகமே தேவை இல்லை. ஆரம்பத்தில் பல்வேறு உருவ கேலிகளை சந்தித்தாலும் இன்று சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருகிறார். "துள்ளுவதோ இளமை" திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்த தனுஷுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தது அவருடைய அண்ணன் தான். அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன், புதுக்கோட்டை சரவணன் போன்ற படங்கள் தனுஷுக்கு தனி அடையாளத்தை கொடுத்தது.

பஞ்ச் வசனம்
அந்த நேரத்தில் தனுஷ் உடைய திரைப்படங்கள் இளைஞர்களின் மனம் கவருகிற வகையில் பஞ்ச் வசனத்தோடு இருந்தது. ஆரம்பத்தில் அண்ணன் இயக்கிய படத்தில் நடித்தாலும் பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தன்னை மெருகேற்றிக் கொண்டார். கமர்சியல், மசாலா படங்களில் நடித்தாலும் இடையிடையே மாஸான திரைப்படங்களிலும் நடித்து
கலக்கிக் கொண்டிருக்கிறார்.
தனுஷ் நடித்த ஹிட் படங்கள்
தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம், வடசென்னை, கர்ணன், அசுரன் போன்ற படங்கள் எல்லாம் இவருடைய இன்னொரு முகத்தை காட்டியது. நடிகராக மட்டுமல்லாமல் தன்னுடைய திரைப்படங்கள் சிலவற்றில் பாடல்களை பாடி ஒரு பாடகராகவும் வெற்றி அடைந்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வரும் தனுஷ் இரண்டு தேசிய விருதுகளையும் வாங்கி இருக்கிறார்.
தனுஷ் பேச்சு
இந்த நிலையில் இயக்குனர் சேகர் கம்முலா மூலம் குபேரா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் தன்னை பற்றி பரப்பப்படும் வதந்திகள் குறித்து பேசி இருந்தார். அதில் "என்னை பற்றி எவ்வளவு வதந்தி வேணும்னாலும் பரப்புங்க, என்ன நெகட்டிவிட்டி வேணாலும் பரப்புங்க, ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாசம் முன்பு என்னைப் பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்க, தம்பிங்களா.. கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா!
ரசிகர்கள் இல்லை நண்பர்கள்
இங்க இருக்கிறவங்க என் ரசிகர்கள் கிடையாது. 23 வருஷமா என் கூடவே இருக்கும் கம்பெனியன்ஸ். நீங்க சும்மா நாலு வதந்தியை பரப்பி என்னை காலி பண்ணிடலாம்னு நினைச்சா அதைவிட முட்டாள்தனம் எதுவுமே கிடையாது. உங்களால ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது" என்று அதில் சற்று காட்டமாகவே தனுஷ் பேசி இருந்தார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா தன்னுடைய டாக்குமென்டரியில் விக்னேஷ் சிவனை தான் காதலித்த "நானும் ரவுடிதான்" திரைப்பட காட்சிகள் சிலதை பயன்படுத்தியதற்காக தனுஷ் நஷ்ட ஈடு கேட்கிறார் என்று கூறியிருந்தார்.
வதந்திகள்
அதுபோல சமீப காலமாகவே எந்த சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்தாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என்ற ஒரு வதந்தியும் பரவி வருகிறது. சமீபத்தில் கூட ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து செய்த போது அதற்கு காரணமும் தனுஷ் தான் என்று சுசித்ரா குற்றசாட்டு வைத்திருந்தார். இந்த நிலையில் தன்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கும் வதந்திகளுக்கும் தனுஷ் இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார் என்று தனுஷ் உடைய ரசிகர்கள் இந்த வீடியோக்களை ட்ரெண்டு செய்து வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications