பாறை மீது தாவித் தாவி.. நினைத்துப் பார்த்து.. பெருமூச்சு விட்ட தர்ஷனா!
சென்னை: கடல் அலையின் அழகை ரசித்தபடி பாறை மீது துள்ளிக்குதித்து ரசிகர்களின் கண்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடி ஒரு வீடியோ போட்டுள்ளார் தர்ஷனா அசோகன்.
தர்ஷனா வின் லேட்டஸ்ட் வீடியோக்கள் தான் அவருடைய ரசிகர்களின் மத்தியில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலின் அனு தான் தற்போது இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக வலம் வருகிறார் .

காப்பி அடிக்கப்படும் கதை
பொதுவாக ஒரு கதையை காப்பி அடித்து பல சீரியல்களும் எடுத்து வருவார்கள். ஆனால் இந்த சீரியல் அடிக்கடி பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் வரும் கதையைப் போன்று இருந்தாலும் அதிலும் புதுமுகங்களை அறிமுகம் செய்து கலக்கி இருக்கின்றனர். இந்த சீரியலின் கதை 40 வயது இளைஞருக்கும் 20 வயது இளம் பெண்ணுக்கும் நடக்கும் காதலை மையமாகக் கொண்டது.

அனு கேரக்டர்
அதில் அனு கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கும் தர்ஷனா அசோகன் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். முதல் சீரியலில் பொதுவாக யாருக்கும் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்து விடுவதில்லை .ஆனால் இவருக்கு இந்த சீரியல் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது .அதுவும் குடும்பத் தலைவிகளின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார் .

இன்ஸ்டாவில் கலக்கல்
சீரியலில் தான் பெண்களை கவர்ந்தாச்சே இனி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்திலும் புகுந்து இளைஞர்களை கவர வேண்டும் என இணையத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து கொண்டிருக்கிறார் .அடிக்கடி போஸ்ட் போட்டு வரும் இவருக்கு சீரியல்களை தாண்டியும் சமூக வலைத்தளத்திலும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

பல் டாக்டர்
டாக்டருக்குப் படித்தவர் தர்ஷனா. படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லாமல் பலர் வேலை பார்த்துக் கொண்டிருப்பது போலத்தான் இவர் ஒரு பல் மருத்துவர். ஆனால் தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் .வீட்டில் ஆதரவு கிடைக்காத நேரத்திலும் கடும் எதிர்ப்பையும் மீறி மாடலிங்கில் காலூன்றி தற்போது சீரியல்களில் இளம் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தோடு வலம் வருகிறார்.

ஜெய் ஆகாஷுடன் நல்ல கெமிஸ்ட்ரி
இவருக்காகவே இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். இவருக்கும் இவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகர் ஜெய் ஆகாஷ்க்கு கெமிஸ்ட்ரி பொருத்தமும் இந்த சீரியலுக்கு ஒரு பிளஸ் பாயிண்டு தான். தற்போது சீரியல் ஷூட்டிங் நடைபெறுவதற்கு அனுமதி கிடைத்து இருப்பதால் மீண்டும் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம். இந்த நிலையில் ரணகளத்திலும் ரசிகர்களுக்கு கிளுகளுப்பு ஊட்டிருக்கிறார் இந்த லேட்டஸ்ட் வீடியோ மூலமாக.

கடற்கரையில் பெருமூச்சு
நடிகையாக மட்டுமல்லாமல் விளம்பர மாடலாகவும் மாடலிங் போட்டோஷூட் எடுத்து வரும் இவர் தற்போது கடல் அலைகளை ரசித்தபடி துள்ளிக் குதித்து ஓடும் மான் போல பாறை மீது ஏறி விளையாடிய பழைய வீடியோவைப் போட்டுள்ளார். அங்கேயே இங்கேயும் துள்ளி பார்க்கும் ரசிகர்களின் பார்வை எந்தப் பக்கமும் போகாமல் மொத்தமாக தன் மீது பதிய வைத்திருக்கும் இவருடைய லேட்டஸ்ட் வீடியோ இன்ஸ்டாகிராமில் அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டும் லைக் கமெண்ட்கள் மலை போல உயர்ந்தும் வருகின்றது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications