கழுத்தில் இருக்கும் கருப்பு மச்சமும் சிவந்துரும்.. வெட்கத்தை சிந்திய தர்ஷா குப்தா
சென்னை: உடம்போடு ஒட்டிய சேலை சரசரக்க தலை நிறைய பூவோடும் மங்களகரமாக இருக்கும் தர்ஷா குப்தாவை பார்த்ததும் உருகிப் போய் கொட்டித் தீர்த்துக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்... கமெண்ட்டுகளை.
என்னதான் விதவிதமாக மாடர்ன் உடையில் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தாலும் அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி இருக்கும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இன்றி அசந்து போய் இருக்கின்றனர்.
இவரை முதல் முதலில் ஜீ தமிழில் முள்ளும் மலரும் சீரியலில் பார்த்த ரசிகர்கள் அதற்குப் பிறகு இவர் நெகட்டிவ் கேரக்டரில் பார்த்து வந்ததால் சீரியலில் அவரை வெறுத்து வந்தனர்.

குடும்ப குத்து விளக்கு
தற்போது மீண்டும் முள்ளும் மலரும் பாணியில் கலக்கலாக குடும்ப குத்து விளக்காக தரிசனத்தைக் காட்டி இருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வரும் தர்ஷா குப்தாவிற்க்கு சீரியலை தாண்டியும் இணையதளங்களில் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். டிக் டாக் ஃபேமஸ் ஆக இருந்த காலகட்டத்தில் இவருடைய கொடி தான் அங்கு பறந்து வந்தது .

வசீகரிக்கும் அழகு
எத்தனை நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு அதில் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு வந்திருந்தாலும் இவர் பாவாடை தாவணியில் பக்கத்து வீட்டுப்பெண் போன்ற அழகினால் அனைவரையும் வசீகரித்து விட்டார் .அதனாலேயே இவரை பிடித்து போன ரசிகர்கள் நாளுக்குநாள் மலைபோல உயர்ந்து வந்தனர். அதிலும் இவர் போஸ்ட் போட்டு சிறுது நேரத்தில் லைக்களும் கமெண்டுகளும் மலைபோல உயர்ந்து வந்தது .

டிக் டாக் தடை
திடீரென்று அந்த செயலி தடை செய்யப்பட்டதும் அதிலிருந்து இன்ஸ்டாகிராம் பக்கம் தனது கவனத்தை திருப்பி விட்டார். தற்போது இன்ஸ்டாகிராமில் கொடி கட்டி பறந்து வரும் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ஒருவர் வளர்ச்சி அடைந்து வருகிறார் என்றால் அவரை பிடிக்காதவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்துவரும் அதுபோல இவருடைய வளர்ச்சியை பிடிக்காத சிலர் இவரை பற்றி தவறாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் என இவர் லைவில் கூறியிருக்கிறார்.

கலாய்க்கும் ரசிகர்கள்
ஆனாலும் தன்னை பற்றி கலாய்க்கும் நெட்டிசன்களை கண்டுகொள்ளாமல் இவர் இந்த காலகட்டத்தில் தன்னால் முடிந்த உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்துவந்தார் .அதுவும் முதலில் தன்னுடைய சொந்த பணத்தில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கி வந்த இவர் பின்பு ரசிகர்களிடம் இருந்து வந்த டோனேஷனால் பலருடைய பசியை தீர்த்து வந்தார் .இதனை பார்த்து இம்ப்ரஸ் ஆன பல ரசிகர்கள் இவரை ஃபாலோ பண்ண ஆரம்பித்துவிட்டனர்.

புதுமுக ஹீரோயின்
முதலில் இவர் நடித்த சீரியலில் இவர் தான் கதாநாயகி என பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். புதுமுகமாக இருந்ததால் நடிப்பை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் கொஞ்சம் திணறி இருக்கிறார் .ஆனால் அந்த காலகட்டத்தில் இவரை பார்த்து பலரும் ஏளனமாக சிரித்து இருக்கின்றனர் .ஆனால் தற்போது இவருடைய வளர்ச்சியை பார்த்து அவர்களே பொறாமைப் பட்டுக் கொண்டிருக்கின்றனர் .

நல்ல மோடிவேஷன்
அதுபோலத்தான் தன்னுடைய ரசிகர்களும் இருக்கவேண்டும் என அடிக்கடி மோட்டிவேஷனல் கொடுத்து வருகிறார். முதல் சீரியலில் இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது .அந்த சீரியலில் ரொம்ப கருப்பாக இருந்தீர்களே இப்போ சீரியலில் நல்ல வருமானமோ அதனால் இவ்வளவு கலராக மாறி விட்டீர்களா என சிலர் இவரை கலாய்த்து வருகின்றனர் . ஆனால் முதல் சீரியலில் தனக்கு கருப்பாக மேக்கப் போட்டதால் தான் கருப்பாக இருந்தேன் .

இதுதான் ஒரிஜினல் கலர்
ஆனால் நிஜத்தில் தான் இப்போது இருப்பது தான் என்னுடைய உண்மையான கலர் என்றும் கூறியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கும் இவருக்கு அவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர் .அதுவும் சில நாட்களாக மாடல் உடைகளில் பார்த்தவர்கள் மீண்டும் இவர் சேலையில் வீடியோ வெளியிட்டதும் அசந்து போய் விட்டனராம் .அதுவும் இவருடைய வெட்கத்தை பார்த்து பலர் வெட்கப்பட்டு சிலிர்த்துப் போய் இருக்கின்றனர் .
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications