ராதிகா சரத்குமார் வீட்டில் விசேஷம்.. சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்.. இப்படி ஒரு பதிவா? குவியும் வாழ்த்து
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் தான் புதியதாக கட்டி இருக்கும் வீட்டின் கிரகப்பிரவேசத்தை இன்று எளிமையாக முடித்திருக்கிறார். அதில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது நடிகர் தனுஷோடு ராதிகா மற்றும் சரத்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராதிகா தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
கூடவே நடிகர் தனுஷ் பற்றியும் சில நெகிழ்ச்சியான வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

நடிகை ராதிகாவிற்கு பெரிய அளவில் அறிமுகமே தேவை இல்லை. சினிமாவில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக நடித்து நடித்து வந்திருந்த நிலையிலே சின்ன துறையில் பெரிய அளவில் ராதிகா புரட்சியை செய்திருந்தார். அதுபோல தற்போதும் தொடர்ச்சியாக முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் வெள்ளித்திரை கதாநாயகிகள் தங்களுக்கு வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்னத்திரையில் அடி எடுத்து வைத்து அம்மாவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் நடிகை ராதிகா சினிமாவில் முன்னணி நடிகை ஆக இருக்கும்போது சீரியலிலும் அம்மா சித்தி அக்கா என்று பல்வேறு கோணங்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்திருந்தார்.
இதுபோல நடிகர் சரத்குமாரும் அரசியல் பிரமுகராகவும் இருந்து வந்தார். அப்போதுதான் ராதிகாவும் சரத்குமாரும் திருமணம் செய்து கொண்டனர். ஏற்கனவே நடிகர் சரத்குமாருக்கு சாயாதேவி என்ற மனைவி இருக்கிறார். அவருக்கு வரலட்சுமி, பூஜா என்று இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர்.

அதைத்தொடர்ந்து சரத்குமார் ரேடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்ன திறையில் அறிமுகமானார். அப்போது ரேடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகருமான ராதிகாவோடு காதல் ஏற்பட்டு இருவரும் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இப்போது இவர்கள் இருவரும் புது வீடு ஒன்றை கட்டி உள்ளனர். அந்த வீட்டில் கிரகப்பிரவேசத்தில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதனால் சூட்டில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சரத்குமார் ராதிகா தம்பதியரின் புதுமனை புதுவிழாவில் இவர் கலந்து கொண்டதை ராதிகா அவரோடு எடுத்த புகைப்படத்தின் மூலமாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார். அதுபோல ஒரு சில திறை பிரபலங்கள் மட்டும்தான் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
அதை தொடர்ந்து ராதிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "Some people in the industry you share a special bond " தனுஷ் என்று ராதிகா பகிர்ந்து இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications