தர்ஷா மனசு இருக்கே.. விழுந்து விழுந்து தேங்க்ஸ் சொல்லும் ரசிகர்கள்!
சென்னை: இந்த நேரத்தில் இப்படியெல்லாம் செய்வதற்கு ஒரு மனம் வேண்டும். அது தர்ஷா குப்தாவிடம் தற்போது துளிர் விட்டிருக்கிறது .
அதனை பார்த்து அவருடைய ரசிகர்களும் இனி நாங்களும் உங்களைப் போலவே செய்கிறோம் என உறுதி அளித்து வருகின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் சீரியலில் காலடி எடுத்து வைத்த தர்ஷா குப்தா தற்போது சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

வில்லி ரோல்
இவரை முதல் சீரியலில் ஹீரோயினாக பார்த்த ரசிகர்கள் தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து வருவதால் இவரை கண்டமேனிக்கு கன்னாபின்னாவென திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனால் தற்போது இவர் செய்த செயலை பார்த்ததும் மனம் குளிர்ந்து பாராட்டி வருகின்றனர். தர்ஷா குப்தா சீரியலை தாண்டி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.

ரசிகர்களின் கவிதை
இவர் மாடலாகவும் இருந்து வருவதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறார் .அதுவும் இன்ஸ்டாகிராமில் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .இவர் ஒரு போஸ்ட் போட்டதுமே அவருடைய ரசிகர் கவிதைகளை கொட்ட தொடங்கி விடுவார்கள் .ஆனால் எப்போதுமே இவரை தலைவி என கொஞ்சி வந்த ரசிகர்கள் தற்போது இவர் செய்திருப்பதைப் பார்த்து வியந்து போயுள்ளனர்.

இயக்கம் தொடங்கி
இந்த காலகட்டத்தில் மீனவர்களுக்கு உதவும் வகையில் தன்னால் முடிந்த உதவிகளை பசுமை இயக்கம் என்னும் ஒரு இயக்கத்தினை உருவாக்கி செய்திருக்கிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை நான் செய்திருக்கிறேன் .உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என தன்னுடைய ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நாங்க ரோடு போடறோம்
இதனை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் தலைவி நீங்கள் கோடு போட்டு விட்டீர்கள் இனி நாங்கள் ரோடு போட்டு விடுகிறோம். நாங்களும் எங்களால் முடிந்த உதவியை செய்வோம் அந்த பலனும் உங்களுக்கு தான் கிடைக்கும் என்று கமெண்டுகளை கொட்டியிருக்கிறார்கள். அதிலும் சில ரசிகர்கள் இந்த கஷ்டமான காலகட்டத்திலும் கூட தைரியமாக வெளியே வந்து உங்களால் முடிந்த உதவியை செய்து இருக்கிறீர்கள் .

வேற லெவல் தலைவி
நீங்க வேற லெவல் தலைவி தான் என புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள் .இவருடைய போஸ்ட்ஸ் பார்த்து கலாய்த்து வந்த நெட்டிசன்கள் கூட தற்போது இந்த போஸ்ட் பார்த்து எதற்காக இப்படி வீண் விளம்பரம் என கேட்டு இருந்தாலும் அதற்கும் அவருடைய ரசிகர்கள் என்ன தான் நெகட்டிவ் கமெண்ட் போட்டாலும் அதை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் .உங்களுடைய நல்ல மனதிற்கு நீங்கள் மேலும் மேலும் நன்றாகத்தான் வருவீர்கள் என கூறியிருக்கின்றனர்.

பாராட்டலாமே
ஏற்கனவே சினிமா பிரபலங்களின் ரசிகர்கள் அவர்களின் பெயரில் ரசிகர் மன்றங்களின் பெயரால் கஷ்டப்படும் பலருக்கும் உதவி செய்துவரும் நிலையில் இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .இவர் ஆரம்பித்து வைத்த அதே பாணியை அவருடைய ரசிகர்களும் இனி தொடர்ந்து செய்து வந்தாலே இப்போதைய சூழ்நிலையில் பலருக்கும் உதவியாக இருக்கும் அதனால் தற்போது இவர் எடுத்து வைத்திருக்கும் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications