சொட்ட சொட்ட வெட்கத்தை சிந்தியபடி.. பரவசப்படுத்தும் தர்ஷனா!
சென்னை: காதோரம் லோலாக்கு கவிதை பாட ஜீ தமிழில் செல்ல மகளாக வலம் வந்து கொண்டிருக்கும் தர்ஷனா வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் காதல் ரசம் சொட்ட சொட்ட கொஞ்சி வருகின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நீ தானே எந்தன் பொன் வசந்தம் சீரியலில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கும் தர்ஷனா தற்போது இன்ஸ்டாகிராமிலும் கலக்கியிருக்கிறார்.
இவருடைய லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் கமெண்ட்ல லவ் ப்ரொபோஸ் கொடுத்து வருகின்றனர்.

அனு கேரக்டர்
இந்த சீரியலில் இவர் அனு கேரக்டரில் கச்சிதமாக செட் ஆகிவிட்டார். முதல் சீரியலில் இந்த அளவிற்கு இவர் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடிப்பார் என இவரை நினைத்து பார்த்திருக்க மாட்டார் அந்த அளவுக்கு ரசிகர்கள் இவரை ரசிக்க ஆரம்பித்து விட்டனர். சினிமாக்களில் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என வீட்டில் இவர் கூறியபோது இவரது வீட்டில் துளி கூட சம்மதம் தெரிவிக்காமல் இந்த பீல்ட் வேண்டாம் என அனைவரும் கூறியிருக்கின்றனர்.

டாக்டர் நடிகை
குடும்பத்தில் யாருமே இந்தத் துறையில் இல்லாமல் இருந்தாலும் இவருடைய தந்தை ஒரு மருத்துவர் அதனால் இவரும் மருத்துவராக வேண்டும் என வீட்டில் அனைவரும் இவருக்கு அறிவுரை கூறி வந்தநிலையில் எல்லாத்துக்கும் ஓகே சொன்ன இவர் அவர்களின் ஆசையும் நிறைவேற்றிவிட்டு தன்னுடைய ஆசைக்கு மாடலிங்கில் வீட்டிற்கு தெரியாமல் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .

நடிப்பு மீது மோகம்
மாடலிங்கில் இவருக்கு இருந்த திறமையை பார்த்து அதுவும் நடிப்பின் மீது இருந்த மோகத்தை பார்த்து இவருக்கு இந்த சீரியலில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் ஒரு டாக்டர் படிப்பை முடித்ததும் இவருடைய தந்தை இவருக்காக ஒரு கிளினிக்கை வைத்துக் கொடுத்தருக்கிறார் .அந்த நிலையில்தான் தான் இந்த சீரியலில் நடிக்கப் போகும் விஷயத்தை கூறியிருக்கிறார்.

ஆசைக் கனவு
முதலில் முடியவே முடியாது என கூறிய பெற்றோர் பிறகு இவருக்கு இருந்த வைராக்கியத்தையும் ஆசை கனவினை புரிந்துகொண்டு அரைமனதோடு ஓகே கூறியிருக்கின்றனர். ஆனால் தற்போது இவர் இந்தத் துறையில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர் .ஜீ தமிழில் செல்ல மகளாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு இந்த சீரியலுக்காக தற்போது விருதுகள் கிடைத்த போதிலும் இவருக்கு சினிமாக்களில் தான் சாதிக்க வேண்டும் என ஆசையோடு காத்திருக்கிறார்.

காதல் கதை
நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் ஜீ தமிழில் டி ஆர் பி யில் முதலிடத்தில் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. இந்த சீரியலும் இதற்கு முன்பு பல சீரியல்கள் இதே போல வந்திருந்தாலும இந்த சீரியலை ரசிக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர் .இதில் 40 வயதில் உள்ள ஒரு ஆணுக்கும் இருபது வயதில் இருக்கும் பெண்ணுக்கும் உள்ள காதல் கதையை மையமாக கொண்டு இருக்கிறது.

போட்டோஷூட்
இதில் இவ்வளவு நாளாக அனு மட்டும்தான் சூரிய பிரகாஷ் மீது வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போது சூரிய பிரகாசும் தன்னுடைய காதலை தெரியப்படுத்தியதும் இந்த சீரியல் மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது .அனு கேரக்டரில் அப்படியே கேரக்டராகவே மாறி அதனால் தற்போது சீரியலை தாண்டி போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறார்.

அழகு என்றால் இதுதானா
அழகு என்றால் அது இது தானா என பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் வகையில் காதோரத்தில் லோலாக்கு அசைந்து ஆட வெட்கத்தோடு தலை குனிந்தபடி முகத்தில் புரலும் முடியை ஒற்றை விரலால் ஒதிக்கி பார்ப்பவர்கள் கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கும் அழகில் கலக்கிய தர்ஷனாவின் லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications