காலை தூக்கி அங்க போய் வச்சுக்கிட்டு..தர்ஷாவை கலாய்க்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒற்றைக் காலில் ஒய்யாரமாக போஸ் கொடுத்தபடி முகத்தில் விரைப்பை காட்டியிருக்கும் தர்ஷாவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் விட்டார்களாம்.

என்ன ஒரு பார்வை என்று பார்ப்பவர்கள் எல்லாம் கிறங்கி போகிற மாதிரி மிரட்டல் நாயகி மிரட்டி விட்டாரே.

பாவாடை தாவணியில் கிராமத்து பைங்கிளி ஆக மாறியிருக்கும் தர்காவுக்கு ரசிகர்கள் கமெண்ட்களில் அர்ச்சனையை பண்ணுகிறார்கள்.

 கலக்கும் ஸ்டில்கள்

கலக்கும் ஸ்டில்கள்

தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது"என்று படி மேலே காலை வைத்து...கெத்தாக பாவாடையை மேலே தூக்கி.... இடுப்பில் சொருகியபடி பார்ப்பவர்களை கலவரப்படுத்தும் பார்வையில் தர்ஷா கொடுத்துள்ள ஸ்டில்கள் ரசிகர்களை குதூகலமாகவும்....குழப்பமடையவும்!! செய்து வருகிறது.

 ஒரு ரிப்ளை பண்ணலாமே

ஒரு ரிப்ளை பண்ணலாமே

இன்ஸ்டா இளவரசி கொடுத்துள்ள இந்த போஸ்கள்,தாவணியில் குடும்ப குத்து விளக்காக பார்ப்பவர்களை குஷி படுத்தினாலும், போட்டோக்களுக்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷன்களும், பார்வையிலே அவர் சொல்ல வருவதும் என்னவென்று..!?அவரது ரசிகர்கள் குழப்பத்தோடு யோசித்து வருகின்றனர்.தர்ஷாவின் தரிசனத்திற்காக காத்திருந்த ரசிகர்களோ வழக்கம்போல ஹார்டின் களையும் லைக்குகைகளையும் தெறிக்க விட்டு வருகின்றனர். எப்படியாவது தர்ஷாவை ரிப்ளை பண்ண வைத்துவிட வேண்டுமென்று கமெண்ட் களையும் பார்த்து பார்த்து செதுக்கி வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் செம பிஸி

சமூக வலைத்தளத்தில் செம பிஸி

சீரியல்,ரியாலிட்டி ஷோ, என்று பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கலக்கி வந்தாலும், இன்றைய இளைஞர்களிடம் இவரைக் கொண்டு சேர்த்தது இன்ஸ்டாவில் ரசிகர்களிடம் இவர் கா...ட்டும் இரக்கம் தான். சீரியலில் களமிறங்கி, ரியாலிட்டி ஷோக்களில் மெதுவாக ஸ்கோர் செய்து வந்த தர்ஷா, சமூக வலைதளங்கள் மூலம் தனது கேரியரில் எல்லா ஆக்டிவிட்டீஸ் களையும் சிக்ஸ்ஸராக மாற்றி வருகிறார்.இதற்கு இவரது ரசிகர்களும் சலிக்காமல் சப்போர்ட் செய்து வருவதே முக்கிய காரணமாகும்.

என்ன ஒரு தத்துவம்

என்ன ஒரு தத்துவம்

"தோல்விகளை துவைத்து காயப் போடலாம்"என்று இவர் போட்டுள்ள மற்றொரு போட்டோவும் இவரது ரசிகர்களை ரெம்ப காயப் போடாமல் கொஞ்சம் குளிர்ச்சியாக தான் உள்ளது. இரண்டு போட்டோக்களை அப்லோட் செய்துள்ள தர்ஷா குப்தா இரண்டு ஸ்டில்களிலும் ஒரே மாதிரியான கலவர பார்வையிலேயே முறைத்து இருந்தாலும், இரண்டு போட்டோக்களிலும் ஒற்றைக்காலில் நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.அதுதான் என்னவாக இருக்குமோ!!?.. என்று அவரது ரசிகர்களை சற்று குழப்பம் அடைய செய்துள்ளது. அட காலாப்ப முக்கியம்..? கலை தான்பா முக்கியம். அத பாருங்க.. என்று சில கமெண்டர்கள் கலகலப்பாக கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

ஒரே பஞ்சாயத்தா இருக்கு

ஒரே பஞ்சாயத்தா இருக்கு

இவர் கதாநாயகியாக நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்களையும்,புகார்களையும், சந்தித்து வருகிறது. என்னடா இது! முதல் படத்துக்கே இப்படி பஞ்சாயத்தா!? என்று கோபப்பட்டு விட்டார் போல,எதுவாக இருந்தாலும் 'ஒரு கை பார்த்து விடலாம் என்று ஒரு காலில்' பார்வையிலே மிரட்டி வருகிறாரோ என்னவோ!!??

நெகட்டிவ் கமெண்ட்கள் குறைவுதான்

நெகட்டிவ் கமெண்ட்கள் குறைவுதான்

பெரும்பாலும் சமூக வலைதளங்களில் நெகட்டிவ் கமெண்டுகளை அவ்வளவாக பெறாத செலிபிரிட்டி தர்ஷா குப்தாவாகத்தான் இருக்க முடியும். அனைத்து வித கமெண்டுகளையும் அசால்ட்டாக கடந்து செல்லும் தர்ஷா, ஒரு சில நல்ல கமெண்டுகளுக்கு ரிப்ளை செய்யவும் தவறுவதில்லை. அப்படி இவர் ரிப்ளை பண்ணுவதாளோ!என்னவோ? 'ரிப்ளை பண்ணுங்க தர்ஷா' என்ற கமெண்டுகளே இவரது கமெண்ட் பாக்ஸ்களை பெருமளவு ஆக்கிரமித்து வருகிறது. ஒரு ஹாய் மட்டும் சொல்லுங்க என்று இவரிடம் ரிக்வெஸ்ட் வைத்து காத்திருப்பவர்களின் கண்ணீர் எமோஜி கமெண்ட் பாக்ஸ்களையே மூழ்கடித்து விடும் போல.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+