நான் செந்திலுக்கு மாமியாரா.. ரொம்ப யோசிச்ச தீபா.. பட் செம ஹிட்!
சென்னை: வயசானாலும் அழகும் ஸ்டைலும் கொஞ்சம்கூட குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நடிகை தீபா நேத்ரன் போட்டுள்ள போட்டோஸ் தாறுமாறாக வைரலாகியுள்ளது. பலரும் தீபாவை புகழ்ந்து தள்ளிக் கொண்டுள்ளனர்.
தொலைக்காட்சித் தொடர்களில் முக்கியப் பாத்திரங்களில் கலக்கி வருபவர் தீபா நேத்திரன். இவருடைய மணப்பெண் அலங்கார போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தீபா நேத்திரன் கேரளாவை சேர்ந்தவர், நடிகர் நேத்திரனின் மனைவி ஆவார். இவர் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

கவினின் அம்மா.. நட்சத்திரா மாமியார்
தமிழில் சரவணன் மீனாட்சி சீரியல் இவருக்கு ஹைலைட்டாக அமைந்தது. இந்த சீரியலில் கவினின் அம்மாவாக நடித்திருப்பார். நட்சத்திரா வின் மாமியாராக வந்திருப்பார். இந்த சீரியலில் இவருக்கு ரசிகர்களிடையே பெரும் பெயர் கிடைத்தது. இவரது கேரக்டர் ரசிகர்களிடம் நன்றாக பேசப்பட்டது. இதனால் இவருக்கும் ரசிகர்கள் உருவானார்கள் .இதனைத் தொடர்ந்து மீண்டும் நாச்சியாபுரம் சீரியலிலும் நட்சத்திராவின் அம்மாவாக நடித்தார்.

ரக்ஷாவின் அம்மா.. செந்தில் மாமியார்
இந்த சீரியலுக்கு நட்சத்திரா தான் தனக்கு அம்மாவாக இவர் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பி கேட்டு இவரை நடிக்க வைத்திருக்கிறாராம். அந்த அளவிற்கு முதல் சீரியலிலேயே அவர்களுக்குள் நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சீரியலில் ரக்ஷா வின் அம்மாவாகவும் செந்திலின் மாமியார் ஆகவும் நடித்திருந்தார் .இதில் செந்திலுக்கு மாமியார் கேரக்டரில் நடிக்க முதலில் ரொம்பவே யோசித்திருக்கிறார் .எப்படி அவருக்கு மாமியாராக நடிக்க என்று. பின்னர்தான் ஓகே சொன்னாராம்.

குடும்பம் போல
ஆனாலும் அந்த கேரக்டர் இவ்வளவு பேசப்படும் என்று அவர் எதிர்பார்க்கவில்லையாம்.. ரொம்ப சந்தோஷமாகி விட்டதாம். இந்த சீரியலில் அனைவருமே ஒரு குடும்பம் போல தான் பழகி இருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து இந்த சீரியலை ஒளிபரப்பாமல் நிறுத்திவிட்டது அனைவருக்குமே ஏமாற்றம்தான். மீண்டும் இரண்டாம் பாகம் எடுக்கும் போதும் இவரே நட்சத்திராவின் அம்மாவாக மீண்டும் நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முதல் பாகத்தில் நடித்த ரக்ஷா உடன் போட்டோஸ் எடுத்து அதை இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

என் மகள் தேவிம்மா
என் மகள் தேவிம்மாவுடன் என்று கூறி அவர் போட்டுள்ள அந்த போட்டோ வைரலாகியுள்ளது. இதைப்பார்த்த இந்த சீரியலின் ரசிகர்கள் கமெண்ட் மழைகளாக பொழிந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இது தான் என்னுடைய ஃபேமிலி என்றும் இவர் பதிவிட்டிருக்கிறார் .எனது குடும்பத்தை மீண்டும் சந்தித்து இருக்கிறோம் என்றும் பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் மீண்டும் ரக்ஷா இந்த சீரியலில் வருவாரா என்று கேட்டு வருகிறார்கள்.

மகள்களுக்கு செம டஃப்
அதுமட்டுமல்லாமல் இவருடைய மகள்களான அபி மற்றும் அஞ்சனா உடன் போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். தற்போது இவர் ஓணம் சேலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடி இவரும் இவரது மகள் அபியும் நடத்திய போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. பல ரசிகர்களும் இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு மகள் அழகா இவர் அழகா என்று கூறுமளவிற்கு இருவரும் அழகாக கலக்கி இருக்கிறார்கள் .

சூப்பர் டான்ஸர்
அது மட்டுமல்லாமல் அவருடைய கணவரும் மகளும் இணைந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் இல் பயங்கரமாக கலக்கியிருக்கிறார்கள். இவரது டான்ஸ் பார்த்து இவருக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். தீபா நேத்ரன் எப்பவுமே எல்லா சீரியல்களிலும், படங்களிலும் பாசிட்டிவ் கேரக்டரில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லையாம். இவரது கணவருக்கும் கூட நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க பிடிக்காதாம். மனைவியிடமும் அதையே சொல்லியுள்ளார்.

வில்லி மட்டும் வேண்டாம்
நேத்திரன் முன்பு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களும் இதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார் .அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த படத்தில் அவர் ஹீரோவுடன் இருந்து அவருக்கு குழி பறிக்கும் கெட்ட கேரக்டராக நடித்திருந்தார் .இதைப் பார்த்த ஒரு ரசிகர் இவரை பொது இடத்தில் சட்டையை பிடித்து இழுத்து விட்டாராம். இப்படி எல்லாம் பண்ணுனது நீ தானே என்று அப்பதான் தெரிஞ்சிட்டேன். தான் நடித்ததன் தாக்கம் எந்த அளவிற்கு ரசிகர்களிடம் இருக்கிறது என்று.

அசத்தல் தீபா
அதனால் தான் தன்னுடைய மனைவியையும் இந்த மாதிரி நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க கூடாது என்று நேத்திரன் கூறியிருக்கிறாராம். எல்லா கதாநாயகிகளும் போட்டி போட்டுக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருக்கும் போது அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று சீரியல்களில் தான் நாங்கள் அம்மாவாகவும் மாமியார் ஆகவும் நடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இணையதளத்தில் எங்களை வந்து பாருங்கள் என்று விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகிறார் தீபா.












Click it and Unblock the Notifications