தவறான ரூட்.. பப்ளிசிட்டிக்காக நடுரோட்டில் உட்கார்ந்த சோனா? பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கே: பிரபலம்
சென்னை: சோனாவுக்கு உண்மையிலேயே மேனேஜர் மூலம் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அதை பெரிதுபடுத்தி, தன்னுடைய படத்துக்கு அட்ராக்ஷன் வேண்டும் என்பதற்காக, தன்னுடைய படத்துக்கான புரமோஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக முயற்சிக்கலாம். அந்தவகையில், தர்ணாவை அறிவித்து, பப்ளிசிட்டி தேடி கொண்டுள்ளார் சோனா" பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
Aramnaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "சோனா தர்ணா போராட்டம் நடத்தியிருக்கிறார்.. சினிமாவில் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதையெல்லாம் தாண்டிதானே போகணும்.. நயன்தாரா அசால்ட்டா பிரச்னைகளை டீல் பண்றாங்களே? அத்துடன், புது புதுசா பிரச்சனைகளையே கிரியேட் பண்றாங்களே? இல்லையா?

சொந்த படம் எடுக்கும் சோனா
தற்போது "ஸ்மோக்" என்று சொந்த படம் எடுத்துள்ளார் சோனா.. பணத்தை போட்டிருக்கிறார். ஆனால், அந்த படத்தின் மேனேஜர், கண்டன்ட் இருக்கும் ஹார்ட் டிஸ்கை எடுத்து சென்றுள்ளார்.. அதை ஏன் அவர் எடுத்து சென்றார்? சும்மா இருப்பவர்களின் ஹார்ட் டிஸ்க்கை யாரும் எடுத்துச் செல்ல முடியாது.
மேனேஜர் - சோனாவுக்கும் இடையே என்ன தகராறு என்பதை பார்க்க வேண்டும்.. அது தெரியாமல் இதை பற்றி பேச முடியாது. சோனாவின் கன்டன்ட் உள்ள ஹார்ட் டிஸ்க்கை, மேனேஜர் எடுத்து செல்கிறார் என்றால், ஒரு தயாரிப்பாளராக அதை கண்டிக்க வேண்டும்.. தயாரிப்பாளர், டைரக்டர் உட்பட யாருக்காவது பட நிறுவனத்துடன் பிரச்சனை என்றால், ஒட்டுமொத்த ஷூட்டிங்கை நிறுத்துவது தவறானது. அதேபோல, தயாரிப்பாளரை தாண்டி, ஒரு மேனேஜர் ஹார்ட் டிஸ்க் எடுத்து செல்வது, அதைவிட தவறானது.
கண்டனத்துக்கு உரியது
ஹார்ட் டிஸ்க் தூக்கி சென்றதில் உண்மை இருக்குமானால், அது கண்டிக்கத்தக்கது. ஆனால், பெப்சி முன்பு சோனா ஏன் தர்ணா செய்து இருக்கிறார் என்றுதான் தெரியவில்லை. புரொடக்ஷன் மேனேஜர் மீது தவறு என்றால், அதற்கென உள்ள சங்கத்தில் சென்று புகார் தந்திருக்க வேண்டும். அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரலாம்.. இதையெல்லாம மீறி தர்ணா போராட்டம் ஏன் செய்கிறார் என்றால், ஒரு சோஷியல் அட்ராக்ஷன் சோனாவுக்கு தேவைப்படுகிறது,.
மீடியாவில் இதை பரபரப்பாக பேசணும்னு சோனா நினைக்கிறாங்க.. இத்தனை வருடம் இல்லாமல், சமீபகாலமாக சோனா நிறைய பேட்டிகளை தந்து வருகிறார்.. அந்த பேட்டிகளில் சர்ச்சைகளான விஷயங்களையே பேசியிருக்கிறார். அந்தவகையில், இந்த விஷயத்திலும் சர்ச்சையை கிளப்பி அல்லது மக்களின் கவனத்தை தன்மீது குவிக்க முயற்சிக்கிறார் என்றே தெரிகிறது.
பப்ளிசிட்டி - சோனா
முறைப்படி சோனாவுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால், தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தந்திருக்கலாம். இதுதான் ஒரு தயாரிப்பாளராக சோனா செய்திருக்க வேண்டும்.. நடுரோட்டில் உட்கார்ந்து தர்ணா செய்வது, கவனத்தை தன்மீது திருப்புவதற்காகத்தான்.
சோனாவுக்கு உண்மையிலேயே மேனேஜர் மூலம் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அதை பெரிதுபடுத்தி, தன்னுடைய படத்துக்கு அட்ராக்ஷன் வேண்டும் என்பதற்காக, தன்னுடைய படத்துக்கான புரமோஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக முயற்சிக்கலாம். அந்தவகையில், தர்ணாவை அறிவித்து, பப்ளிசிட்டி தேடி கொண்டுள்ளார் சோனா.












Click it and Unblock the Notifications